Daily Archive: November 2, 2017

மையநிலப்பயணம் 9
   [கே.கே.முகம்மது இடிபாடுகளைப் பார்வையிடுகிறார், நன்றி ஃப்ரண்ட் லைன்] படேஸ்வர் ஆலயத்தொகையினூடாக நடப்பது ஓர் சென்றகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும்இடையேயான உறவின் ஒரு குறியீட்டின்மேல் உலவுவதுதான். இந்த ஆலயத்தொகை கிபி எட்டாம்நூற்றாண்டு வாக்கில் கட்டத்தொடங்கப்பட்டு நாநூறாண்டுக்காலம் தொடர்ந்து கட்டப்பட்டது. பின்னர் 12 ஆம் நூற்றாண்டில் சுல்தானியப் படையெடுப்பால் நிறுத்தப்பட்டது. அவர்கள் மூலக்கருவறைகளை இடித்தமையால் பின்னர் வழிபாட்டில் இருக்கவில்லை. கூர்ஜரப்பிரதிகார அரசும் சிதறிஆப்பரவியது. பதினெட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் முழுமையாகவே சிதறி கற்பாளங்களாக ஆகியது. கே.கே.முகம்மது அவர்களின் தலைமையில் நடந்த மறுசீரமைப்புப் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103506

மரவள்ளி -கடிதங்கள்
மயக்கமென்ன? அன்புள்ள ஜெ.     வணக்கம். நலந்தானே.     மரவள்ளி எங்களுக்கு உணவல்ல. முக்கிய பணப்பயிர்.அறுவடை சமயத்தில் ஓரிரு நாட்கள் வேய்த்து சாப்பிடுவோம்.அவ்வளவுதான்.     நன்கு வெந்த கிழங்குடன் எள்ளு தூள் சேர்த்து வெல்லப்பாகு ஊற்றி பிசைந்தால் கெட்டியான பேஸ்ட் கிடைக்கும். பார்க்க வண்டி மை போன்று கருப்பாக இருந்தாலும் அலாதியான சுவை,  குமரி மக்கள் அறியாதது. அடுத்தமுறை நீங்கள் இங்கு வரும்போது ருசிக்கலாம்!     கிழங்கை நேரடியாக நெருப்பிலிட்டு கரிக்கட்டையை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/104157

சன்னதம் -கமலக்கண்ணன்
je அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களது குறுநாவல்களைத் தொகுத்து, கிழக்கு பதிப்பகத்தில் வெளிவந்திருக்கும், ‘ஜெயமோகன் குறுநாவல்கள்’ நூலினை வாசித்தேன். ஒருவரது செயல்பாடாக அன்றி, ஒரு இயக்கச் செயல்பாடாக வெளிவந்திருக்கும் இக்கதைகளின் வழி பயணிக்கையில், தோன்றும் மனவெளிகள் – நம்மால் உணரும்படியான அருகிலிருக்கும் சூழலைத்தான் சுட்டுகின்றன எனினும் – உருவாக்கும் தெள்ளத் தெளிந்த மீள் கட்டமைப்பு, அதை அண்மையில் தரிசிக்கும் இன்பம், தீக்குள் விரல் வைத்திடல் ஆகிறது. கடல்கள் உலகில் பல. ஆனால், அவை அனைத்தையும், இணைத்துப் பார்த்தால் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103404

அயினிப்புளிக்கறி -கடிதங்கள்
  அயினிப்புளிக்கறி [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,   நலமா? இங்கு எல்லோரும் நலம். கடைசியாக அரசியல்சரிநிலைகள் கட்டுரை பற்றி எழுதிய கடிததிற்கு பின் இப்பொழுதுதான் எழுதுகிறேன். உங்களுடைய அயனிப்புளிக்கறி சிறுகதை படித்தேன். மனதிற்குள் எண்ணங்கள் விரிய ஆரம்பித்து விட்டது. சில கட்டுரைகள் அல்லது கதைகள் படிக்கும் போது உள்ளுக்குள் இருக்கும் ஆன்மாவின் குரல் அசிரீரியாக என் மனச்செவியில் விழும். இக்கதை ஏற்படுத்திய உள்ளுணர்வு எனக்கு சில காலத்திற்கு முன் ஏற்பட்டது. இக்கதையை படித்து முடிக்கும் போது அத்தருணம் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103398

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49
ஏழு : துளியிருள் – 3 அரண்மனைக்குள் அபிமன்யூவும் பிரலம்பனும் நுழைந்தபோதே ஸ்ரீதமர் அவர்களைக் காத்து நின்றிருந்ததுபோல இரு கைகளையும் நீட்டி விரைந்து வந்து அபிமன்யூவின் வலக்கையை பற்றிக்கொண்டார். அவன் முகமன் உரைத்து தலைவணங்குவதற்குள் “உங்களிடம் பேச வேண்டியுள்ளது, வருக!” என்றார். கைபற்றியவாறே அழைத்துச் சென்று அமைச்சு அறைக்குள் நுழைந்தார். அங்கே சுதமரும் தமரும் அமர்ந்திருந்தனர். அபிமன்யூ அவர்களுக்கு பொதுவாக தலைவணக்கம் புரிந்தான். அவர்கள் இருவரையும் அமரும்படி கைகாட்டிவிட்டு ஸ்ரீதமர் கதவை மூடினார். அவருடைய பதற்றம் அபிமன்யூவுக்கு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/103517