Daily Archive: October 20, 2017

சென்னை தீபாவளி

  நேற்று தீபாவளி. துபாயிலிருந்து நேராகவே சென்னை வந்துவிட்டேன். சினிமா விவாதம். பகல் முழுக்க கிரீன் பார்க்  அறையில் அமர்ந்து வெண்முரசு எழுதிக்கொண்டிருந்தேன். வெளியே ஓர் உலகிருப்பதே தெரியாது. மத்யப்பிரதேசப்பயணத்திற்கு முன் வெண்முரசு பல அத்தியாயங்கள் முன்னால் சென்றாகவேண்டிய கட்டாயம்.   மாலையில் ராஜகோபாலன் வீட்டுக்குத் தீபாவளிக்குச் செல்லலாம் என்று சௌந்தர் சொன்னார். நண்பர்கள் அனைவரும் அங்கே கூடலாம் என்று. சுரேஷ் பாபுவும் காளிப்பிரசாத்தும் வந்து அழைத்துச்சென்றனர். நாளிதழ்களில் பட்டாசுப் புகையால் சூழியல் பாதிப்பு என்றெல்லாம் வாசிக்கும்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103158

ஆழமற்ற நதி -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ‘ஆழமற்ற நதி’ ரிலீஸான நேரம் முக்கியமான நேரம். மஹாளய பக்ஷத்தில் மஹாளய அமாவாசையில், பலர் தங்கள் முன்னோர்களின் கடன் தீர்க்கின்ற சமயத்தில் இந்த சிறுகதை வெளி வந்தது மிக பொருத்தம். இன்டெர்ஸ்டெல்லார் என்றொரு திரைப்படம். அதன் இயக்குனர் (கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்) எனும் காலத்தின் அம்சத்தை (நாயகனின் தந்தை, நாயகன், நாயகனின் குழந்தை) என்று இணைத்து திரைக்கதையை நகர்த்தியிருப்பார். பாத்திரங்கள் பேசும் வசனங்களை கவனித்தால் காலமே காலத்துடன் உரையாடுவது போலிருக்கும். நமது முன்னோர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102918

எழுத்தாளன் ஆவது

நந்தகுமாரின் கடிதங்கள் விக்ரம், மகாதேவன் அவர்களின் கடிதங்கள் வாயிலாக என்னை அவதானிக்க நினைத்தேன். முதலில் அவர்களுக்கு நன்றி. ஆனால் ஒரு பெரிய அவ நம்பிக்கையில் சிக்கிக் கொண்டிருப்பதைப் போல உணர்கிறேன். ஒரு புனைவெழுத்தானாய் என்னை உணர முயல்கிறேன். ஆனால் நான், என்னுடைய எழுத்துக்கள் உரு பெறும் போது ஒரு ஜெராக்ஸ் நீ! என்று உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பின் மிகுந்த தேக்க நிலைக்கு சென்று விடுகிறேன். உண்மையில் என்னுள் நான் ஒரு எழுத்தாளன் என்ற சுய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103086

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 36

ஐந்து : துலாநிலையின் ஆடல் – 3 சுருதகீர்த்தியும் சுதசோமனும் அணுகிச்செல்லுந்தோறும் படைசூழ்கை தெளிவடையத் தொடங்கியது. படைத்தலைவர்களின் குடில்களிலும் காவலரண் முகப்புகளிலும் மட்டுமே நெய்விளக்குகள் எரிந்தன. சூழ்ந்திருந்த படை முழுமையும் இருளுக்குள் மறைந்திருந்தது. ஆயினும் குறைந்த ஒளிக்குப் பழகிய கண்களுக்கு நெடுந்தொலைவு வரை அலையலையாக பரவியிருந்த மரப்பட்டை பாடிவீடுகளும் தோல் இழுத்துக் கட்டிய கூடாரங்களும் புரவி நிரைகளும் தென்படலாயின. முன் இருட்டிலேயே படை முழுமையும் துயில் கொள்ளத்தொடங்கியிருந்தது. எனினும் அனைவரின் ஓசைகள் இணைந்த கார்வை அவ்விருளை நிறைத்திருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103060