Daily Archive: January 2, 2018

ஈழ இலக்கியச் சூழலில் இருந்து ஒரு கேள்வி

  அன்புள்ள ஜெயமோகன்   இது முகநூலில் டி.செ.தமிழன் என்னும் இலங்கை எழுத்தாளர் எழுதியது. 888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888 மதிப்பீடுகளின் வீழ்ச்சி —————————————— மீண்டு/ம் வந்திருக்கும் அனோஜனால் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது உரையைக் கேட்டேன். ஜெயமோகன் இயல்பாய் இல்லாததுபோல அவரது உடல்மொழி பேச்சில் இருந்தது. எனக்குத் தெரிந்த ஜெமோ வழமையாக இப்படி அவ்வளவு நாடகீயத்தனத்தோடு உரையாற்றுபவரில்லை. சிலவேளை சினிமாப் பிசாசு அவரை இன்றைய காலங்களில் விழுங்கிக்கொண்டு இருக்கின்றதோ தெரியாது. இலங்கைப் பாஷை பேசுகின்றேன் என்று எங்கள் தமிழை இப்படிக் கொன்றிருக்கவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105022/

பிறிதொரு வாழ்த்து

2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்   கடகடவென எழுதி முடித்தப்பின் இவ்வருட தொடக்கம் மத்தி இறுதி என உங்களைச் சந்தித்துக்கொண்டே இருந்திருக்கிறேன். புத்தாண்டு வாழ்த்துகள்   நவீன்   அன்புள்ள நவீன், சற்றுமுன் சுரேஷ் பிரதீபுக்கு ஒரு புத்தாண்டு மறுமொழியில் இவ்வாறு சொன்னேன். தயங்காமை, பெரிய கனவுகளை நோக்கியே சென்றுகொண்டிருத்தல், ஒவ்வொருநாளும் இலக்கியத்திற்குள் இருத்தல் ஆகிய மூன்று குணங்கள் அமைக என்று. அம்மூன்று குணங்களும் உங்களிடம் நிறையவே உள்ளன.   ஆனால் குறைவது ஒன்றுண்டு, புனைவிலக்கியம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105322/

ஒரு வாழ்த்து

அன்புடன் ஆசிரியருக்கு     இவ்வாண்டும் உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லியபடியே தான் தொடங்கியது. 2016- ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்திருந்த பரவசத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லியிருந்தேன்.   மிகச்சிறப்பாக உத்வேகம் அளிக்கக்கூடிய ஆண்டாக 2017 தொடங்கியது. ஒளிர்நிழல் அப்போது எழுதிக் கொண்டிருந்தேன். சு.வேணுகோபால் பற்றிய போட்டி அறிவிப்பு மனதில் ஒரு பதற்றத்தை உருவாக்கியது. விஷ்ணுபுர விழாவில் கலந்து கொண்டபோது பல சிறந்த வாசகர்களை சந்தித்திருந்ததும் என் பதற்றத்தையும் தயக்கத்தையும் அதிகப்படுத்தியது. தள்ளிப்போட்டுக் கொண்டே வந்து சு.வேயின் நூல்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105309/

தூய்மை!

உபியில் ஸ்வச் பாரத்க்கிற்காக கட்டப்பட்ட கழிவறைகள் இப்பொழுது கிடங்குகளாக பயன்படுத்தப்படுகின்றன. இப்படி மக்கள் இருக்கையில் என்ன செய்ய முடியும் https://www.quora.com/Has-the-Swachh-Bharat-mission-failed-in-India/answers/68085549?srid=tiqZ   ராம குமரன்   வணக்கம் ஜெ, ‘தூய்மை பாரதம்’ (http://www.jeyamohan.in/103638) பதிவில் என் கடிதத்திற்கு பதில் தந்திருந்தீர்கள். இந்தத் திட்டத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இந்தியா போன்ற சுகாதர பிரக்ஞை குறைவாக உள்ள நாட்டில் இது புரிந்துகொள்ளக் கூடியதே. குப்பைகளை ஊருக்கு வெளியில் கொண்டு கொட்டுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105292/

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–17

பகுதி இரண்டு : பெருநோன்பு – 11 அசலை தணிந்த குரலில் “தந்தையே” என்றாள். அச்சொல் திருதராஷ்டிரரில் மெல்லிய அதிர்வை உருவாக்கியது. “நான் என் சொற்களை சொல்லலாமா?” திருதராஷ்டிரர் “சொல்” என்பதுபோல கையசைத்தார். “தந்தையே, உங்கள் மைந்தர் ஒருவர் மிச்சமின்றி களம்படுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா?” என்றாள் அசலை. திருதராஷ்டிரர் உடல் விதிர்த்தது. “அக்காட்சிகளை கனவில் காண்கிறீர்கள் அல்லவா?” அவர் கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர நெஞ்சு மூச்சில் அசைய அமர்ந்திருந்தார். “உங்களால் முடிந்திருந்தும் போரைத் தடுக்கவில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105284/