Daily Archive: October 28, 2017

மையநிலப் பயணம் -4

1857-ல் தான் ஜான்சிராணி லக்ஷ்மிபாயின் தலைமையில் இந்திய சிப்பாய்க்கலகம் நிகழும்போது குவாலியரிலிருந்து பிரிட்டிஷ் ராணுவம் கேப்டன் ஜேம்ஸ் ஃபோர்ஸித்  தலைமையில் சுபேதார் மேஜர் நாதுராம் பொவார் துணைவர ஜான்சி நோக்கிச் சென்றபோது வழியில் சிறிய மலைமேல் அமைந்த சமநிலம் ஒன்றைக் கண்டடைந்தனர். உண்மையில் அனல் கக்கும் கோடையில் அவர்கள் படைவீரர்கள் மயங்கி விழுந்து இறந்துகொண்டிருந்தபோது இங்கிருந்த பழங்குடி ஒருவரால் இந்த இடம் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. பிரிட்டிஷ் படைகளுக்கு உகந்த தட்பவெப்ப நிலைகொண்டது இப்பகுதி என்று உடனடியாகக் கண்டடையப்பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103309

கடைசிமுகம் -கடிதம்

கடைசி முகம் – சிறுகதை அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, கடைசி முகம் கதை குறித்த நந்தகுமாரின் கடிதம்[ கடைசி முகம்- கடிதம் ]படித்து பின் அக்கதையைப் படித்தபின் நேற்று பலவித எண்ணங்களில் இருந்தேன்.  இந்த கடிதம் உங்களுக்கு எழுதும் போதே எழுதாதே என்றொரு எண்ணமும் – ஒரு அச்சமும்.  கனவில் இருக்கும் வரை அது அதன் மதிப்பிழப்பதில்லை.  கனவை நனவிற்கு கொண்டு வந்து நோக்கும் போது தர்க்கம் அதை மதிப்பற்றதாக, அர்த்தமற்றதாக, நீர்த்துப்போனதாக ஆக்குகிறது.  போதையில் இருந்த போது அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103082

குழந்தையிலக்கியம் – தொகுப்பு

குழந்தையிலக்கியம் பட்டியல்கள் குழந்தையிலக்கியம் – கடிதம் அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். நமலறிய ஆவல். குழந்தை இலக்கியம் குறித்த கடிதங்களை தங்கள் தளத்தில் காண்பதற்கு பெரும்மகிழ்ச்சியாக உள்ளது. சிறார் இலக்கியம் என்று வகைமை தொடர்ச்சியாக கண்டுகொள்ளப்படாமல் இருக்கவே செய்கின்றது. சமீப வருடங்களில் அதற்கான வெளிச்சம் கூடிக்கெண்டே போவது கண்டு மகிழ்ச்சி. ஆனாலும் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் ஏராளம். குழந்தைகளை வாசிக்க வைத்தல், எழுத்தாளர்களுக்கான பயிற்சி பட்டறைகள், குழந்தைகளை எழுத வைத்தல். குழந்தைகளுக்கான ஓவியர்களை உருவாக்குதல், அரசிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103181

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44

ஆறு : காற்றின் சுடர் – 5 சிற்றமைச்சர் சந்திரசூடர் “இவ்வழி” என்று சொல்லி அபிமன்யூவையும் பிரலம்பனையும் அரண்மனையின் இடைநாழியினூடாக அழைத்துச்சென்றார். அபிமன்யூ மெல்ல உளமகிழ்வடைந்தான். “ஒவ்வொன்றும் நினைவிலிருந்து எழுந்து வருகின்றன, பிரலம்பரே. மழைவிழுந்து பாலைநில விதைகள் முளைத்தெழுவதுபோல” என்றான். கைகளை விரித்து “காடு மண்டுகின்றது. பூத்து விரிகின்றது” என்றான். “அந்த வரி பாடுவதற்குரியது” என்றான் பிரலம்பன். “ஆம், ஏதோ சூதர் சொன்னது” என்றான் அபிமன்யூ. “சூதர்கள் முழு வாழ்க்கையையும் முன்னரே பாடிவிடுகிறார்கள். நாம் மறுபடியும் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103305