Daily Archive: November 13, 2017

சீ முத்துசாமியின் மண்புழுக்கள்
தமிழ் புலம்பெயர் எழுத்துக்களை இரண்டாக வகைப்படுத்தலாம், தன் அடையாளங்களை கடந்து வேறொன்றாகும் முயற்சி, அதன் சிக்கல்கள் என்பது ஒரு வகை, தன் அடையாளத்தை இறுகப் பேணி தற்காத்துக்கொள்ளப் போராடுவது மற்றொரு வகை. முந்தைய எழுத்திற்கு மிகச்சிறந்த பிரதிநிதி அ. முத்துலிங்கம். இரண்டாம் போக்கை பிரதிநிதிப்படுத்தும் எழுத்தே மிகக் குறைவு. தெளிவத்தை ஜோசப்பை முன்னோடியாக கொண்டால், சீ. முத்துசாமி இவ்வரிசையில் அவருக்கு அடுத்த இடத்தை அடைபவர். மண்புழுக்களின் தேசத்திலிருந்து எழுந்த ராஜநாகம் * சீ முத்துசாமியின் மண்புழுக்களைப்பற்றி சுநீல்கி …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103531

மாலை விருந்தில்…
நான் எழுத்தாளர் டாப்னியுடன் இரவுவிருந்துக்குச் சென்றபோதுதான் பாட்டியை சந்திக்க நேர்ந்தது.  கூடவே எங்கள் நண்பர் லயனலும் வந்திருந்தார். இல்லத்தலைவரான மூத்தசீமாட்டியைச் சந்தித்தது எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அறிமுகம்செய்து வைத்தேன். ”நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று கேள்விப்பட்டேன்” திருமதி வேய்ன் சொன்னாள் ”எனக்கு எப்போதுமே இலக்கியவாதிகளைப் பிடிக்கும். பல வருடங்களுக்கு முன்பு நான் மிஸ்டர் தாக்கரேயையும் மிஸ்டர் டிக்கன்ஸையும் சந்தித்திருக்கிறேன்…” அது பாட்டி தன் பேச்சைத்தொடங்கும் முறையாக இருக்கலாமென்று எண்ணிக்கொண்டேன். எழுத்தாளர் டாப்னே தன் ஆர்வத்தை வெளிக்காட்டினார்.கிழவி சொன்னாள். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/1604

கேசவமணியின் விமர்சனங்கள்
  என் படைப்புகள் பற்றி… அன்புள்ள ஜெயமோகன், கேசவமணி எழுதிய உங்கள் படைப்புகள் மீதான விமர்சனங்கள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வெளிவருவதில் எனக்குநிலைதடுமாறி விழுந்து எழும்பும் அளவுக்குக் கட்டற்ற சந்தோஷம். விமர்சனங்கள் என்ற பெயரில் கதையைச் சுருக்கிச் சொல்வதேஇப்போது இணையம் எங்கும் பெருகிவழிந்து சிற்றிதழ் வட்டத்தையும் அது எட்டிய நிலையில், கேசவமணி வெவ்வேறு படைப்புகள்மீது கூர்மையான தன் பார்வையைச் செலுத்தி தன் வலைத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதும் அணுகுமுறை மிகுந்த பரவசத்தைத்தருகின்றது. எளிமையாகப் பன்முகத்தன்மையுடன் விளக்கி எழுதுகிறார். இத்தனை கூர்மையாக …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103750

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 60
ஏழு : துளியிருள் – 14 துயிலறை ஏவலன் தட்டி எழுப்ப விழித்தெழுந்து ஒருகணம் கழித்தே அவன் சொன்ன செய்தியை யௌதேயன் உளம் வாங்கிக்கொண்டான். “மூத்த யாதவர் தங்களை சந்திக்க விழைகிறார், இளவரசே” என்றான் ஏவலன். அவன் இந்திரப்பிரஸ்தத்தின் ஏவலன் என தோன்றினான். வெளியே ஒரு களிறு ஓசையிட்டது. மீண்டும் அவன் அதை சொல்ல யௌதேயன் முழு விழிப்புகொண்டு வாயைத்துடைத்து இடையாடையைக் கட்டியபடி எழுந்து நின்று “உடனே கிளம்புகிறேன். வந்து கொண்டிருக்கிறேன் என்று அவரிடம் சென்று சொல்க!” …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103834