Daily Archive: December 8, 2017

மீட்சி
  எழுதழல் முடிந்ததும் சிலநாட்களிலேயே அடுத்த நாவலை ஆரம்பித்துவிட்டால் பதினேழாம் தேதி சரியாக வெளியிடத் தொடங்கிவிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் எம்.எஸ்.அவர்களின் மரணம் பலவற்றையும் குலைத்துப்போட்டுவிட்டது. இறப்புச்செய்திகளின்போது பொதுவாக பெரிதாக ஒன்றும் தோன்றுவதில்லை. எம்.எஸ்.நிறைவாழ்க்கை வாழ்ந்தவரும்கூட. ஆனால் இறப்புக்குப்பின் ஆழத்தில் ஒரு கலங்கல் நிகழ்கிறது. இரவுகளில் விழிப்பு வந்து நினைவுகள் அறுத்துக்கொள்கின்றன. முகபாவங்களும் சொற்களுமாக காட்சிகள் ஓடுகின்றன. எம்.எஸ் மறைந்த அன்றுமாலை நிலைகொள்ளாமலிருந்தேன். அன்று திருக்கார்த்திகை வேறு. அருண்மொழியும் அஜிதனுமாக ஒரு மாலைநடை சென்றுவந்தேன். மறுநாள் மனநிலை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104397

எனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்- சிவமணியன்
படைப்புலகிற்குள் நுழைந்து பல்வேறு கதைகளங்ளில் கதை கூற முயன்று கணிசமாக வெற்றியும் பெற்றிருக்கும் புதிய படைப்பாளிக்கு, அவரின் வருங்கால படைப்புகளை வாசிக்க எதிர்நோக்கியிருக்கும் ஒரு வாசகனாக என் வாழ்த்துக்கள்.    விஷால் ராஜா – சிறுகதை தொகுப்பு – எனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/104384

விடுபட்டவை
இனிய ஜெமோவிற்கு, வணக்கங்கள். நலமா? பிரயாணங்களின் ஏற்படும் ஒரு க்ஷண அனுபவமானது அம்முழு பயணத்தையும் பசுமைப்படுத்துவதாக அமைகிற இவ்வரிகள்… “அந்திச்சூரியன் உருகி உருகி பொன்னென்றாகி அமிழ்ந்துகொண்டிருந்தது.நாளெல்லாம் கண்ட பொன்னிறத்தின் விண்தோற்றம். மண்ணைப் பொன்னாக்குகிறது ஒளி. பொன் என்பது ஒரு பொருள் அல்ல. வெறும் செல்வம் அல்ல. அது வாங்கும் பொருட்கள் எவையும் அதற்கு நிகர் அல்ல.தோன்றிய நாள்முதல் மானுடன் அதன் மேல் கொண்ட பித்து அது நாணயம் என்பதனால் அல்ல.பொன் பருப்பொருளில் விரிந்த தழல். உலோகங்களில் அது …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104339

எம்.எஸ். அஞ்சலி – கே.என்.செந்தில்
  எம்சு.எஸ்ந்த அர ராமசாமியைச் சந்திக்கச் சென்ற 2002-03இல் எம்.எஸ்ஸுடன் அறிமுகம் ஏற்பட்டது. காலையிலோ, மாலையிலோ அங்கு வந்துவிடுவார் என்று பின்னர் அறிந்தேன். குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டிருந்தவரைக் கண்டு சு.ராவிடம், “இவரு யாரு சார்?” என்று கேட்டேன். மென்மையாகச் சிரித்தபடி அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த வயதுக்கேயுரிய வெகுளித்தனத்துடன் “எங்கிருந்து வர்றாரு..?” என்றேன். “இங்க பக்கத்துல திருப்பதிசாரம்னு ஊர். அங்க ஒரு நல்ல லைப்ரரி இருந்தது. நாம எந்தப் புத்தகம் கேட்டாலும் எடுத்துக்கொடுக்கற அளவுக்கு அதைப் பத்தி …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104393