Daily Archive: October 24, 2017

துபாய் அபுதாபி -நான்குநாட்கள்

மலபாரைச் சேர்ந்த முகம்மது ரஃபீக் பதினைந்தாண்டுகளாக எங்கள் நண்பர் வடகேரள இஸ்லாமியர்களுக்கே உரிய ஆழ்ந்த நட்புணர்வும் திறந்த உள்ளமும் கொண்டவர். துபாயில் இந்திய அராபிய கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். எளிய நிலையில் இருந்து வாழ்க்கையில் முன்னேற துபாய் அவருக்குப் பெரிதும் உதவியுள்ளது. அவர் நடத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக ஆறாண்டுகளுக்குமேலாக என்னை அழைத்துக்கொண்டிருந்தார். இம்முறை செல்லலாம் என்று நான் முடிவெடுத்ததற்கு காரணம் அரேபியக்கவிஞர் ஒருவரின் நூல்வெளியீடும் அது குறித்த ஒரு கருத்தரங்கமும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தமை. ஆனால் சுத்தமாக நிகழ்ச்சியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103200

பனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்

ப‌னிம‌னித‌ன் ப‌டித்து முடித்தேன். ம‌ன‌ம் முழுக்க கிம் தான் இருக்கிறான். கிம் மூலமாக ஒரு அத்வைத உப‌ந்யாச‌ம் கேட்ட உணர்வு. இது பெரிய‌வ‌ர்க‌ளுக்கான க‌தைதான். விசித்திர உல‌கின் வில‌ங்குக‌ளும் ப‌ற‌வைக‌ளும் Narniya, the Last airbender, Iceage3, the croods, ப‌ட‌ங்க‌ளைப்போன்று ப‌ட‌மாகலாம். த‌ங்க‌ளிட‌மிருந்து இப்ப‌டி ஒரு Fantasy யை நான் எதிர்பார்க்க‌வில்லை. த‌த்துவ‌ம் தூக்க‌லாக இருந்தாலும், அறிவிய‌லோடு கற்ப‌னையும் க‌ல‌ந்து ப‌னிம‌னித‌னின் உல‌கை நீங்க‌ள் வ‌ர்ணித்த வித‌ம் அருமை. என‌து க‌ற்ப‌னைத்திற‌ன் மீதும் என‌க்கு இப்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102893

இணையத்தில் நூல்கள்

  அன்புள்ள ஜெயமோகன், சீ.முத்துசாமியின் புத்தகத்தை விற்பனைக்கு ஆன்லைனில் ஏற்றி இருக்கிறோம். இதை தங்கள் வலைத்தளத்தில் வெளியிடவும். அன்புடன் பிரசன்னா ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000026225.html போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234 / 9445 979797 ( Paytm Available ) அமேசான் ஆன்லைனில் வாங்க : https://www.amazon.in/dp/B076P58PZ6?_encoding=UTF8&%2AVersion%2A=1&%2Aentries%2A=0&portal-device-attributes=desktop ஹரன் பிரசன்னா  அன்புள்ள ஜெ, வணக்கம். கீழுள்ளது, என் வலைத்தள முகவரி. “விஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்” பதிவுக்கு கீழே, நீங்கள் பின்னிணைப்பில் கொடுத்துள்ள இரு கதைகள் மட்டும் இல்லாமல் எனது வேறு கதைகளையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103216

காட்டைப்படைக்கும் இசை -கடிதங்கள்

காட்டைப்படைக்கும் இசை அன்பின் ஜெமோ   வணக்கம்.காட்டைப் படைக்கும் இசை”வாசித்தேன்.   சமகால நிகழ்வுகளில்,உணர்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாமல்  தப்பிப்பது என்பது இன்றைய இணைய உலகில் மிகக் கடுமையான சவாலாகவே உள்ளது.   அதனை எப்படி இயல்பாகத் தள்ளிவிட்டு ஒட்டுமொத்தப் பார்வையில் இலக்கியவாதி ,இலக்கிய வாசகன் செயல்பட வேண்டுமென்று வேண்டுமென்று  அழகாக எழுதியிருக்கிறீர்கள்.   தனிப்பட்ட முறையில் நான் பெரும்பாலான இத்தகைய சமகால நிகழ்வுகளில் பங்கேற்பதேயில்லை.யாராவது விவாதித்தாலும் அதில் எனக்கு எந்த சுவாரசியமும் இருப்பதில்லை.எத்தனை கோணங்களில் திரும்பத் திரும்ப இவற்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103039

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 40

ஆறு : காற்றின் சுடர் – 1 இரு பாங்கர்களும் ஓசையின்றி தலைவணங்கி இரு பக்கங்களிலாக விலகிச் செல்ல கதவின்முன் அபிமன்யூ உள்ளமும் உடலும் செயலற்றவனாக நின்றான். கணம் கணமென ஓடிய நெடுங்காலத்திற்குப்பின் தன்னினைவு கொண்டான். பெருமூச்சுவிட்டு தன் அகத்தை அசைவு கொள்ளச் செய்தான். கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைய வேண்டுமென்று எண்ணினால் கைகள் அவ்வெண்ணத்தை அறியாது குளிர்ந்து தொங்கிக் கிடந்தன. உள்ளே எவரும் இல்லை என்ற எண்ணத்தை அவன் அடைந்தான். மறுகணமே அவ்வெண்ணம் பெருகியது. ஏதோ பிழை நிகழ்ந்துவிட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103124