Monthly Archive: January 2018

அணையாவிளக்கு

சமீபத்தில் ஒரு சிறிய நண்பர் குழாமில் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் எல்லாம் அதிகம் வாசிக்கும் பழக்கமற்ற நண்பர்கள், ஆனால் உண்மையாகவும் தீவிரமாகவும் சமூகக் களப்பணியாற்றக்கூடியவர்கள். ஊடகம் பற்றி பேச்சுவந்தது. நான் இந்தியச்சூழலில் எந்த ஒரு ஊடகமும் உண்மையான சுதந்திரத்துடன் செயல்பட முடியாதென்றும், ஊடகவியலாளர்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்பும் சுதந்திரம் என்பது ஒரு மாயையே என்றும் சொன்னேன். உதாரணமாக எந்த ஊடகவியலாளரும் மதுரை தினகரன் அலுவலகத்தில் நிகழ்ந்த கொலையைப்பற்றி இன்று எழுதிவிடமுடியாது. அடித்தால் அலறுவது எந்த உயிருக்கும் உள்ள உரிமை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31402

வாழ்க்கையிலிருந்து பேசுவது…

  லட்சுமி மணிவண்ணனை சமீபத்தில் சந்தித்த காலம் செல்வம் சொன்னார்,  ‘2000 தமிழ்இனி மாநாட்டிலே சந்திக்கையிலே சாத்தான் மாதிரி இருந்தவர், இப்ப ஏசு மாதிரி இருக்கிறவர்’ . நான் புன்னகைத்துக்கொண்டேன்.   லட்சுமி மணிவண்ணனை எனக்கு இருபத்தைந்தாண்டுகளாகத் தெரியும். அவர் துடிப்பான இளைஞராக பள்ளம் சிற்றூரில் இருந்துகொண்டு சிலேட் என்னும் சிற்றிதழை நடத்திக்கொண்டிருந்தார். அதற்கு நான் ஒரு கடிதம் எழுதினேன், அதன் போதாமைகளைச் சுட்டிக்காட்டியிருந்தேன். மூர்க்கமாக எதிர்வினையாற்றியிருந்தார்.   பின்னர் அவரைச் சுந்தர ராமசாமி இல்லத்தில் சந்தித்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106288

உப்புவேலி, இலக்கிய முன்னோடிகள் -கடிதங்கள்

RoyMoxham (1) வணக்கம்,   ராய் மாக்ஸாம் எழுதி சிறில் அலெக்ஸ் மொழிபெயர்த்த ”உப்பு வேலி” நூல் தற்போது எங்கும் கிடைக்கவில்லை. எழுத்து பதிப்பகத்தையும்  தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது நடந்து கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லவிருக்கிறேன். அங்கு எங்காவது இந்நூல் கிடைக்குமா ? பழைய நூலாக இருந்தாலும் யாரிடம், எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்பதை தயவு செய்து தெரிவிக்க வேண்டுகிறேன்.   விவேக்   அன்புள்ள விவேக்   உப்புவேலி மறைந்த நண்பர் அலெக்ஸ் அவர்களால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106267

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–46

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 4 அஸ்தினபுரியின் தென்கிழக்கில் அமைந்திருந்த இந்திரமுற்றத்தில் மரப்பட்டைகளாலும், முடைந்த ஈச்சைஓலைகளாலும், மூங்கில்களாலும் நீள்வட்டமான மாபெரும் பொதுப்பேரவை அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரம் தூண்களின் அவை என்று அதை ஏவலர் சொன்னார்கள். செவ்வரக்கு பூசப்பட்ட ஆயிரத்தெட்டு பெருமரத்தடிகள் ஆழ நிலைநிறுத்தப்பட்டு அவற்றை கால்களாகக்கொண்டு அந்த அவைக்கூடம் எழுப்பப்பட்டிருந்தது. இரண்டு வாரை உயரத்தில் பன்னிரண்டு மரப்படிகளுக்குமேல் நிரந்த மரத்தாலான அடித்தளத் தரையின்மேல் மூன்றடுக்கு மரவுரி பரப்பப்பட்டு ஓசையழிவு செய்யப்பட்டிருந்தது. அவைக்குள் தூண்கள் ஏதும் இல்லாமலிருக்கும்பொருட்டு வட்டவிளிம்பில் நின்றிருந்த பெருந்தூண்களிலிருந்து கிளம்பி மையத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106313

சொல்லப்படாத அத்தைகள்

  புனைவெழுத்தாளனுக்கு தமிழில் உள்ள மிகப்பெரிய இடர் என்பது அவன் எழுதவேண்டிய மூலப்பொருள் இங்கே கிடைப்பதில்லை என்பதுதான். பலர் சொல்வதுபோல எழுத்தாளனின் சொந்த வாழ்வனுபவங்களில் இருந்து மட்டும் நேரடியாக இலக்கியம் பிறக்க முடியாது. ஏனென்றால் ஆழமான, கொந்தளிப்பான வாழ்வனுபவங்கள் எவருக்கானாலும் மிகக்குறைவே, என்னைப்போல அனுபவங்களுக்காக அலைந்துதிரிந்துகொண்டே இருக்கும் எழுத்தாளனுக்குக் கூட.   எல்லைக்குட்பட்ட தனிமனித அனுபவங்களில் இருந்து மிகக்குறைவாகவே இலக்கியத்தை உருவாக்கமுடியும். அவ்வனுபவங்களை விரித்து பிற அனுபவங்களுடன் இணைத்துப் பின்னி விரித்து வரலாறுக்கு நிகரான மாற்றுப்பரப்பாக ஆக்குவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106256

குடியரசு தினம் என்பது என்ன? ஏன் கொண்டாட வேண்டும்?

குடியரசு தினம் என்பது என்ன? ஏன் கொண்டாட வேண்டும்?   அரவிந்தன் கண்ணையன் எழுதிய இந்தக்கட்டுரை உணர்ச்சிகரமான மொழியில் இந்திய அரசியல் சாசனம் உருவாகிய முறையையும் அதன் பின்னுள்ள உணர்வுகளையும் கனவுகளையும் பேசுகிறது. நான் அமெரிக்கா சென்றபோது அரவிந்தன் கண்ணையனுடனும் பிற நண்பர்களுடனும் அமெரிக்கச் சுதந்திரப்போர் நிகழ்ந்த இடங்களையும் குடியரசுக்கான அடிப்படை அறிவிப்புகள் விடுக்கப்பட்ட சில இடங்களையும் பார்க்கச்சென்றிருக்கிறேன். அமெரிக்கா என் நாடு அல்ல. ஆனால் ஒவ்வொரு முறையும் உணர்வெழுச்சி அடைந்து கண்ணீர் மல்கியிருக்கிறேன்.   ஏனென்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106326

கலைகளின் மறுமலர்ச்சி

சீனிவாசன் நடராஜன் அவர்களின் அச்சப்படத்தேவையில்லை கலைவிமர்சன நூலின் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரை.  

Permanent link to this article: https://www.jeyamohan.in/106307

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–45

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 3 அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டைவாயிலின் பெருமுற்றத்தின் கீழ்எல்லையில் அமைக்கப்பட்டிருந்த மரப்பட்டைக் கூரைக்குக் கீழே பானுமதி அரசணிக்கோலத்தில் நின்றிருந்தாள். அவளுக்கு வலப்பக்கம் அசலையும் அவளருகே தாரையும் நின்றிருக்க இடப்பக்கம் அணுக்கச்சேடி லதையும் செவிலியரும் நின்றனர். பின்புறம் அகம்படிப் பெண்டிர் பேழைகளும் கூடைகளுமாக நிரைகொண்டிருந்தனர். விண்மூடியிருந்த கருமுகில்களிலிருந்து ஒளித்திவலைகளென பெய்திறங்கிய சாரலில் நனைந்த முற்றம் ஓடிநின்ற புரவியின் உடற்பரப்பு என மெல்ல சிலிர்த்துக்கொண்டிருந்தது. அவர்களுக்கு வலப்பக்கம் அஸ்தினபுரியின் கைவிடுபடைகளின் ஏந்திக் கூர்ந்த அம்புகளின் முனைகளில் இருந்து நீர்த்துளிகள் சொட்டின. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106231

இயற்கையை அறிபவனின் அறம்

  ஆசிரியருக்கு , நாம் 3 ஆண்டுகளுக்கு முன் குன்னூரில் ஒரு வனப்பயணம் போயிருந்தோம், அப்போது காலை நடைக்குக் கிளம்பும் முன் ஒரு மலபார் அணிலைப் பார்த்தோம். நான் இயற்கை மற்றும் அத்வைதம் குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். நீங்கள் D.H. Lawrence ” இந்துக்கள் மகிழ்ச்சியானவர்கள், அவர்களின் மதச் சடங்குகளிலும் அன்றாட வாழ்விலும் இயற்கை இணைந்துள்ளது, உதயம் -அஸ்தமனம் -சந்த்யா வந்தனம் போல , இயற்கையை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்கள் மகிழ்ச்சியானவர்கள் ” எனக் கூறி உள்ளார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31237

கடிதங்கள்

அன்பின் ஜெ,   வணக்கம்.   புதியவர்களின் சிறுகதைகள் பற்றிய விவாதம் தொடங்கியதும் இலக்கியம் தொடர்பாக உரையாடும் நண்பர்களை உள்ளடக்கிய எங்கள் வாட்சப் குழுவில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தினமும் காலையில் ஒரு சிறுகதையை வாசிப்பது. நாள் முழுவதும் அதை அசைபோட்டு, நண்பர்களுக்கிடையே விவாதித்து, முடிந்தவரையில் அவற்றைப் பற்றி எழுதியும் விட வேண்டும் என்றெண்ணியே செயல்பட்டோம். சங்கர் உங்களுக்கு எழுதிய கடிதத்தைவிட இன்னும் காத்திரமாகவே எங்களுடன் உரையாடினார். அதன் தொடர்ச்சியாகவே கதைகளைப் பற்றிய எங்களுடைய கடிதங்களும் உங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106238

Older posts «