Daily Archive: November 14, 2017

இலக்கிய முன்னோடிகளின் தடங்கள்…
  பத்து வருடங்களுக்கு முன்பு ஒருமுறை தமிழினி வசந்தகுமாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இந்த விமர்சன நூல்வரிசை பற்றிய எண்ணம் எழுந்தது. அன்று பிரபலமாக இருந்த ஒரு விமரிசகர் சமகால இலக்கியப்படைப்பு ஒன்றைப்பற்றி மிகமிக நீளமான விமர்சனக்கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அலசி, ஆராய்ந்து, பிரித்து, தொகுத்துச் செய்யப்பட்ட ஆராய்ச்சி. ஏராளமான கொள்கைகள், கோட்பாடுகள், மேற்கோள்கள். ஆனால், அவர் அந்தப்படைப்பைக் கொஞ்சம்கூட புரிந்து கொள்ளவோ உணர்ந்துகொள்ளவோ இல்லை என்பது அதை வாசித்த எந்த நல்ல வாசகருக்கும் தெரிந்தது. இதை, தமிழின் கோட்பாட்டு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103726

அயனிப்புளிக்கறி பற்றி…
  ஒரு குறும்படத்தின் அல்லது ஒரு நாடகத்தின் காட்சியில் தெரியும் அழுத்தம் போலசித்திரங்களாக சிறுகதை அமையவேண்டும் என நினைத்துக் கொள்வேன். முன்பு சுஜாதாஎழுதிய ஒரு சிறுகதை குறும்படம் பார்த்த காட்சிகள்போல் என் மனதில் எழுந்ததுண்டு. (பின்னர் குறும்படமாகவும் வெளிவந்தது). தி.ஜானகிராமன் எழுதிய காண்டாமணி என்னும்சிறுகதையும் அப்படியான கதைதான். தி.ஜா.வின் பல கதைகள் அப்படியானவைகள் என்றுநினைக்கிறேன். ஆசிரியன் முற்றிலும் விலகி தன் மைய நோக்கத்தை பாத்திரத்தின்வாழியாகவே சொல்லிவிடுவது. வெறும் உரையாடல்களால் அல்ல, ஆசிரியரின்கூற்றுகளாலும் அல்ல, சில மெளனங்களாலும் ஒரு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103543

எஸ்.பொ.வின் கலை- நோயல் நடேசன்
  அன்பின ஜெயமோகன்; நலமா? நீங்கள் அதிகம் எஸ்போவைப்பற்றி எழுதியவர் .எனது சடங்கைப்பற்றிய பார்வையை உங்களுக்கு அனுப்புகிறேன் .தமிழ்நாட்டில் தலித் இலக்கியங்களில் அவர்முன்னோடி அத்துடன் டானியலை விட இலக்கியவாதி என்பது எனது சிந்தனை பிரியமானால் பகிரவும்அன்புடன நடேசன் https://noelnadesan.com/2017/11/10/மீள்வாசிப்பில்-எஸ்-பொ-வி/ ***
Permanent link to this article: https://www.jeyamohan.in/103746

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 61
ஏழு : துளியிருள் – 15 அஸ்தினபுரியின் எல்லையை அவர்கள் அணுகுவதை முகப்பில் நின்றிருந்த தலைமைக் குகன் கொம்பூதி அறிவித்தான். யௌதேயன் எழுந்து சென்று வெளியே நோக்கினான். அஸ்தினபுரியின் எல்லை என அமைந்த காவல்மாடத்தின் மரமுகடு சோலைத்தழைப்புக்குமேல் எழுந்து தெரிந்தது. அங்கிருந்தவர்கள் அவர்களை பார்த்துவிட்டார்கள் என்பதை மெல்ல எழுந்தடங்கிய கொம்போசையிலிருந்து உணரமுடிந்தது. பலராமர் சலிப்புடன் எழுந்து கைகளை விரித்து சோம்பல்முறித்தபின் “அணுகிவிட்டோம்” என்றார். அப்பால் அஸ்தினபுரிக்குரிய நீர்ப்பரப்பில் ஏராளமான காவல்படகுகள் பாய்விரித்து சுற்றிவருவதை யௌதேயன் கண்டான். “நாம் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103849