Daily Archive: December 2, 2017

நாகர்கோயிலில் புயல்
  நவம்பர் 29 அன்று கிளம்பி  கோவை சென்றேன். நாஞ்சில்நாடன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி.  அன்னபூர்ணா ஓட்டலில் தங்கியிருந்தேன். கோவை நண்பர்கள் அனைவரும் உடனிருக்க இரண்டுநாட்கள் தொடர் உரையாடல். ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன். அந்தியூர் மணி , மணவாளன், பாரி வந்திருந்தார்கள். . பெங்களூரிலிருந்து ஏ.வி. மணிகண்டன் வந்திருந்தார் கோவையில் இருக்கும்போதே நாகர்கோயில் ஓகி புயல் எழுந்த செய்தி வந்தது. செல்பேசிகள் செயலிழந்தன. அருண்மொழியை தரைத்தொடர்பு  தொலைபேசி வழியாகத்தான் தொடர்பு கொள்ள முடிந்தது. இருபதாண்டுகளுக்கு முன்பு சாம் பிட்ரோடா …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104266

எரிகல் ஏரியின் முதல் உயிர்
  கடலூர் சீனு எங்களுக்கும் ஓர் ஆறுண்டு ஆற்றுக்கோர் ஊருண்டு ஊருக்கோர் சனமுண்டு வாழ்வைப்போல் ஒன்றுண்டு… இளங்கோ கிருஷ்ணன் சீ. முத்துசாமி குறுநாவல் ஒன்றினில் ஒரு பாட்டா வருகிறார். சயாம் ரயில்பாதை பணியில் வேலை பார்த்து, குற்றுயிராய்க் கிடந்தது பிழைத்து வந்தவர்.  இன்று இளையவர்களுக்கு அவர் சொல்லும் கதைகளில் ஒன்று, அவர் நேதாஜியை பார்த்தது. நேதாஜி ரயிலில் போகும் போது பார்க்கிறார். கம்பீரமாக இருக்கிறார். லட்சியவாதத்தின், கனவின் முகம். இதை விவரிக்கும் பாட்டா, அந்த ரயில் பாதை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104208

யானை டாக்டர் -கடிதம்
அன்புள்ள ஆசானுக்கு,   நலம் தானே?   நானும் மஹேஸ்வரியும் தங்களது வாசகர்கள் என்பது குழந்தைகள் அறிந்ததே. அவ்வப்போது சில சிறுகதைகளையும், வெண்முரசின் பகுதிகளையும் கதைகளாகக்  கூறுவதுண்டு. குறிப்பாக எட்டு வயது ஸ்ரீராமுக்கு சாகசக் கதைகளும், விலங்குகள் நடமாடும் கதைகள் மீதும் மேலதிக ஆர்வமுண்டு. தமிழ் எழுதவும் படிக்கவும் இங்குள்ள ஒரு தமிழ் பள்ளி மூலம் கற்றுக்கொள்ளத் துவங்கி இருக்கிறான். கதைகளை நாங்களே வாய் மொழியாகக் கூறுவதிலிருந்து அடுத்த படி நிலையாய் வாசித்தால் என்ன என்று தோன்றியது. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104174

ஈழ இலக்கியம் -கடிதங்கள்
    சேய்மையிலிருந்து ஒரு மதிப்பீடு   அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு.   ஈழ இலக்கியம் விமர்சன நூல் பற்றிய பதிவை பார்த்தேன். வெகு மகிழ்ச்சி. இங்கேயே வாழ்ந்தாலும் இங்குள்ள இலக்கியம் பற்றி அறிவதில் ஓர் கடினத்தன்மை நிலவுகிறது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை எழுத்தாளர்கள் அதிகளவில் புலம்பெயர்ந்து விட்டமை காரணமாக இருக்கலாம் அல்லது கொழும்பில் எழுத்தாளர்கள் குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் உங்கள் நூல் பயனுள்ளதாக இருக்கும். நன்றி   அன்புடன் அனு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104179

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79
எட்டு : குருதிவிதை – 10 சகுனி கிழக்குக் கோட்டையை அடைந்தபோது அங்கே பல்லக்கு நிற்பதை கண்டார். புரவியை இழுத்து விரைவழிந்து பல்லக்கை நோக்கியபடி சென்றார். அது விதுரரின் பல்லக்கு என்று அணுகிய பின்னர்தான் தெரிந்தது. குதிரையை நிறுத்திவிட்டு இறங்கி அணுகிவந்த ஏவலனிடம் கடிவாளத்தை அளித்தார். “அமைச்சரா?” என்றார். “ஆம், மேலே காவல்மாடத்தில் நின்றிருக்கிறார்” என்றான் ஏவலன். சகுனி குறுகிய படிகளில் ஏறி கோட்டைக்கு மேலே சென்றார். சுவரோடு ஒட்டியபடி நின்றிருந்த வீரர்கள் தலைவணங்கினர். அவர் காவல்மாடத்தை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104171