Daily Archive: October 21, 2017

விஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்

வரும் விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 16,17 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. அதில் ஒருங்கு செய்யப்பட்டுள்ள இருநாள் கருத்தரங்கை ஒட்டிய நிகழ்ச்சிகளை முன்னரே வகுத்துள்ளோம். சந்திப்பில் கலந்துகொள்ளும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசகர்கள் முன்னரே வாசித்துவிட்டு வந்து அவர்களுடன் விவாதிக்கும்பொருட்டு இந்த ஏற்பாடு. இம்முறை மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்கள் விருதுபெறுகிறார்கள். அவருடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நிகழும். அவருடைய நூல்களை கிழக்கு பதிப்பகத்தில் இருந்தும் உடுமலை தளத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம் மேகாலய எழுத்தாளரான ஜனிஸ் பரியத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103106/

காட்டின் இசை -கடிதங்கள்

காட்டைப்படைக்கும் இசை ஜெமோ, சமகாலத்தில் வாழ்வதென்றால், கடந்தகால பிரஞ்கையற்று இருப்பதென நான் எண்ணிய காலங்களுண்டு. பெரும்பாலும் வாசிப்பற்ற அல்லது அப்படியே வாசித்தாலும் ஒன்றை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத இருண்மைகளே வாழ்க்கையென்று உழன்ற காலமது. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஒரு பெரும் திறப்பாக அமைந்திருந்தார். “தன்னம்பிக்கை மனிதர்கள் சவங்களுக்குச் சமம்” என்ற அவருடைய பன்ச் lines வசீகரிக்கத்தான் செய்தன. தன்னம்பிக்கை மனிதர்கள் இறந்த காலத்தில் தான் வாழ்கிறார்கள். அவர்களால் சமகாலத்தில் வாழவோ, அது தரும் பிரச்சினைகளை முழுமையாக கையாளவோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102920/

சீ.முத்துசாமி குறுநாவல்கள் பிரசுரம்

இனிய ஜெ, சீ. முத்துசாமி அவர்களின் மூன்று குறுநாவல்களின் தொகுதியை அவரது அனுமதி பெற்று உடுமலை பதிப்பகம் வாயிலாக மறுபிரசுரம் செய்துள்ளோம். நண்பர்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து நூலைப் பெற்றுக்கொள்ளலாம்.இணைப்பு: https://www.udumalai.com/irulul-alaiyum-kuralgal.htm மிக்க அன்புடன், செல்வேந்திரன்.  

Permanent link to this article: https://www.jeyamohan.in/101921/

ஆழமற்ற நதி -கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு, ‘நிலை’ கொண்டிருக்கும் ‘பாரதத்தின் நதி’ தேடி நிலையில்லா மனிதர்களின் கூட்டமொன்று வருகிறது பிழை நிகர்செய்யப்பட்டுவிடுமென்ற பிழையான எண்ணத்துடன். கதைமாந்தர்களுக்குப் போடப்பட்டிருக்கும் பெயர்களிலிருந்துகூட பலவற்றை விரித்தெடுத்துக் கொண்டே செல்லமுடிகிறது. அவர் நீதிபதி. தன் பணியிலும் தனி வாழ்விலும் அறம் பிறழாது வாழ்ந்தாரா? இல்லை. கண்டிப்பாக இந்த வினை அவரை உருத்து வந்து ஊட்டவே செய்யும். காசிநாதனின் பிள்ளைகள் சங்கரன், ஆறுமுகம் மற்றும் மகள். சங்கரன் பற்றிய குறிப்புகள் குறைவே. இருப்பினும் அவற்றைக் கொண்டேகூட அவரைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103044/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 37

ஐந்து : துலாநிலையின் ஆடல் – 4 அஸ்வத்தாமன் “ஆம், நான் சென்றபோது சல்யர் கிளம்பி பாதிவழி வரை வந்திருந்தார். அவரை சந்திக்க நான் என் தூதனை அனுப்பினேன். வரும் வழியில் கூர்மபங்கம் என்னும் ஊரில் தன் படையுடன் தங்கியிருந்தார். அஸ்தினபுரியின் அரசரின்பொருட்டு அவரைப் பார்க்க விழைவதாக நான் செய்தி அனுப்பினேன். அவர் தங்கியிருந்த பாடிவீட்டில் அச்சந்திப்பு நிகழ்ந்தது. அஸ்தினபுரியின் அரசரிடம் ஒருமுறை சொல்லாடிவிட்டு அபிமன்யூவின் திருமணத்திற்கு அவர் செல்வதே உகந்தது என்று நான் உரைத்தேன்” என்றான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103062/