Monthly Archive: November 2017

சமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை

அன்புள்ள ஜெ   சமணர் கழுவேற்றம் பற்றி ஆய்வாளர் செங்குட்டுவன் அவர்கள் எழுதியசமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல் நூலை நேற்றுத்தான் வாசித்து முடித்தேன். அதைப்பற்றி இணையத்தில் தேடியபோது 2009 ல் நீங்கள் எழுதிய பழைய கட்டுரையைச் சென்றடைந்தேன். அதில் செங்குட்டுவன் அவர்களின் ஆய்வுமுடிவுகளை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறீர்கள்.   செங்குட்டுவன் அவர்கள் நீங்கள் கூறியதுபோலவே சமணநூல்களையும் வரலாற்றுப் பதிவுகளையும் ஆராய்ந்து சமண மடத்தின் தலைவரையும் விரிவாகப் பேட்டி எடுத்திருக்கிறார். நீங்கள் முன்னர் இத்தரப்பைக் கூறியபோது அதை சற்று அவநம்பிக்கையுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104213

சமணர் கழுவேற்றம்

  அன்புள்ள ஜெயமோகன் சமணர்களைப் பற்றி கொஞ்சம் பழைய கட்டுரை. 1929ல் வந்தது. வாசிப்பதற்கு கஷ்டம். ஆனால் உபயோகமானது http://www.unarvukal.com/index.php?showtopic=11917 ஆனந்த்   அன்புள்ள  ஆனந்த், உபயோகமான இணைப்பு. நான் எப்போதுமே இந்த சமணர் கழுவேற்றம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்பவன் அல்ல. அதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதே என்னுடைய எண்ணம். அது ஒரு நிரூபிக்கப்பட்ட வரலாற்றுத்தகவல் அல்ல, ஓரு தொன்மம் மட்டுமே. அதை அரசியல் காரணங்களுக்காக வரலாற்றுத்தகவலாக ஆக்குகிறார்கள். எந்த ஒரு வரலாற்றுத்தகவலுக்கும் அதை மறுக்கிறவர்களிடம் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4574

வீரான் குட்டி -கடிதங்கள்

  ஜனனி ———– ஓர் அழகிய சிற்பத்தை மீண்டும் செதுக்கி வெட்டவெளியில் ஒரு சிற்பத்தை நிறுவிக் கொண்டிருக்கிறேன் உன்னைத் தீண்டும் போதெல்லாம்   நுண் வடிவ சிற்பங்கள் உருக் கொள்கின்றன ஒவ்வொரு கணமும்       பிரபு மயிலாடுதுறை     அன்புள்ள ஜெ,   வணக்கம். வீரான் குட்டியின் கவிதைகள் மிகவும் பிடித்திருந்தன. குறிப்பாக, பார்க்காதது போல…, தழுவுதல், படிப்பு முதலியன.   இதேபோல் இசைத்தன்மையைப் புறக்கணித்து மலையாளத்தில் எழுதும் வேறு கவிகள் உளரென்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104063

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 77

எட்டு : குருதிவிதை – 8 யமுனைக்கரையில் இருந்த பூர்வசிலை கரையோரமாக இருந்த ஒரு பாறையைச்சுற்றி அமைந்திருந்த நூறு செம்படவ இல்லங்களால் ஆன சிற்றூர். அதன் நடுவே ஊர்த்தலைவரின் மரத்தாலான இரண்டடுக்கு மாளிகை அமைந்திருந்தது. ஊரைச் சூழ்ந்து முள்மரங்களாலான கோட்டைவேலி. பாறையருகே பிறிதொரு பாறை யமுனைக்குள் நீட்டி நின்றிருக்க அதன் முனையில் படகுத்துறையை அமைத்திருந்தனர். அங்கிருந்து சேற்றுத்தடமாக கிளம்பிச்சென்ற பாதை காட்டுக்குள் புதைந்தது. படகுகள் ஒவ்வொன்றாகவே கரையணுக முடிந்தது. அர்ஜுனனும் நிர்மித்ரனும் சதானீகனும் இறங்கி அங்கிருந்த சிறிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104151

கருத்தியலில் இருந்து விடுதலை

    அன்புள்ள  ஆசானுக்கு,   நலம் தானே ? .   இந்த  ஆண்டின் கடைசி புனைவாக   ” பின் தொடரும் நிழலின் குரல்” நூலை வாசித்து முடித்தேன் . போன வருடம் காந்தியம்  பற்றி  உங்கள் கட்டுரைகளை படித்து காந்தி குறித்தும் காந்தியவாதம்  குறித்தும் தெரிந்து கொண்டேன்.இந்த வருடம் கம்யூனிசத்தின் கட்டுமானத்தை இந்த  நூல் வழியாக தெரிந்து  கொள்ள முடிந்தது.   என்னால் அதை சீராக வாசிக்க முடியவில்லை. பல இடங்களில் அதை நிறுத்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104183

ரமேஷ் பிரேதன் அமேசானில்

  ரமேஷ்பிரேதனின் நாவல் ஐந்தவித்தான் மின்னூலாக அவருடைய நண்பர் விமலாதித்த மாமல்லனால் அமேஸான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. * ரமேஷ் பிரேதன் தமிழில் முக்கியமான மீபுனைவு எழுத்தாளர்களில் ஒருவர். ஓர் உதாரணம் மூலம் அவருடைய புனைவுலகின் அடிப்படை இயல்பை விளக்கலாம். ராஜராஜ சோழன் தமிழ் வரலாற்றில் ஒளிமிக்க மன்னர். ஆனால் குமரிமாவட்டத்தைப் பொறுத்தவரை இங்கே அவர் படையெடுப்பாளர். இங்கிருந்த அரசகுலங்களை அழித்தவர். தனிப்பண்பாடுமேல் தாக்குதல் நடத்தியவர் அப்படியென்றால் வரலாறு என்பது என்ன? அதற்கு ஓர் ஒற்றைப்படை வடிவம் இருக்கமுடியுமா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104197

புரட்டாசி பட்டம்

  அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,   வணக்கம். நலம். தாங்களும் குடும்பத்தினர்களுக்கும் நலம் விளைய பிராத்தனைகள்.     மாதங்கள் உருண்டோடிவிட்டது சிறுக சிறுக மேன்படுத்தி, மனதளவில் மேலும் பக்குவப்பட்டு புரட்டாசி பட்டத்திற்கு உளுந்து, கொள்ளு மற்றும் நெல் மானாவாரியில் பயிரிட்டுள்ளோம். 2017 ஆயுத பூஜையில் கைப்பெட்டிக்கு அருகில் களைக்கொத்தி வைத்து ஆசிர்வாதம் பெற்றோம் :)     தொடர் திருட்டு, கேபிள் இரண்டு முறை, தகடுகளிலிருந்த சிறு கேபிள் ஒரு முறை பின் செயலி பேட்டியே சேதமாக்கப்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104054

மெல்பனில் ஜெயகாந்தன் மறுவாசிப்பு

மெல்பன் வாசகர் வட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் ஜெயகாந்தனை தேடித்தேடிப்படிப்பதையும் அறியமுடிந்தது. அதற்கான வாயிலை மெல்பன் வாசகர் வட்டம் திறந்துகொடுத்திருக்கிறது என்ற மனநிறைவுடன் குறிப்பிட்ட மூன்று கதைகளையும் நாற்பத்தியைந்து வருடங்களின் பின்னர் எனது ஊருக்கு ரயிலில் திரும்பி வரும்போது மீண்டும் படித்தேன். ஒரு பகல்நேர பசஞ்சர் வண்டி என்ற தலைப்பிலும் ஜெயகாந்தன் ஒரு நல்ல சிறுகதை எழுதியிருக்கிறார். வாசகர் வட்டத்தின் சந்திப்பிலிருந்து விடைபெறும்பொழுது, கனடாவில் வதியும் ஜெயகாந்தனதும் எனதும் நல்ல நீண்ட காலநண்பர் கனடா மூர்த்தி இயக்கித்தயாரித்த உலகப்பொதுமனிதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104192

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76

எட்டு : குருதிவிதை – 7 முதற்காலையிலேயே அர்ஜுனனிடமிருந்து செய்தி வந்தது. சதானீகன் உப்பரிகையில் நின்று மதுராவை நோக்கிக்கொண்டிருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் ஆலயங்களுக்கோ கோட்டைமுகப்புக்கோ செல்லும் வழக்கமிருந்தது. ஆனால் மதுரா இருளில் அச்சமூட்டியது. படி ஏறி வரும் ஏவலனின் காலடியோசைகளைக் கேட்டு அவன் திரும்பி நோக்க அவன் வந்து தலைவணங்கி “ஒளியெழுந்ததும் கிளம்பவேண்டும் என்று இளைய அரசரின் ஆணை” என்றான். தலையசைத்த பின்னர்தான் அவன் உள்ளம் பதற்றம் கொண்டது. செய்தி வந்திருக்கிறது என்று அதற்குப் பொருளா? “இளையவனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104147

எடிசன் நூலகம்

  அன்பின் ஜெமோ ,   நலமா? . வெகு நாட்களுக்குப் பிறகு கடிதம் எழுதுகிறேன். கடந்த 3 மாதங்களாக   நியூ ஜெர்சி ,எடிசனில்  வாழ்ந்துவருகிறேன் . மனைவி இங்கு வேலை செய்வதால் இந்தியாவில் செய்த வேலையை விட்டு இங்கு வந்தேன். இன்னும் வேலை தேடும் படலம் போய்க்கொண்டிருக்கிறது. எடிசன் இந்தியா மக்கள் நிறையபேர் வசிக்கும் இடமும் கூட. பெருவாரியான நேரம் எடிசன் பொது  நூலகத்திலேயே  இருக்கிறேன். அருமையான நூலகம் .  ஆங்கிலத்திலும்  புத்தகங்களை வாசிக்கப் பழகிக்கொண்டிருக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/104044

Older posts «