Daily Archive: December 1, 2017

கருத்தியல்,கருணை,பெண்மை
  கருத்தியலில் இருந்து விடுதலை ஜெ,   பின் தொடரும் நிழலின் குரல் குறித்த சுகதேவிற்கான கடிதத்தை வாசித்தேன். அருணாசலம் எண்ணிப் பார்க்கும் புரட்சி மட்டும் பெண்களாலானதாக இருந்தால் என்ற கருத்தை அவ்வப்போது எண்ணிக் கொள்வேன். பொதுவாக கோட்பாட்டாளர்களால் உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு  நீங்கள் ரசனை விமர்சனம் சார்ந்தவர், ஆழ் படிமங்களைப் பயன்படுத்தி பாஃஸிசத்தை விதைக்கிறீர்கள் என்பது. பின் தொடரும் நிழலின் குரலே இந்த நோக்கில்தான் வாசிக்கப்பட்டது என நினைக்கிறேன். நீங்கள் மரபை / பெண்ணை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104232

கலை இலக்கியம் எதற்காக?
  அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த என்னால் இயலாமல்போகலாம். நான் பேச்சாளனல்ல, எழுத்தாளன்.என் ஊடகம் எழுத்து. ஆகவே சில சொற்களை இங்கே சொல்லி விடைபெறலாமென என்ணுகிறேன் சிங்கப்பூருக்கு நான் வந்து சில நாட்களாகின்றன. இங்கே சுப்ரமணியன் ரமேஷ் என்ற நண்பரின் இல்லத்தில் தங்கியிருந்த போது அங்கு வந்த இந்திரஜித் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/46

நத்தையை எதிர்கொள்வது…
நத்தை -ஒரு கடிதம் அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, ‘எழுத்தாளர்’ என்று எழுத்து என்றால் என்ன என்று சற்றேனும் அறிந்து கொண்டுவிட்டவர்களால் அறியப்படும் உங்களுக்கு அநேக வணக்கங்கள்.  விகடன் ‘தடம்’ இதழில் நத்தையின் பாதை என்ற தலைப்பில் 6 -வது கட்டுரையாக குருவியின் வால் என்ற தலைப்பில் தங்கள் கருத்துக்களைக் கண்டு எதிர்வினையாக ஒரு அன்பர் கடிதம் வாயிலாக தன் கருத்துக்களைத் தந்துள்ளார்.  அக்கடிதம் எனக்கு சில உண்மைகளை உணர்த்தியதாக கருதுகிறேன்.  சில திறப்புகள்.  உங்களிடமும் அவரிடமும் கூற …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104059

இரு கடிதங்கள்
வாடிக்கையாளர்கள் புதுக்கவிதை சுருக்கமான வரலாறு அன்பள்ள ஜெ….வணக்கம்.   நான் பணி ஓய்வு பெற்ற பிறகு வலைத்தளத்திற்குள் வந்தவன். எனவே 2008 ன் மறு பிரசுரமான “இலக்கிய விருதுகள்”  பற்றிய உங்களது கட்டுரையை இன்றைய தேதிக்கான உங்களது பதிவின் மூலமாகத்தான் கண்டேன். வரி வரியாய்ப் படித்து ரசித்தேன்.  இம்மாதிரிப் பலமாகப் பகடி செய்வதற்கும் ஒரு தகுதியும் திறமையும் வேண்டும். அப்படியானால்தான் அது நிற்கும். அங்கங்கே சில மறுப்புகள் இருந்தாலும் அதையும மறந்து, ஒதுக்கி ஏற்றுக்கொள்ள மனம் விழையும். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104060

விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
2017 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மலேசியாவின் மூத்த எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது.   கோவையில் டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது    இடம் ராஜஸ்தானி சங் அரங்கம் ஆர் எஸ் புரம் கோவை   16 ஆம்தேதி காலை ஒன்பது மணிக்கு சந்திப்புகள் தொடங்கும். இரவு பதினொரு மணிவரை எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் நிகழும். 17 ஆம்தேதி காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கி மாலை நான்குமணிக்கு முடிவடையும். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104248

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78
எட்டு : குருதிவிதை – 9 சதானீகன் அன்றிரவு முழுமையாகவே துயில்நீத்தான். அவன் பிரத்யும்னனின் அறையிலிருந்து வரும்போதே இரவொலிகள் மாறுபட்டிருந்தன. மெல்லிய மழைத்தூறல் ஊரை மூடியிருந்தது. அவ்வப்போது மின்னல் வெட்டி வானம் சற்று உறுமியது. இலைகள் பளபளப்புடன் தெரிந்தணைந்தன. அவன் அந்த சிறிய மாளிகையின் மிகச் சிறிய சாளரத்தருகே நின்று மழையை நோக்கிக்கொண்டிருந்தான். மழை நின்று குளிர்காற்று சுழன்றது. பறவைகள் குரலெழுப்பின. மீண்டும் வானம் உறுமத்தொடங்கியது. ஓர் எண்ணம் எழுந்தது, அர்ஜுனன் அவனை அழைக்காமலேயே இளைய யாதவரை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104166