Monthly Archive: December 2017

வைரமுத்து – எத்தனை பாவனைகள்!

வைரமுத்துவுக்கு ஞானபீடமா? வைரமுத்துவின் ஞானபீடமுயற்சிகளைப் பற்றி மலையாளம் தமிழ் இரு மூலங்களிலிருந்து அறிந்தேன். அதை பொதுவில் வைக்கவேண்டும் என்றும் ஒரு தமிழ் எழுத்தாளர் என்னிடம் கேட்டுக்கொண்டார். வைரமுத்து அதற்காக முயல்கிறார் என்பதும் அதன்பொருட்டே பாரதிய ஜனதாவின் பிரமுகர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறார் என்றும் தெரியாத எவரும் தமிழில் இல்லை. அவர் எப்போதுமே எல்லா வழியிலுமே சுயமுன்னேற்றத்திற்காக முயல்பவர், ஆகவே அதில் அதிர்ச்சி கொள்ளவும் ஏதுமில்லை ஞானபீடம் ‘நல்ல’ எழுத்துக்காக அளிக்கப்படுவது அல்ல. ஒரு காலகட்டத்தின் குரலாக, ஒர் இலக்கியச்சூழலின் அடையாளமாக, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105260

இருள் -கடிதங்கள்

  புதிய இருள் அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,     வணக்கம்.’ புதிய இருள்’ கட்டுரை குறித்த என் கருத்து. இந்த அதிர்ச்சியான தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட எதிர்பார்த்தது  தான். தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் சசிகலா – தினகரன் குடும்பத்திற்கு இந்த வெற்றி கல்லறையில் அறையும் கடைசி ஆணியை தடுத்து கொண்டதாக  தான் கொள்ள வேண்டும்.  நல்லதோ கெட்டதோ, இந்த வெற்றிக்காக தினகரன் மேற்கொண்ட செயல்கள், முயற்சிகள் ஆச்சரியமானது.மற்றவர்களால் மேற்கொள்ள படாதது.  சென்ற தடவை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105192

வைரமுத்து,ஞானபீடம் – கடிதங்கள்

ஜெமோ, பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஞானபீடமும் கிடைக்கலாம். ஏனென்றால் எந்த ஒரு அமைப்புமே, அதிலும் குறிப்பாக அரசாங்கம் சார்ந்தவைகள், ஊழலோ சார்புத்தன்மையற்றோ செயல்பட வாய்ப்பேயில்லை. இந்த ஜனநாயகம் கண்ட பரிணாம வளர்ச்சியிது. ஆனால் இதை ஏன் வைரமுத்து இவ்வளவு வலிந்து செய்யவேண்டும் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இ.பா மற்றும் கி.ரா போன்றவர்களின் படைப்புகளை தன் படைப்புகளோடு ஒப்பிடுகையில் நாம் எங்கிருக்கிறோம் என்பதை உணரமுடியாத எளிய மனம் படைத்தவரல்ல அவர். தமிழ் இலக்கியத்திற்கும் மட்டும் இது சிறுமை அல்ல. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105259

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–15

பகுதி இரண்டு : பெருநோன்பு – 9 அசலை காந்தாரியின் அறைவாயிலை அடைந்தபோது அங்கு நின்றிருந்த சேடி வியப்புடன் அவளை நோக்கி புருவம் தூக்கி அவ்வசைவை உடனே தன்னுள் ஆழ்த்தி தலைவணங்கினாள்.  “பேரரசி உணவருந்திக்கொண்டிருக்கிறார்கள். இளைய அரசிகள் உடனிருக்கிறார்கள்” என்றாள். “நான் பேரரசியை பார்க்கவேண்டும், உடனடியாக” என்றாள் அசலை. “தாங்கள் அதை முன்னரே அறிவித்திருக்கிறீர்களா?” என்று கேட்டாள் முதிய சேடி. “இல்லை, ஓர் எண்ணம் தோன்றி எழுந்து வந்தேன். அவரை நான் சந்தித்தாகவேண்டும்” என்று அசலை சொன்னாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105255

விஷ்ணுபுரம் விருதுவிழா – நிறைவு

அன்புள்ள ஜெ,   விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இன்று ஓர் இலக்கியக் கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கிறது. விழாவுக்கு வந்து ஒரு நிறைவையும் அதன்பிறகு அன்றாடத்தில் கலக்கும் சோர்வையும் அடைந்தேன். ஒரு பெரிய கேள்வி எழுந்துவந்தது. இந்த விழாவை ஏன் நடத்துகிறீர்கள்? இதனால் உண்மையில் என்ன நிகழுமென எதிர்பார்க்கிறீர்கள்? அது நிகழ்கிறதா? நாங்கள் உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறோமா?   செந்தில்குமார்     அன்புள்ள செந்தில்,   செந்தில்களுக்கு இனிமேல் எண்களை வைப்பதாக உத்தேசம்.   விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105126

எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை.

நிலங்களும் மாற்றத்தின் தருணங்களும் காலத்தில் நகர்ந்து பின்செல்லக்கூடியவை. அந்த மாற்றத்தை எதிர்கொண்ட மனங்களின் துயரும் உத்வேகமும் கொண்டாட்டங்களுமே நம்மை வந்து சேர்கின்றன. அவ்வகையில் திருப்பூர் தொழில் நகரமாக எழுகிறது எனும் நிமித்தத்தின் வாயிலாக மணல் கடிகை காலத்தை அதை உணரும் மனித அகத்தை மிக வெற்றிகரமாக பிரதிபலிக்கிறது. சுரேஷ் பிரதீப் எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை பற்றி http://manalkadigai50.blogspot.in/2017/12/blog-post_8.html?m=1

Permanent link to this article: https://www.jeyamohan.in/104900

பயணத்தகவல்களுக்காக ஒரு தளம்

பேரன்பிற்குரிய ஜெ, கடந்த  மாதம்  ஒருநாள் வழக்கம் போல  தங்களின் பயணக்கட்டுரைகளை  வாசித்துக்  கொண்டு  இருந்தேன். அப்போது  கூகிள் வரைபட  உதவியுடன்  ஒவ்வொருஇடத்தையையும்   தேடிப் பார்த்துக்  கொண்டிருக்கும் போது,  அந்த இடங்களின்  புகைப்படங்கள்,  தூரம் என   பல தகவல்களையும்தனிப்பட்ட  ஆர்வத்தினால்  சேகரிக்க தொடங்கினேன்.  இந்தஆர்வம்  மேலும் வலுப்பெற்று  தங்களின்  பயண பாதைகளைதொகுக்க   ஒரு  தனி வலைப்பதிவு  தொடங்கும்  அளவிற்கு  வந்துவிட்டது. http://trips-of-jeyamohan.blogspot.in/ என்ற  தற்காலிக முகவரியில்    மையநிலப் பயணம்,  இந்தியப் பயணம்,  தஞ்சைதரிசனம்,  ஹொய்ச்சாள   கலைவெளியில்,  சஹ்யமலை  மலர்களைத்தேடி போன்ற பயண  கட்டுரைகளில்  வரும் இடங்களை   துல்லியமாக  தொகுத்துவிட்டேன்.  தற்போது அருகர்களின்    பாதை  தொகுப்பில்  கவனம்  செலுத்தி  வருகிறேன். ஒரு  ஆர்வத்தில்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104855

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14

பகுதி இரண்டு : பெருநோன்பு – 8 விகர்ணனின் துணைவி தாரை பானுமதியின் அறைவாயிலில் நின்றிருந்தாள். அகலத்திலேயே அசலையைக் கண்டதும் அணிகள் குலுங்க ஓடி அணுகி “அக்கையே, தங்களை அரசி இருமுறை உசாவினார்” என்றாள். அசலை களைத்திருந்தாள். அன்று காலைமுதலே அவளை பெருவிசையுடன் இயக்கிய உள்ளாற்றல் சற்றுமுன் தன் அறையிலிருந்து கிளம்பிய கணம் ஏனென்றறியாமல் முற்றிலுமாக வடிந்துமறைய நின்றிருக்கக்கூட முடியாமல் உடல் எடைகொண்டு இருபுறமும் நிலையழிந்து தள்ளாடியது. மீண்டும் சென்று மஞ்சத்தில் படுத்து விழிகளை மூடிவிட வேண்டுமென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105205

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயிடுவை இதற்காகச் சந்திக்கவுள்ளனர் என்று கேள்விப்பட்டேன்.. பாரதிய ஜனதாக் கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பொறுப்பிலிருப்பவர்கள் சிலர் இதற்கான தனிமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.தருண் விஜயை அழைத்துக் கூட்டம் நடத்தியது, மோடி கவிதைகளை வெளியிட்டது என அவர் சென்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105208

க‘வதை’ !

  யூமா வாசுகிக்கு சாகித்ய அக்காதமி மொழியாக்க விருது! விருது ஜெ,   சும்மா இருந்த சங்குகளை எதுக்கு ஊதிக்கெடுக்கிறீர்கள்? ஏற்கனவே வேனில் என்பவரின் கவிதையால் தமிழ் இலக்கிய உலகம் நொந்து வெந்து கிடக்கிறது.  [ செ(ஜ)ய மோகா… நிறுத்து! உன் வசைஎழுத்தை!!!! ]   இன்குலாப் கவிமரபைச்சேர்ந்தவர்கள் இப்படி படையெடுத்தால் நீங்கள் தாங்குவீர்கள். நாங்கள் என்னதான் செய்வது? கொஞ்சம் தயவுபண்ணவேணும்   ராஜ்   முகமே இல்லாத ஒரு ஜெயமோகன் ருத்ரா வெண்முரசம் என்று தலையணை தலையணைகளாக‌ பரண்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105077

Older posts «