Daily Archive: November 23, 2017

ஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017




  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   ஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்ட அமுலாக்கம் 2017   கடந்த ஒருமாதமாக எம் எல்லோரையும் குழப்பிக்கொண்டிருந்த இப் பிரச்னை இப்போது பாராளுமன்றத்தில் விவாதத்துக்குபகிரங்க மாக வரவிருக்கிறது. சமீபத்திய தபால் வாக்கெடுப்பின்படி, 60 வீதமானோர் ஆதரவு தெரிவித்தும், 40 வீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தும் இச்சட்டப் பிரேரணையை பாராளுமன்றம் வரை கொண்டு செலுத்தியுள்ளனர்.   வளர்முக நாடுகளில் ஒருபாலின உறவு முறைகள் இலைமறை காயாகவே உள்ளன. ஆனால், வளர்ச்சி பெற்ற …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/103983

விஷ்ணுபுரம் வாசிப்பு




  அன்பின் ஜெ, வணக்கம்!. “நான் இன்னும் தயாராகலேன்னு தோணுது…” . சென்ற வருட விஷ்ணுபுர விழாவின் முதல்நாள் காலை தேனீர் இடைவேளையில் விஷ்ணுபுரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் “அப்டியா…” என்ற புன்சிரிப்போடு கூடிய உங்களின் மறுமொழிக்கு ‘அட அர்ப்ப பதரே’ என்றும் ஒரு அர்த்தம் உண்டு என்பதை அதன்பிறகான பல ‘அப்டியா’க்களின் வழியே கண்டுகொண்டேன். சில வாரங்களாக பருவமழை எங்கள் மாவட்டத்திற்கு மட்டும் தனி கரிசனம் காட்டியதால் பெரும்பாலான பகல்பொழுதுகள் அந்திம ஒளியிலேயே கடந்து சென்றது. சில்வண்டுகளின் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/103945

புல்வெளிதேசம் பற்றி…




  அன்பு ஜெ,   நலம்தானே?     முன்னரே அன்றன்று தளத்தில் வந்தபோது படித்ததுதான் என்றாலும், ”புல்வெளி தேசம்” புத்தகமாய் வந்தபின் ஒருமுறை படிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன். காரணமிருக்கிறது.     ஆஸ்திரேலியா, நாங்கள் கொய்மலர் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. கொய்மலர் வணிகம், ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் நாடு. கென்ய கொய்மலர் நிறுவனங்களின் ஆஸ்திரேலிய ஏற்றுமதி வருடாவருடம் உயர்ந்துகொண்டுதான் இருக்கிறது, சில செய்முறைச் சிக்கல்கள் இருந்தாலும். உதாரணத்திற்கு, ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்வதாயிருந்தால் ரோஜாக்களை, பூக்களின் அடிப்பாகத்திலிருந்து …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/103997

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 70




எட்டு : குருதிவிதை – 1 உபப்பிலாவ்யத்தின் கோட்டைமுகப்பின் பெருமுரசு மும்முறை ஒலித்து அடங்கியதும் அரண்மனை முகப்பிலிருந்த முரசு அதை ஏற்று ஒலித்து அடங்கியது. தொடர்ந்து நகரின் வெவ்வேறு இடங்களில் இருந்த ஆலயங்களில் புலரிப் பூசனைகளுக்கான மணியோசைகள் எழத்தொடங்கின. சதானீகன் தன் சிற்றறையின் மஞ்சத்திலேயே விழிப்பு கொண்டு கைகளை நெஞ்சோடு கோத்து சொல்லற்ற வேண்டுதல் ஒன்றை நிகழ்த்தினான். ஒவ்வொரு நாளும் விழிப்பின் முதற்கணத்தில் அவன் இயற்றுவது அது. இளங்காற்றுக்கு தழையும் கிளைபோல, அல்லது முதல் ஒளி கொள்ளும் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/104013