Daily Archive: January 4, 2018

விளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்

    இவ்வாண்டுக்கான விளக்கு விருது கவிஞர் சமயவேலுக்கும் நாவலாசிரியரும் இலக்கியக் கோட்பாட்டாளருமான ராஜ் கௌதமனுக்கும் கிடைத்திருக்கிறது.   ராஜ் கௌதமன் தமிழிலக்கியச் சூழலில் முக்கியமான இலக்கிய ஆய்வுநூல்களை எழுதியவர். என் மதிப்பீட்டில் தமிழ்ப் பண்பாட்டில் சில அடிப்படைக் கருத்துநிலைகளின் உருவாக்கத்தை வகுக்க முற்படும் அவருடைய  பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் ஆகிய இருநூல்களும் முக்கியமானவை. தமிழாய்வின் செவ்வியல்படைப்புக்கள் என்றே அவற்றைச் சொல்வேன்.   ராஜ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105381/

சிகரெட் புகையும் ,தபால் கார்டும்   -கிருஷ்ணன்

”இப்போதைய இளம் எழுத்தாளர்களிடம் ஒரு  போலியான தெளிவு இருக்கிறது இது இலக்கியத்திற்கு உகந்ததல்ல, ஒரு எழுத்தாளனிடம் கதையை முடிக்க இயலா தத்தளிப்பு இருக்கும் தெளிவிருக்காது, எழுதியபிறகுதான் தெளியத்  துவங்கும் ”  அணைந்து கொண்டிருக்கும் சிகரெட்டில் இருந்து இன்னொன்றை பற்றவைத்துக் கொண்டு தேவி பாரதி இதை கூறினார்.   கடந்த 2017 டிசம்பர் 30,31 சனி, ஞாயிறு  ஆகிய இரண்டு நாட்கள் தேவி பாரதியை அவரது வெள்ள கோயில் இல்லத்தில் நமது விஷ்ணுபுரம்  நண்பர்ளுடன் சந்தித்து  உரையாடினோம். அவரது நிழலின் தனிமை, பிறகொரு இரவு போன்ற படைப்புகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105368/

என்றென்றும் யானைகள்- கடலூர் சீனு

  ஒரு யானையை , அதன் உயிரின் இறுதி துடிப்பும் அடங்கும் வரை ,அணு ஆணுக்காக சித்ரவதை செய்து அதை கொல்ல சிறந்த வழி ,அதன் வாயில் வெடி வைப்பது .   கர்நாடகாவின் நாஹர் ஹொலே  வனப் பகுதியில்  அப்படிக் காயமடைந்து திரியும் யானை ஒன்றை பின்தொடர்கிறார் சூழலியலாளர் ராமன் சுகுமார். பொதுவாக  அங்கு  வயலை துவம்சம் செய்ய வரும் வன மிருகங்களுக்கு ,[குறிப்பாக காட்டுப் பன்றி ],  பழத்தில் வெடி வைத்து பொறி  அமைப்பார்கள் . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105375/

வைரமுத்து,ஞானபீடம் -கடிதங்கள் 2

வைரமுத்துவுக்கு ஞானபீடமா? வைரமுத்து – எத்தனை பாவனைகள்!   சார்,   சமீபத்திய உங்கள் இரு கட்டுரைகள் ‘புதிய இருள்’ மற்றும் ‘வைரமுத்துவுக்கு ஞானபீடமா’ பெரும் நிறைவையும், உத்வேகத்தையும் அளித்தது. அறம் செய்ய மட்டுமல்ல, அறம் தோற்று அநீதி நடக்கும் போது அதற்கு எதிராக போராடுவது மிக மிக அவசியமான ஒன்று என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதோடு, செய்து காட்டிக்கொண்டும் வருகிறீர்கள். உங்கள் வாசகனாய் பெருமிதம் கொள்கிறேன். என் கோபம் தவறு செய்பவர்கள் மேல் இல்லை ஏனேனில் அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105359/

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–19

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 2 உபப்பிலாவ்யத்தின் சிறிய கோட்டையை அணுக அணுக விஜயை விந்தையானதோர் எக்களிப்பை அடைந்தாள். தன்னுள் எழுந்துகொண்டிருப்பது உவகை என்றுகூட அவள் முதலில் அறியவில்லை. “மிகச் சிறிய கோட்டை, அது கோட்டைதானா?” என்றாள். அபயை “கோட்டை என்பது ஒரு பொதுப்புரிதல்தான், அரசி. காவலர்கள்தான் மெய்யான கோட்டை” என்றாள். விஜயை “இது ஒரு வேலி… வெறுமனே மண்ணை அள்ளிவைத்து கட்டியிருக்கிறார்கள்” என்றாள். “இது விராடர்களின் வட எல்லைக் காவலரண் மட்டுமே… காலப்போக்கில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105348/