Daily Archive: November 4, 2017

விஷ்ணுபுரம் விழா நிதியுதவி
வரும் டிசம்பர் 16, 17 தேதிகளில் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழவிருக்கிறது. மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது. இந்த விருது ஆரம்பம் முதலே அணுக்கமான நண்பர்களின் நிதியுதவியால் நிகழ்ந்து வருகிறதென அறிவீர்கள். சென்ற சில ஆண்டுகளாக விழா பெருகி இன்று இரண்டுநாள் இலக்கியத் திருவிழாவாகவே ஆகிவிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறுபேர் இரண்டுநாள் தங்கி பங்கேற்கும் விழா. ஆகவே சென்ற ஆண்டுமுதல் விஷ்ணுபுரம் அறக்கட்டளையை நிறுவி அனைவரிடமும் நன்கொடை பெறத் தொடங்கினோம். இவ்வாண்டும் நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் விழா …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103626

ஒரு கவிதை
  சென்ற இரண்டாண்டுகளில் தமிழில் நான் வாசிக்கநேர்ந்த மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று. ஜெ   ஹரிணி திரும்பத் திரும்பத் தனது சிறிய காயத்தை என்னிடம் காண்பித்துக் கொண்டிருக்கிறாள் தனது புண்களைக் காண்பிக்க மனிதர்கள் பிரியமானவர்களைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் கவி இவ்வுலகில் காயங்களைத் தவிர வேறு ஏதாவது  காண முடியாதா ? என்று ஏங்குகிறான் அவனை மலையுச்சியில் எல்லோரும் காணும் தீபமாய் வைத்திருக்கிறது என்பார் அறிவுடையோர் ஒளி எதில் ஒளிந்துகொள்ள முடியும்?  
Permanent link to this article: https://www.jeyamohan.in/103606

மையநிலப் பயணம் 11
[சந்தேரி கோட்டை, இணையத்தில் இருந்து] குவாலியர் விடுதியை காலையிலேயே ஒழித்து காரிலேறி வெயில் எழும்போதே சந்தேரிக்குக் கிளம்பிவிட்டிருந்தோம். எங்கள் பயணத்தில் கூடுமானவரை சமணத்தலங்களைத் தவறவிடுவதில்லை. முந்தைய அருகர்களின் பயணத்தில் மத்தியப்பிரதேசத்தை விரைந்து கடந்தோம். அப்போது விட்டுவிட்டுச் சென்ற ஊர் சந்தேரி   சந்தேரி வரலாற்றுச்சிறப்புமிக்க இடம். இங்குள்ள கோட்டை கிபி பத்தாம் நூற்றாண்டுமுதலே இருந்துள்ளது. மாளவத்தின் முக்கியமான நகரம். புண்டேல குலத்து அரசர்களும் சுல்தானியப் படைகளும் மாறி மாறி இந்நகரை ஆட்சி செய்தனர். பௌத்த சமண மதங்கள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103593

உலகமனிதன் -கடலூர் சீனு
  இனிய ஜெயம்,   ஜெயகாந்தன் நீங்கிய பிறகான தினங்களில் , அவரது உருவம் குறித்து , அவர் உருவாக்கி இருந்த எழுத்துக்கள் வழியே மீண்டும் ,மீண்டும்  நினைவில் மீட்டிக்கொண்டு இருந்தேன் . ஏன் ஜெயகாந்தன் அவர்களை சென்று பார்க்க அவ்வளவு தயங்கினேன்?   இரண்டு முறை தூரத்தில் வைத்து பார்த்திருக்கிறேன் .   ஒரு முறை ஞானியார் மடத்தின் வெளியில் நின்று , முழங்கும் அவரது குரலைக் கேட்டிருக்கிறேன் . அந்த இரவுகள் ஒன்றினில் , பழைய டேப் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103554

அயினிப்புளிக்கறி -கடிதங்கள்
  அயினிப்புளிக்கறி [சிறுகதை] அன்பான ஜெயமோகன்   அயினிப்புளிக்கறி   இனிமையிலும் இனிமை இச்சிறுகதை.   பழத்திலே இனிக்குததுதான் காயிலே புளிக்குது , இல்லேண்ணா கடுக்குது. புளிப்பும் கசப்பும் மூத்து கனிஞ்சா அது இனிப்பு…” அவ்வளவே வாழ்க்கை.   உள்ளம் மலர வைத்து விட்டது ““வாறேன்” என்று சொல்லியபடி அவள் பாய்ந்து வேலியில் இருந்து கீழே இறங்கினாள்”  என்ற வாக்கியம்.   அது சரி, ஆசான் அழைக்கும்போது “பாய்ந்து வேலியில் இருந்து கீழே இறங்கித்” தான் பின் தொடர வேண்டும். கனியைப்  பறிக்க வேண்டிய …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103400

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51
ஏழு : துளியிருள் – 5 அபிமன்யூ அமைச்சு அறையைவிட்டு வெளிவந்ததும் காத்திருந்த பிரலம்பன் அவனுடன் நடந்தபடி “இப்போது அரசியரை சந்திக்கப்போகிறோமா?” என்றான். அவன் உய்த்துணர்ந்ததைப் பற்றி அபிமன்யூ வியப்பு கொள்ளவில்லை. “ஆம், அரசியரும் மூன்று குழுக்களாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நான் முதலில் ஜாம்பவதி அத்தையை சந்திக்க விரும்புவதாக ஜாம்பவவிலாசத்தின் அகத்தளத்திற்குச் சென்று சொல்க! நான் செல்வதற்குள் அவர் காளிந்தி அத்தையை அங்கு வரவழைத்திருப்பார்” என்றான். நடந்தபடி “அவர்களை நான் சந்தித்துக்கொண்டிருக்கையில் ருக்மிணி அத்தையை சந்திக்க …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103540