Daily Archive: November 27, 2017

மயக்கமென்ன?




  இரண்டுபாடல்கள் எங்களூரில் அன்று பிரபலம். ஒன்று   நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது கண் மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது   இன்னொன்று   தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி   என்ற மலையாளப்பாடல். ஆனால் பாடல்களை நாங்கள் சொந்தமாக கட்டுடைப்பு செய்து மறுஅமைப்பு செய்வதுண்டு. எங்கள் ஊரில் புரியும்படியாக. மேலே சொன்ன இருபாடல்களும் மரச்சீனிக் கிழங்கு சம்பந்தமானவை   கிளங்கும் மீனும் சேருது என் வாயில் வெள்ளம் ஊறுது நிலை …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/104108

சீ முத்துசாமியின் ’அகதிகள்’ -விஷ்ணு




ஒரு நிலத்தில் வாழ முடியாமல் பிற நிலங்களை நோக்கிச் செல்லும் மக்கள் காலந்தோறும் இருக்கிறார்கள். அத்தகைய புலப்பெயர்வுக்கு போரோ பஞ்சமோ பின்புலமாக இருந்திருக்கிறது.   பிரித்தானிய காலனிய ஆட்சி காலத்தில் கூலிகளாக இந்தியர்கள் உலகம் முழுக்க கொண்டு செல்லப் பட்டார்கள். தோட்டங்களிலும் சுரங்கங்களிலும் உடல் உழைப்பினால் செல்வங்களை தங்கள் முதலாளிகளுக்கு பெருக்கித் தந்தார்கள். ஒரு கால கட்டத்தில் அத்தகைய தொழில்கள் லாபம் குறைந்தவையாய் மாறும்போது கூலிகளாய் அழைத்து வரப்பட்டவர்கள் கைவிடப் பட்டார்கள்..     அதற்குள் பல …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/104071

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74




எட்டு : குருதிவிதை – 5 அவைமுறைமைகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்க சதானீகன் உடலில் எழுந்த சலிப்பசைவை உடனே எழுந்த எச்சரிக்கை உணர்வால் கட்டுப்படுத்தி மிக மெல்லிய கால்நகர்வாக அதை மாற்றிக்கொண்டான். ஆனால் அதை தன்னியல்பாகவே உணர்ந்த நிர்மித்ரன் அவ்வுணர்வை அறியாமல் பெருக்கிக்கொண்டு இரு கைகளையும் விரித்து, உடலை நெளித்து, சோம்பல் முறித்தான். சதானீகன் திரும்பிப்பார்க்க “இங்கு அவைநிகழ்வுகள் நெடுநேரம் நிகழும் போலும்” என்றான். சதானீகன் “கைகளை தாழ்த்து” என்று மெல்லிய குரலில் சொன்னான். அவன் கைகளை தாழ்த்தி …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/104105