Daily Archive: October 18, 2017

மண்ணுக்கு அடியில்  

    ஆஸ்திரேலியாவில் மண்ணுக்கு அடியில் இருந்த ஒரு சுண்ணாம்புப்பாறைப் பிலத்திற்குள் சென்றதுதான் என் முதல் நிலத்தடி அனுபவம். ஆனால் மிகச்சிறப்பாக ஒளியமைவு செய்யப்பட்ட அந்தக்குகை ஒரு சுற்றுலாத்தலமாகவே தோன்றியது.   இளம்வயதில் அருமனை அருகே ஓடிய ஒரு சிற்றாற்றின் கரையில் இரு சுரங்க வாயில்கள் இருந்தன. திருவிதாங்கூர் அரசகாலகட்டத்தில் அமைக்கப்பட்டு அந்த கால்வாய் வெட்டப்பட்டபோது கைவிடப்பட்டவை. அவற்றுக்குள் இருளும் சேறும் செறிந்திருக்கும். வெளியே சிலர் எவர்சில்வர் டப்பாவால் ஒளியை பிரதிபலித்து உள்ளே காட்ட உள்ளே சென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103064

விண்ணுக்கு அருகில்…

    இந்தியப்பயணம் சென்றுகொண்டிருந்தபோதுதான் லடாக் செல்லும் எண்ணம் வந்தது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை என்பதுதான் கணக்கு. ஆனால் லடாக்தான் இந்தியாவின் வட எல்லை. சொல்லப்போனால் போங்கோங் ஏரி. இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பொது நீர்நிலை அது.   பல திட்டமிடல்களுக்குப்பின் பயணத்தை தொடங்கினோம். இப்பயணத்தில்தான் உலகிலேயே அபாயகரமான சாலைகளில் சென்றோம். சில இடங்களில் பெரிய பாறையில் பேன் ஊர்ந்துசெல்வதுபோல எங்கள் வண்டி சென்றது. காலடியில் அதலபாதாளத்தில் ஆறுகள் வெள்ளிநூலெனச் சென்றன   வழக்கமாக அஞ்சுவதில்லை. லடாக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103067

பாணாசிங் -கடிதம்

அன்புள்ள ஜெ,   இன்றைய கல்வியாளர் ஶ்ரீதரன் அவர்களைப் பற்றிய அஞ்சலிக் குறிப்பில் “முதமுதலாக பரம்வீர் சக்ரா வாங்கிய பாணாசிங் அவர்களின் பெயரால் அமைந்த பள்ளி அவருடையது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாணா சிங் அவர்கள் இன்னும் பணியில் இருக்கும் மூன்று பரம்வீர் சக்ரா அளிக்கப்பட்ட வீரர்களுள் ஒருவர்.   கார்கில் போருக்கு முன்பு வரை பணியில் இருந்த ஒரே பரம்வீர் சக்ரா வாங்கிய வீரர்.   பரம்வீர் சக்ரா  – https://en.wikipedia.org/wiki/Param_Vir_Chakra   பாணா சிங் – https://en.wikipedia.org/wiki/Bana_Singh   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102915

சோபியாவின் கள்ளக்காதலன்

சோஃபியாவின் கடைக்கண் அன்புள்ள ஜெயமோகன் சார், நான் ஒரு சிறந்த இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன், ஆனால் நிச்சயமாக இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்வேன். நான் இளமையில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்ததாலேயே பட்ட கஷ்டங்கள், இப்போது நினைத்தால் சிரிப்பாக உள்ளது. புத்தகம் படித்தால் புத்தி சுவாதீனம் போய்விடும் என்றும் நிறைய படித்ததால் ஒருவன் சீரியல் கில்லர் ஆனான் என்றும் பல தடவை எனக்கு சொல்லப்பட்டுள்ளது. காலையில் அலாரம் வைத்து எழுந்து யாரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103046

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 34

ஐந்து : துலாநிலையின் ஆடல் – 1 கடிவாளத்தைப் பிடித்திழுத்து புரவியை இருமுறை நிலம்மிதித்துச் சுழலச்செய்து நிறுத்தி கையைத்தூக்கி உரத்த குரலில் சுதசோமன் சொன்னான் “நான் நின்றுவிட்டேன். இளையோனே, நான் நின்றுவிட்டேன்” என்றான். முழுவிரைவில் அவன் குரல் கேட்காத தொலைவுக்குச் சென்றுவிட்டிருந்த சுருதகீர்த்தி புரவிக்குளம்படி ஓசை தன்னைத் தொடராததை உணர்ந்து கடிவாளத்தை இழுத்து நிறுத்திச் சுழன்று திரும்பிப்பார்த்தபோது சாலையோரத்து மகிழமரத்தினடியில் சுதசோமன் நின்றிருப்பதைக்கண்டான். “மூத்தவரே, என்ன செய்கிறீர்?” என்று உரக்க கேட்டான். “நான் நின்றுவிட்டேன்” என்று சுதசோமன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/103050