Daily Archive: October 25, 2017

அஞ்சலி ஐ.வி.சசி

  ஐ.வி.சசியை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவருடைய மாணவர் ஒருவர் இயக்கிய சிறிய படம் ஒன்றுக்கு நான் எழுதவேண்டும் என்று கோரி சந்திக்க அழைத்திருந்தார். நான் அவரை கோவளம் கடற்கரையில் ஒரு விடுதியில் சந்தித்தேன். வழக்கமான வெள்ளை ஆடை. வெள்ளைத்தொப்பி. ஆனால் நிதானமான தளர்ந்த நடை   நான் கல்லூரிக்காலம் முதலே அவருடைய ரசிகன். அன்றைய மலையாள திரை ரசிகர்களை கொந்தளிக்க வைத்தவை அவருடைய படங்கள். அவரை தமிழகம் முழுக்க அறியச்செய்த படம் அவளுடே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103232/

மையநிலப் பயணம் – 1

  இவ்வாண்டு எழுதழல் எழுதுவதற்கு முந்தைய இடைவெளியில் ஒரு நீண்ட பயணம் செய்யலாமென்று கிருஷ்ணனிடம் சொன்னேன். எழுதி எழுதி கை ஓய்ந்த நாள் ஒன்றில் டீ குடிப்பதற்காக வீட்டிலிருந்து பார்வதிபுரம் சந்திப்புக்கு நடந்து சென்றபோது பதினைந்து நாட்களுக்கும் மேலாக ஒரே வீட்டில் தங்கி ஒரே வழியில் சென்று ஒரே டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. கிருஷ்ணனை அழைத்து எங்கே என்று தெரியாத ஊரில் எவருமே தெரியாத சூழலில் டீயா காப்பியா என்று தெரியாத ஒன்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103224/

இரு வாசகர்கள்

அன்புள்ள ஜெயமோகன், நலமா? தங்களின் “அறிதலும் தெரிதலும்” பற்றிய கட்டுரையை படித்தேன். 23 வயது இளைஞன் நான். தகவல்களின் ஒரு பெரிய அலை (noise என்றே அதை சொல்லவேண்டும்) என்னை எப்போதும் பின்தொடர்வதாக அறிகிறேன். தெரிந்தவை யாவும் அறிவல்ல என்னும் எண்ணம் முன்னமே எனக்குள் இருந்தபோதிலும், அறிதலின் வேர் கிடப்பது எங்கே என்று உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இன்று யோசித்து பார்க்கையில் என் மன அறை ஒரு பெரும் குவியல்கூடமாக மட்டுமே உள்ளது தெரிகிறது. நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103036/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 41

ஆறு : காற்றின் சுடர் – 2 அபிமன்யூ இளைய யாதவரின் அறைவாயிலை அடைந்து ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து நின்றான். வாயிற்காவலன் உள்ளே சென்று மீண்டு அவன் உள்ளே செல்லலாம் என்று கைகாட்டினான். அறைக்குள் நுழைந்ததும் அவனுக்குப் பின்னால் கதவு மெல்ல மூடிக்கொண்டது. அவ்வசைவு தன்னை பலவற்றிலிருந்து அறுத்து விடுவிப்பதை அவன் உணர்ந்தான். அச்சிறிய அறைக்குள் அவரும் அவனும் மட்டுமே இருந்தார்கள். அவர் தாழ்வான மஞ்சத்தில் கால் நீட்டி அமர்ந்து வலப்பக்கமிருந்த சுவடிகளை எடுத்துப் படித்து இடப்பக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103126/