Daily Archive: November 6, 2017

ஏன் அது பறவை?
ஒரு கவிதை அன்புள்ள ஜெ போகனின் கவிதை சிறந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதை ஏன் அத்தனை சிறந்தது என்கிறீர்கள்? சீண்டுவதற்காகக் கேட்கவில்லை. நானெல்லாம் கவிதையை புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருப்பவன். அதற்கு உதவும் என்பதனால் கேட்கிறேன் எஸ்.சேதுராமன் அன்புள்ள சேதுராமன், கவிதை ரசனை மிக அகவயமானது. ஆகவே ஒருவர் உணர்வை ஒருவர் அறிவதும் பகிர்வதும் கடினம். ஆனால் ஆச்சரியமாக மதிப்பீடுகள் எப்படியோ மிகப்புறவயமானவையும் கூட. நல்ல கவிதை நல்ல கவிதையே. எல்லா இடத்துக்கும், காலத்திற்கும், மானுடருக்கும் என் வரையறைகளைச் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103671

நாராயண குரு எனும் இயக்கம் -1
  நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் ‘கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி’ என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் தீண்டாமையை கடைப்பிடித்தார்கள். சாதி அடுக்கில் கீழ்ப்படியில் இருந்த நாயாடிகள் என்ற குறவர்குலத்தை சேர்ந்தவர்களை கண்ணால் காண்பதே தீட்டு என்று சொன்னார்கள். ஒவ்வொரு சாதிக்கும் தீண்டாப்பாடு என்ற தூரம் கடைப்பிடிக்கப்பட்டது. நாயர் ஈழவனை தீண்டக்கூடாது என்பது மட்டுமல்ல …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/7522

கடைசி முகம் -கடிதங்கள்
கடைசி முகம் – சிறுகதை அன்புள்ள ஜெ கடைசி முகம் சிறுகதை படித்ததும் என்னுள் எழுந்த எண்ணங்களை எழுதியிருக்கிறேன்.. பெண்களால் சூழப்பட்டிருக்கிறது இந்த வாழ்வு. தாயென்றும் தமக்கையென்றும் மனைவியென்றும் மகளென்றும் பேத்தியென்றும் பெருகி நிறைகிறார்கள். ஒருத்தி கொடுத்து நிறையாத அன்பை மற்றவர் வந்து நிறைக்கிறார்கள். எந்தக்குறையுமின்றி பெருமழையென பெண்மை நம்மைச் சுற்றிப் பொழிந்துகொண்டே இருக்கிறது. ஆனாலும் ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதே இல்லை. நல்லூழ் கொண்டவன் மட்டுமே பெண்மையை அறிகிறான். அதன் பேருருவை உணர்கிறான். அற்றவன் வெறும் ஆணாக …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103495

ஆழமற்ற நதி -கடிதங்கள்
ஆழமற்ற நதி [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன், சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான, என்னை பாதித்த, ஒரு கதை ஆழமற்ற நதி. https://kesavamanitp.blogspot.in/2017/10/blog-post_25.html அன்புடன், கேசவமணி *** அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். மிக்க நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். முதல் வாசிப்பில், ஆழமற்ற நதி கதையினை விவரிக்கும் சுந்தரேசனின் பாத்திர உருவாக்கம் ஆர்வமூட்டியது. உயர் பதவியில் இருப்பவர்களிடம் தொடர்புகளை வழிந்து ஏற்படுத்தி பேணிக் கொள்பவர். அவர்களிடம் தவழ்ந்து பணிந்து, குற்றேவல் புரிந்து அண்டி பிழைக்க தயங்காதவர். தான் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103402

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53
ஏழு : துளியிருள் – 7 பிரலம்பன் அபிமன்யூவுடன் சேர்ந்துகொள்ள இருவரும் கூடத்திலிருந்து வெளியே சென்றனர். வளைந்த கூரைகொண்ட அகன்று நீண்ட இடைநாழியின் இருபுறமும் வீரர்கள் சுவரோடு சேர்ந்து அணிவகுத்து நின்றனர். அப்பால் கால்வாயில் நீர் அணைவதுபோல மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் வந்தன. அபிமன்யூ முன்னால் சென்று அவர்களின் முகப்பில் நின்றுகொண்டான். அவர்கள் அவன் வருகையின் நோக்கத்தை உணர்ந்தவர்கள் என உயிர்ப்பசைவு கொண்டனர். வாழ்த்தொலியும் மங்கல இசையும் மெல்ல வலுத்து ஓங்கிக்கொண்டிருந்தன. அரண்மனையும் கூடங்களும் அவ்வோசையை ஏற்று …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103589