Daily Archive: October 29, 2017

அஞ்சலி: புனத்தில்

நான் கேரளத்தில் இக்கா என அழைத்தவர்களில் புகழ்பெற்றவர்கள் இருவர். புனத்தில் குஞ்ஞப்துல்லா முதன்மையானவர். இன்னொருவர் வி.எம்.சி.ஹனீஃபா. புனத்திலை நான் அறிமுகம் செய்துகொண்டது 1986ல். அப்போது அவர் வடகரையில் மருத்துவராக இருந்தார். காசர்கோடு அருகே நடந்த ஒரு இலக்கியக்கூட்டத்தில் அவர் சிறப்புப் பேச்சாளர். அது மகாகவி குட்டமத்து என்னும் வடகேரள மரபுக்கவிஞரின் நினைவுநாள் விழா. கேரளத்தில் அன்றெல்லாம் இறந்துபோன, அல்லது எழுபது கடந்த எல்லா செய்யுளெழுத்தாளர்களும் மகாகவிகள்தான்   புனத்தில் பேசினார். “மகாகவி குட்டமத்தை நான் நன்றாகவே அறிவேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103350/

குழந்தை இலக்கியம் -நிறைவு

மதிப்பிற்குரிய ஜெ, நீங்கள் எனது விருப்பத்தை உங்கள் தளத்தில் பதிவிட்ட பிறகு பல நண்பர்கள் உங்கள் தளம் மூலமாகவும் மற்றும் நேரிடையாகவும் என்னை தொடர்பு கொண்டு புத்தக அட்டவணையை பகிர்ந்து கொண்டார்கள். நண்பர் வேணுவும் நானும் அவர்களின் பரிந்துரைகளை அட்டவணை படுத்த ஆரம்பித்துள்ளோம். எனது விருப்பம், நாம் இந்த புத்தகங்களை வாசிப்பு திறன் (வயது) வாரியாக பிரிக்க வேண்டும். ஆரம்ப பள்ளி ஆசிரியர்களோ அல்லது குழந்தை புத்தக எழுத்தாளர்களோ இதற்கு உதவினால் நன்றாக இருக்கும். இப்படி நம்மால் வாசிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103185/

மையநிலப் பயணம் – 5

நர்மதைக்கரையில் ஜபல்பூரிலிருந்து 15 கிமீக்கு அப்பால் உள்ள பேடாக்கட் என்னும் இடம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே முக்கியமான சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு நர்மதை ஓர் அருவியாக விழுந்து இருபுறமும் ஓங்கி எழுந்துள்ள சலவைக்கல் மலைகளை ஏறத்தாழ நூறு அடி ஆழம் வரை அரித்துச் செல்கிறது. தொடர்ச்சியான அருவிப் பொழிவாலும் ஆற்றுப்பெருக்காலும் உருவாக்கப்பட்ட சலவைக்கல் வடிவங்கள் இங்கே சுற்றுலாப்பயணிகளை இழுத்துவருகின்றன.   பகல் முழுக்க காரில் பயணம் செய்து பேடாகட்டுக்கு நாங்கள் மாலை 7 மணிக்கு வந்து சேர்ந்தோம்..பேடாகட்டிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103336/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 45

ஆறு : காற்றின் சுடர் – 6 சத்யபாமையின் அறைக்குள் அவள் இளைய மைந்தர்களான அதிபானுவும் ஸ்ரீபானுவும் பிரதிபானுவும் இருப்பார்கள் என்று அபிமன்யூ எண்ணியிருக்கவில்லை. அவனை உள்ளே அழைத்த ஏவலன் அதை அறிவிக்கவில்லை. அதில் மட்டுமல்ல அங்கே அனைத்திலும் முறைமைக்குறைவு இருந்தது. அவனை அழைத்துவந்த அமைச்சர் ஏவலனிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பிச்செல்கையில் அவன் எவரை சந்திக்கவேண்டுமென்று ஏவலனிடம் சொல்லவில்லை. ஆகவே ஏவலனே அவனிடம் “இளவரசே, தங்கள் வருகை நோக்கம் என்ன?” என்று கேட்டான். அவன் சற்று எரிச்சலுடன் “மூத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103334/