Daily Archive: November 5, 2017

நடைமீறுதல்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு. வணக்கம். நான் வ.அதியமான். உங்களுக்கு கடிதமெழுதி நீணாளாகிவிட்டது. வெண்முரசிற்கு இடையே இடையூராய் இருந்துவிடக்கூடாதென்பதன் பொருட்டே. பார்த்திருக்கையிலேயே விழிமுன்னமே ஒரு தாஜ்மஹால் முளைத்தெழுந்து வருவதுபோல் இதோ எங்களிடை இன்று வெண்முரசு. தர்க்க உலகைத் தாண்டிய மாயலோகம். 2014 ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து நாளிதுவரை வெண்முரசின்றி நகர்ந்ததில்லை ஓர்நாளும். சில ஆண்டுகளாய் மிகுந்த மன அழுத்தத்தின் விளைவாய் வாசிப்பென்பதே கூடுவதில்லை. ஆயினும் மனச்சோர்வென்னும் வன்திரையைக் கிழித்து உள்நுழைவது வெண்முரசொன்றே. அஃதொன்றே ஆறுதல் இப்போதைக்கு. புதிதாய் எழுத …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103613

வெண்கடல் கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி திருவண்ணாமலைக்கு பவா சாரை பார்க்கச் சென்ற எனக்கு, அவர் தங்களிடம் போனில்பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். நான்தான், அதிக சந்தோசத்தில் தங்களிடம் சரிவர பே முடியவில்லை. தங்கள் நண்பர் அலெக்ஸ் மரணம் தந்த சோகத்தில் இருந்தீர்கள், நான் தங்களிடம் பேசும் சந்தோசத்தில், நண்பரின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபம் சொன்னேனா என்று கூ ட தெரியவில்லை. அப்படி கேட்காமல் விட்டிருந்தால் மன்னிக்கவும். அதற்கு அப்புறம் அலெக்ஸ் மற்றும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103488

சென்னை வெண்முரசு விவாதக் கூடுகை,நவம்பர்
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், நவம்பர் மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது. இதில் வெண்முரசில் மனவியல் என்ற தலைப்பில் முத்துகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுவார். முத்துகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் மனவியல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சென்னை கலந்துரையாடலுக்கு துவக்கம் முதல் வருபவர். அவரிடம் வாசகர்கள் வெண்முரசில் மனவியல் சார்ந்து விவாதிக்கலாம். வெண்முரசு படித்ததால் ஏற்பட்ட மனவியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அப்பாய்ன்மெண்ட் வாங்கிக்கொள்ளலாம் :-))) வெண்முரசு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103421

மையநிலப்பயணம் கடிதங்கள்
அன்புள்ள ஜெ மைய நில பயணக்கட்டுரைகள் தொடர்ச்சியாக வாசித்தபடியே இருக்கிறேன். இந்தியாவைச் சுற்றிப்பார்க்கும் வெறியைத் தூண்டிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்கள் பயணக்கட்டுரைகளுக்கு நன்றி கடமைப்பட்டவனாகிறேன். தங்கள் ஹொய்சாலக் கலைவெளிப்பயணங்களை வாசித்து அந்த இடங்களுக்கு சென்றிருக்கிறேன். அருகர்களின் பாதை வாசித்து அதிலே விஜயமங்கலத்திற்கு அருகில் இருக்கக்கூடிய சமணத்தலங்களைப் பற்றி் குறிப்பிட்டிருந்தை வைத்து தேடித்தேடி விஜயமங்கலம் நெட்டைக்கோபுரக் கோயிலுக்கு (சந்திரப்பிரபா தீர்த்தங்கரர் கோவில்) சென்றேன்.கன்னடம் கலந்த தமிழில் பேசும் கோயிலைப் பராமரிக்கும் குடும்பத்தார் சொன்னவை கேட்டு மிகுந்த ஆச்சர்யத்திற்குள்ளானேன். ஹொய்சாலப்பயணத்தில் கண்ட தலங்களில் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103623

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52
ஏழு : துளியிருள் – 6 இளைய யாதவர் அபிமன்யூவைப் பார்த்து “அவை ஒருங்கிவிட்டதா, இளையவனே?” என்றார். அபிமன்யூ தயங்கிய குரலில் “ஆம், ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்றபின் “நான் பார்க்கவில்லை. அங்கே ஸ்ரீதமரும் தமரும் இருக்கிறார்கள்” என்றான். “சுதமர்…?” என்று கேட்டபடி இளைய யாதவர் வந்து பீடத்தில் அமர அவரைத் தொடர்ந்து வந்த ஏவலன் அவருடைய நீண்ட மேலாடையின் மடிப்புகளை அமர்வுக்குரிய முறையில் சீரமைத்தான். சத்யபாமை அவர் குழலில் கலைந்திருந்த ஒரு கீற்றை சீரமைத்தாள். “அவர் வெளியே கூடத்திலிருக்கிறார்” …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103587