Daily Archive: October 31, 2017

அஞ்சலி: மேலாண்மை பொன்னுச்சாமி

மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களை நான் 1992ல்  திருவண்ணாமலையில் பவா செல்லத்துரையின் இல்லத்தில் சந்தித்தேன். அன்று திருவண்ணாமலையில் நடந்துகொண்டிருந்த கலையிலக்கிய இரவு இடதுசாரிகளின் திருவிழா. அதில் என்னுடைய ’திசைகளின் நடுவே’ என்னும் தொகுதி வெளியிடப்பட்டது. அவ்விழாவை ஒட்டி நிகழ்ந்த கருத்தரங்கில் பேசுவதற்காக  மேலாண்மை பொன்னுச்சாமி வந்திருந்தார். மிக எளிமையான தோற்றம். மேலாண்மறைநாடு என்னும் சிற்றூரில் மளிகைக்கடை வைத்திருந்தார். மளிகைக்கடைக்காரருக்குரிய அனைத்துமே அவரிடம் அமைந்திருந்தன. அனைவரிடமும் பாந்தமான சிரிப்பு. நட்புத்தோரணை. எதையும் உடனே விலைவிசாரித்துக்கொள்ளும் இயல்பு. எல்லாவற்றையும் லௌகீகமாக மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103454/

மையநிலப் பயணம் – 7

ஓர் ஊரிலிருந்து விட்டுச்செல்வதென்பது தனிமையும் துயரும் தரும் அனுபவம். ஆனால் இத்தகைய பயணங்களில் அப்படி அல்ல. இது இன்னொரு ஊருக்கு, இன்னொரு வரலாற்றுக்கு. ஆகவே ஒரே ஊரில் ஒரே வரலாற்றுச்சூழலில் திளைத்துக்கொண்டிருப்பதான உணர்வே எழுகிறது. பயணநாட்கள் முழுக்க ஒரே கனவில் நீடித்திருப்பதுதான் முதன்மையான பரவசம். உண்மையில் கிளம்பி சிலநாட்களுக்குப்பின்னர்தான் அந்த மனநிலை வரும். ஊர் மறந்துபோய்விடும். இருக்குமிடம் நிலைகொள்வதுமில்லை. காற்றில் பறந்துகொண்டிருக்கும் இறகு போல உணர்வோம். அதற்கு இன்றியமையாதது ஊருடனுள்ள தொடர்புகளை முடிந்தவரை குறைத்துக்கொண்டு பயணம் செய்தல். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103438/

மையநிலப்பயணம் கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு, நலம், நலம் அறிய ஆவல்.  என் முந்தைய கடிதத்தையும் தங்களின் சில வரி பதிலுடன், தளத்தில் கண்டேன்,, http://www.jeyamohan.in/103048#.WfMdVVtL_IU நன்றி.  நாமளும் எழுத்தாளர் ஆயிட்டோம்ல என்று நினைத்துக்கொண்டேன், புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல்.  நிற்க. மையநிலப்பயணத்தில் தங்களுடன் சேர்ந்து நானும் பயணிக்கிறேன், ராஜமாணிக்கமும், கிருஷ்ணனும் தங்களுடன் வருவது எனக்குள் இன்னும் பொறாமையை அதிகமாக்குகிறது, இரண்டு டவேராக்களா??  இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.  தயவு செய்து தங்கள் அடுத்த பயணத்தில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் என் வயித்தெரிச்சல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103410/

அயினிப்புளிக்கறி -கடிதங்கள்

அயினிப்புளிக்கறி [சிறுகதை] வணக்கம்.   எடுத்த எடுப்பில் உங்களின் “அயினிப் புளிக்கறி” தான் படித்தேன். அயினி என்றொரு மரம் இருப்பதுவே இதில்தான் தெரிந்தது.மரத்தின் மீதான பாசம் என்பதில் “எங்க அம்மா” என்று தான் வளர்த்த மரத்தை மனம் நெகிழ அரவணைத்துக் கொள்ளும் பாரதிராஜா படக் காட்சியும், வண்ணதாசனின் “ஒரு மரமும் சில மரங்கொத்திகளும்” விகடன் கதையும். தாய் இதழில் நான் எழுதிய “நேசத்திற்கு மரணமில்லை” என்ற கதையும் உடனடியாக  ஞாபகத்திற்கு வந்தன. நம் வீட்டில் நாம் வளர்க்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103396/

கே ஜே அசோக்குமார் படைப்புகள்

  அன்புள்ள ஜெ. அவர்களுக்கு ‘விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள்’ பகுதியில் ‘பட்சியின் வானம்’ இணையத்தில் அதிகமும் கட்டுரைகள் தான் உண்டு. சிறுகதைகளை வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு சொல்வனம் இணையப் பக்கத்தையும், சிறுகதைகள் கொண்ட என் இணைய பக்கத்தையும் இணைத்திருக்கிறேன். நன்றி, கே.ஜே.அசோக்குமார். சொல்வன பக்கம்: http://solvanam.com/?author_name=kjashokkumar சிறுகதைகளின் சுட்டி: https://kjashokkumar.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88   கே ஜே அசோக் குமார்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/103408/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47

ஏழு : துளியிருள் – 1 நள்ளிரவில் அரண்மனையில் இருந்து சிற்றமைச்சர் சந்திரசூடர் வந்து துயிலில் இருந்த பிரலம்பனை எழுப்பினார். அவன் ஏவலனின் அழைப்பை துயிலுக்குள் கேட்டுக்கொண்டிருந்தான். அன்னை அவனை அழைப்பதாகவே தோன்றியது. வழக்கமாக காவல்பணிக்கு அவன் செல்லவேண்டிய பொழுது அணையும்போது அன்னைதான் அவனை தட்டி எழுப்புவாள். பெரும்பாலும் அது இளங்குளிர் போர்வையை கதகதப்பாக்கியிருக்கும் முன்விடியல். அவன் உடலை சுருட்டிக்கொண்டு முனகுவான். அவள் குரலில் எரிச்சல் ஏறிக்கொண்டே இருக்கும். அவன் சொற்களை புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது வசையென ஆகிவிட்டிருக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103433/