Daily Archive: December 6, 2017

உரிமைக்குரல்
  இந்தியாவின் சமகால அவலங்களில் ஒன்று, பொறுப்பின்மையையும் ஊழலையும் மெல்லமெல்ல இயல்பாக ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்பது. சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுமருத்துவமனையில் லஞ்சம் பெற்றுக்கொண்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிகளைக் கண்டித்து ஊழியர்கள் நாகர்கோயிலில் ஒர் ஆர்ப்பாட்டம் நடத்தியதை கண்டேன். ஆசிரியர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வராததை கண்டித்த கல்வியதிகாரியைக் கண்டித்து ஆசிரியர் அமைப்புக்கள் நடத்திய போராட்டத்தைப் பற்றி எழுதியிருந்தேன்.   இப்போது சிலைத்திருட்டுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளைக் தண்டிக்கக்கூடாது, பணிப்பாதுகாப்பு வேண்டும் என்று கோரி அறநிலையத்துறை அதிகாரிகள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104346

தூயனின் ’இருமுனை’ -நாகப்பிரகாஷ்
இயல்பாகவே தூயனுடைய ஒவ்வொரு சிறுகதையும் இரண்டு கதைகளாக விரிவாக்கப்படும் சாத்தியம் கொண்டவை. ஒன்று கதை சொல்லியின் தனிப்பட்ட வாழ்கை, மற்றது நிகழ் சம்பவங்களின் தொகுதி. அல்லது கதை நிகழ்வதற்கான ஆதார உந்துதல் எங்கிருக்கிறது என்ற கேள்வி வரும்போது, அதுவே தனியொரு கதையாக வளருவதற்கான காரணங்களை கொண்டிருக்கிறது. அடர்த்தியாக, நுண்தகவல் கொண்டு கதையை சொல்லிச் செல்வதால் அவருடைய கதைகளின் பலம் அதுவாகவே இருக்கிறது. மொழிக் கூர்மையும், சிறுகதை வடிவம் கைவந்தவருமான ஒருவரின் படைப்புகளை வாசிக்கிறோம் என்று புரிந்துகொள்ள சிரமமாக இருக்காது. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104344

சீ முத்துசாமியின்’மண்புழுக்கள்’- பச்சைபாலன்
மலேசிய எழுத்தாளர்களில் சீ.முத்துசாமி தனித்து அடையாளங்காணக்கூடிய மாறுபட்ட படைப்பாளி. வழக்கமான கதை சொல்லும் பாணியிலிருந்து விலகிக்கொண்டு தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதிலே பயணிப்பவர். நான் ஐந்தாம் படிவத்தில் பயின்ற காலத்தில் தமிழ் நேசன் நாளிதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசுபெற்ற அவரின் ‘சிறகுகள் முறியும் மானுடக் கனவுகள்’ குறுநாவல் அந்நாளிதழில் தொடராக வெளிவந்தது. அதைப் படித்தேன். எனக்குப் பழக்கமான தோட்டப்புறச் சூழலை மையமிட்ட நாவல் என்பதால் என்னை அது மிகவும் கவர்ந்தது. வாசிப்பின் ருசியை நான் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104304

யானையுலகம்
  அன்புள்ள திரு ஜெயமோகன் வாட்ஸ் அப்பில் உலவும் இந்தப் படங்களை ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். முதல் படத்தில் குழியில் விழுந்த யானைக்குட்டியைக் காப்பாற்றுகிறார்கள். இரண்டாவது படத்தில் யானைக்கூட்டம் குட்டியைப் பாச‌த்துடன் அழைத்துச் செல்கிறது. அதில் ஒரு யானை காப்பாற்றியவர்களுக்கு நன்றி சொல்கிறது. தங்களின் யானை டாக்டர் கதையும் அதைத்தொடர்ந்து நிகழ்ந்த விலங்குகளின் உணர்வுகள் குறித்த விவாதமும் மறுபடியும் நினைவுகளை நிரப்பிவிட்டன. ஏ. நிக்கோடிமஸ் கோயம்பத்தூர்   அன்புள்ள நிக்கோடிமஸ் அவர்களுக்கு,   மனிதவரலாற்றில் எப்போதுமே இன்றிருந்ததுபோல …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104373