Daily Archive: November 3, 2017

மையநிலப் பயணம் 10
குவாலியரின் கோட்டை அமைந்துள்ள பெரிய பாறையைச் சுற்றி இருக்கும் சமணச்சிற்பங்களைப் பார்க்கலாம் என்று சென்றோம். சென்று சேர்வதற்குள் இருட்டிவிட்டது. அப்பகுதியே ஓய்ந்து கிடந்தது. இரண்டு பையன்கள் அமர்ந்திருந்தனர். அப்பால் காவலர் இருந்தார். பாறையில் பிரம்மாண்டமாகப் புடைத்து நின்ற தீர்த்தங்காரர் சிற்பங்களைக் கண்டோம். அரையிருளில் வானிலிருந்து வந்திறங்கி வான்நோக்கி நின்றிருப்பவர்கள் போல் தெரிந்தனர். அருகே சென்று பார்க்க காவலர் மறுத்துவிட்டார். இருட்டியபின் அனுமதி இல்லை என்றார். “:சென்றுதான் பார்க்கட்டுமே, என்ன இப்போது?” என்றார்கள் பையன்கள். காவலர் சட்டம் என்றால் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103570

மையநிலப்பயணம் -கடிதங்கள்
  பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,   வணக்கம்.   தங்களின் மையநிலப்பயண இன்றைய சித்திரத்தில் மூன்று பகுதிகள் என்னைக் கவர்ந்தன. ஓன்று தேவியின் பெரிய உடைந்த பாதமும் அதன் மேல் பூஜைக்குறியீடாக ஒரு மலரும் மனத்தை எங்கேயோ இழுத்து சென்று ஏக்க பெருமூச்சை விடச்செய்தது!.ஒரு இடத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் ‘புண்டேல்கண்ட் அரசர்கள் அக்பர் காலகட்டத்திலேயே முகலாயர்களுடன் சமரசம் செய்துகொண்டதால் அவர்களின் அரண்மனை முகலாயர் அரசர்களால் இடிபடாமல் தப்பியதாக’.ஆனால் அந்தக் ‘கொடுப்பினை’ அங்குள்ள ஆலயங்களுக்கும்,சிலைகளுக்கும் இல்லை போலும்!.இரண்டாவது எங்களூர்காரர் செல்வேந்திரன் (சாத்தான்குளம்)கூறியது…’“பொண்ணப்பெத்தவன் அனாதை இல்லை ஜெ. அங்க …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103482

ஆதலின் அணுகுமுறைகள்
  காளி தான் முதலில் இப்படி ஒரு தத்துவ வகுப்பு நடைபெறப் போவதைப் பற்றி தெரிவித்தார். மூன்று நாட்கள், நாளொன்றுக்கு நான்கு மணி நேரமாக நமது குருஜி சௌந்தரின் வடபழனி ஆசிரமத்தில் அக்டோபர் 20, 21 மற்றும் 22 தினங்களில் நடைபெற்றது. ரிஷிகேஷ் சிவாந்த சரஸ்வதி சுவாமிகளின் குருமரபில், அவரது நேரடி சீடரான சுவாமி கிருஷ்ணானந்தரின் சீடரான சுவாமி பரம்ப்ரியானந்த சரஸ்வதி இந்நிகழ்விற்காக ஹரித்வாரில் இருந்து வந்து இருந்தார். குரு பரம்ப்ரியானந்தா ஒரிசாவில் தத்துவ பேராசிரியராகப் பணியாற்றியவர். தனது குருவைக் கண்டடைந்த பிறகு ஆசிரமத்திலேயே …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103550

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 50
ஏழு : துளியிருள் – 4 “அவன் என்ன சொன்னான்?” என்று பானு கேட்டான். அபிமன்யூ “இல்லை, மூத்தவரே. அதைப்பற்றி இங்கு நான் பேச விரும்பவில்லை. நான் வந்தது தங்களிடம் சிலவற்றை உரைப்பதற்காகவே” என்றான். “அவன் சொன்னதை ஒட்டியே நமது சொல்லாடல் அமையமுடியும், இளையோனே. ஏனெனில் அவனை முதலில் சந்திக்கும்படி ஸ்ரீதமர் சொன்னதனாலேயே இவ்வுரையாடல் அதன் தொடர்ச்சி என்றாகிவிடுகிறது” என்றான் பானு. அறைக்குள் முதல்முறை அங்கு வந்தபோது அவன் அவர்களைப் பார்த்ததுபோலவே சுபானு பிரபானு ஆகியோர் அமர்ந்திருக்க …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103534