Daily Archive: November 9, 2017

பணமதிப்புநீக்கம் பற்றி இன்று…
அன்புள்ள ஜெ பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்? ஜெயராமன் *** அன்புள்ள ஜெயராமன், என் மதிப்பீடுகள் இப்படி உள்ளன. பணமதிப்புநீக்க நடவடிக்கை ஊழல் அல்லது மோசடி நோக்கம் கொண்டது அல்ல என்றே நான் நம்புகிறேன். ஏனென்றால் அது ஊழல்நடவடிக்கை என்றால் முட்டாள்தனமானது, பயனற்றது. அதை எவரும் செய்யமாட்டார்கள்.ஆகவே அந்நோக்கம் உண்மையானது. ஆகவே மிகத்துணிச்சலானது. அரசியல் லாபக்கணக்குகள் இல்லாமல் செய்யப்பட்டது. ஆகவே வரவேற்கப்படவேண்டிய ஒன்று. ஊழலுக்கு ஆயிரம் வழிகள் உள்ளன. முந்தைய ஆட்சியாளர்கள் செய்து வழிகாட்டிய …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103715

கொஞ்சுதமிழ் குமரி
  பூனைக்கும் நாய்க்கும் ஏன் ஆவதேயில்லை? பூனை மகிழ்ச்சியாக இருந்தால் வாலை செங்குத்தாகத் தூக்கும். நாய் அப்படித்தூக்கினால் அதற்கு கொலைவெறி என்று பொருள். நாய் மகிழ்ச்சியாக இருந்தால் வாலை பக்கவாட்டில் ஆட்டும். பூனை அப்படி ஆட்டினால் பாயப்போகிறது என்று பொருள். மொழிக்குழப்பம். இதுதான் நெல்லைக்கு மேலே உள்ள தமிழ்நாட்டுக்கும் குமரிமாவட்டத்துக்கும் உள்ள வேறுபாடு. மலைகளால் சூழப்பட்ட எங்கள் நிலத்தில் எங்களுக்கு மட்டுமேயான நிறைய சொற்கள் உண்டு. இதற்குமேல் மலையாளச் சொற்களை தமிழுக்கும் தமிழ்ச் சொற்களை மலையாளத்துக்கும் கொண்டுபோய் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/152

அயினிப்புளிக்கறியும் அ.முத்துலிங்கமும்
ஸ்டைல் சிவகாமசுந்தரி அ முத்துலிங்கம் அயினிப்புளிக்கறி [சிறுகதை] இனிய ஜெயம், புத்தகச்சந்தையில் இலக்கியத்துக்கு அறிமுகமாகும் பல வாசகர்களை சந்தித்திருக்கிறேன் நூல்களை அறிமுகம் செய்ய கேட்பார்கள். கையில் பொன்னியின் செல்வன் வைத்திருப்பார்கள். யாருக்கு என வினவினால். தனக்குத்தான் என பதில் வரும். ஆம் பெரும்பாலும் பொன்னியின் செல்வன் வரை வந்து அங்கேயே நின்று விடுவார்கள். பின்பு பிழைத்துக் கிடக்கும் கல்வியை ஒரு பத்து பதினைந்து வருடம் துரத்தி இருப்பார்கள். இன்று செட்டில் ஆன பிறகு தாங்கள் இழந்த கனவு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103428

தேவதை -கடிதம்
தேவதை   கோபுரங்களைக் காணும் பொழுதெல்லாம் அது உடைந்து சிதறி ஒன்றுமில்லாமல் ஆகுவதை ஏங்கி நிற்கிறேன்.  நவகாளியின் ரத்தச்சகதியில் கிழவன் தனியனாக வருகையில், அந்தப் பிணங்களின் சுளித்த பார்வையின் முன் கிழவன் எதை உணர்ந்திட்டான். கேலியிலும் வசைகளிலும் கல்லடிகளிலும் மத்தியில் அவன் திரும்பத் திரும்ப தேட முயன்றது அந்தத் தோட்டாக்களினால் தன் நெஞ்சு பிளக்க வேண்டும் என்பதைத் தானா? அவனது ஆன்மபலம் வடிந்து கொண்டிருக்கக் கூடும். அவனது இறுதிக் கண்ணிகள் உடைந்திருக்கும். ஆனால் அவன் அதை நம்பவில்லை. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103484

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56
ஏழு : துளியிருள் – 10 யௌதேயன் இடைநாழியில் நடந்தபடி சர்வதனிடம் “மந்தா, நீ அத்தருணத்தில் இயற்றியதை தவிர்க்கமுடியாதென்று உணர்கிறேன். என்னை களத்தில் ஆடையின்றி நிற்கச்செய்வது அவன் நோக்கம். ஆனால் அச்செயலின் விளைவுகள் உகந்தவையல்ல. நிகழ்ந்தது ஏதென்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் நாம் அவர் கையை உடைத்துவிட்டோம் என்ற செய்தி மட்டும் அத்தனை உபயாதவர்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. இங்குள்ள எந்த யாதவ இளவரசர்களும் முகம்கொடுத்து சொல்லாட மறுக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் இன்சொல் உரைத்து அணுகுகிறேன், விழிவிலக்கி செல்கிறார்கள். நாம் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103684