Daily Archive: November 19, 2017

இருளில் அலைதல் -கணேஷ்




  சீ.முத்துசாமி குறுநாவல்கள் பிரசுரம் இணையத்தில் நூல்கள்- சீ.முத்துசாமியின் நூல்களை வாங்க     இருளில் அலையும் குரல்கள் டால்ஸ்டாயின் “அன்னா கரீனினா” நாவல் இப்படித் துவங்கும்:  “மகிழ்ச்சிகரமான குடும்பங்கள் யாவும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. துயரப்படும் குடும்பங்கள்தாம் அதனதன் வழியில் துயருறுகின்றன”. இந்த நாவலில் காட்டப்படும் குடும்பமும் கூட தனக்குரிய வழியில் துன்பப்படும் குடும்பம்தான்.   இந்தக் குடும்பத்தின் ஒவ்வொருவரும் அவரவர்களுக்குரிய ஒளியைத் தேடிச் செல்கிறார்கள். ஆனாலும் அவரவர் வழியில் துயருற்று முடிவில் இருளில் புதைகிறார்கள். …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/103873

சுரேஷ் பிரதீப்பின் ஒளிர்நிழல்-நரோபா




  ‘ஒளிர் நிழல்’ புனைவுக்குள் புனைவு என்ற வகைமையை தனதாக்கிக் கொள்கிறது. சுரேஷ் பிரதீப் எனும் இளம் எழுத்தாளனின் மரணத்திற்கு பின் பதிப்பிக்கப்படும் அவனுடைய நாவலும், சுரேஷ் பிரதீப்பின் மரணத்திற்கு பின்பான நிகழ்வுகளுமாக முடையப்பட்டிருக்கிறது ‘ஒளிர் நிழல்’. சுரேஷ் பிரதீப், ரகு, சக்தி, குணா என பல்வேறு பாத்திரங்கள் கதைசொல்லிகளாக திகழ்கின்றனர். உரை, கவிதை, கட்டுரை என வெவ்வேறு வடிவங்களை கையாள்கிறது. தற்கால இளைஞனின் வாழ்வில் சூழும் வெறுமை மற்றும் அகத் தத்தளிப்புகள், ஒரு குடும்பத்தின் எழுச்சியும் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/103831

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 66




ஏழு : துளியிருள் – 20 அணியறைக்குள் ஓசையற்ற காலடிகளுடன் நுழைந்த சுருதசேனன் மெல்ல அருகணைந்து “அனைவரும் சித்தமாகிவிட்டனர், மூத்தவரே” என்றான். தாழ்ந்த பீடத்தில் தலை அண்ணாந்து கால்நீட்டி அமர்ந்திருந்த பிரதிவிந்தியனின் குழற்கற்றைகளை மென்மெழுகும் நெய்யும் சேர்த்து சிறு தூரிகையால் நீவி வேய்குழல்களில் சுற்றி சுருள்களென ஆக்கிக்கொண்டிருந்த ஆணிலிச் சமையர்களில் ஒருவர் “இன்னும் சற்று பொழுது…” என்றார். “நெடுநேரமாயிற்று” என்று விழிகளில் மட்டும் சினத்துடன் சுருதசேனன் சொன்னான். “குழற்கற்றைகளை சுருட்டுவது எளிதல்ல. அவைநிகழ்வு முடிவதற்குள் அவை தங்கள் …

மேலும் »




Permanent link to this article: https://www.jeyamohan.in/103895