Daily Archive: October 30, 2017

மையநிலப் பயணம் -6

  பயணங்களில் நீண்டநேரம் காரில் அமர்ந்திருப்பது எப்போதும் சோர்வும் சலிப்பும் அளிப்பது. கார் ஒரு சிறிய புட்டி. அதற்குள் உலகம் இல்லை. உரையாடல்கள் வழியாக வெளியே விரியவேண்டும். அதோடு விழிகள் வழியாக அந்நிலத்தை நோக்கி விரியவேண்டும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொள்ளவேண்டும். நிலக்காட்சிகளை காருக்குள் அமர்ந்து நோக்கிச் செல்கையில் ஒரு மோனநிலை கூடுகிறது. பலர் உடனிருந்தாலும் தனிமை. இத்தகைய நோக்குகள் ஒரு குறுக்குவெட்டென நாம் செல்லும் நாட்டின் சித்திரத்தை நமக்கு அளிக்கின்றன. பலசமயம் நாம் நோக்கும்போது எந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103367

அயனிப்புளிக்கறி – கடிதங்கள்

அயினிப்புளிக்கறி [சிறுகதை] அன்புடன் ஆசிரியருக்கு, மிக அழகான காதல். இளமையில் முரண்டி நிற்பதும் கசப்பை நிறைப்பதும் தான் கனிந்து கிளையில் இருந்து தானாக உதிரும் கனியாகிறதா? ஆச்சியும் அப்படித்தான் நிற்கிறாள். சாலையை விட மேடான வேலி. ஆசானும் சட்டென உதிர்ந்து விடுகிறார். முதலில் அப்படி சட்டென விலகிச் செல்ல முடிவதும் அதை அவர் குடும்பம் இயல்பாக ஏற்பதும் ஒரு அமைதியின்மையை உருவாக்கின. ஆனால் அப்படி நடப்பது மட்டுமே இரு தரப்பிலும் காயங்களைக் குறைக்கிறது. திரும்பி அதை எண்ணி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103363

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46

ஆறு : காற்றின் சுடர் – 7 அபிமன்யூ சீசாருவுடன் துவாரகையின் மையக் களிக்கூடத்திற்குச் செல்வதற்குள் உபயாதவர்கள் ஒவ்வொருவராக அங்கே வந்து கூடத் தொடங்கிவிட்டிருந்தனர். சாரகுப்தனும் பரதசாருவும் சாருசந்திரனும் இடைநாழியிலேயே அவனை எதிர்கொண்டனர். “இளையோனே, உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். மெய்யாகவே நீ வரக்கூடும் என்னும் உள்ளுணர்வு எங்களுக்கு இருந்தது” என்றான் சாரகுப்தன். “உன் திருமணத்திற்கு இங்கிருந்து அனைவரும் கிளம்பினாலென்ன என்று நான் எண்ணினேன். அன்னை அதற்கு அரசியல் சூழல் உகந்ததாக இல்லை என்று சொன்னார்.” அபிமன்யூ “ஆம், திருமணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103366