Daily Archive: October 14, 2017

சோஃபியாவின் கடைக்கண்

[சோஃபியா, இஸ்தான்புல் மசூதியின் சுவரோவியம்]   வணக்கம் திரு ஜெயமோகன் இன்று  உங்கள்  தளத்தில்  வந்த  புதிய  வாசகரின்  கடிதம்  படிக்கையில்  நான் வியந்தே போனேன்  நானும்  மருத்துவம்  மூன்றாம் ஆண்டு படிக்கிறேன்.  நானும்  அதே  நிகழ்ச்சிiயில் கமல்  அவர்கள்  பிரகாஷ் ராஜ்  அவர்களுக்கு  அறம்  நூலை  அளித்தபோதுதான்  உங்களைப்   பற்றிஅறிந்தேன். அறம்  தொகுப்பின்  அனைத்துக்  கதைகளையும்  வசித்தபோது  அதுவரை  லார்ட் ஆப் தி ரிங்ஸ்  ஷெர்லாக்  ஹோல்ம்ஸ்  போன்ற  ஆங்கில  நூல்களையே  படித்த  எனக்கு  தமிழ் மொழிக்கு  அது  திறப்பாக   விளங்கியது.  பின்பு  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102887/

கடைசி முகம்- கடிதம்

  கடைசி முகம் எத்தனை முகங்கள், உடல்கள். அதில் முலைகளும், அல்குல்களும். என் வாழ்தலின் கணங்கள் இந்த உடல்களால் நாசி நிரப்புகையில், அகம் மூட்டைப்பூச்சியாய் உள்ளுள் நகர்கிறது. அதன் கூர்மையான உறிஞ்சுக்குழாய் எப்பொழுதும் தகித்துக் கொண்டிருக்கிறது. இரை! இரை! என்று. காமம் ஒரு கவிழ்த்துப் போட்ட கரப்பானைப் போல கால்கள் நடுங்க உணர்கொம்புகள் உராயத் துடித்துக் கொண்டே இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளில் என் முதுகுச் செதில்கள் கொழுத்தியிட்டிருக்கிறது. அதன் ஒவ்வோர் அழுத்தத்திலும் தன்னுணர்வின்றி என்னுள் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102846/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 30

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 8 ஒருகணத்தில் அபிமன்யூ அனைத்திலிருந்தும் முற்றாக பிரிந்து தனித்துவிட்டிருந்தான். மூச்சிரைக்க படிகளிலேறி தன் அறைக்குச் சென்று அங்கே சிறு பேழையில் இருந்த கணையாழிகளை எடுத்துக்கொண்டு படியிறங்குகையில் எட்டாவது படியிலிருந்து கால் எடுத்து அடுத்த படிக்கு வைக்கும்போது என்ன நிகழ்ந்ததென்று அறியாமல் அவன் நின்றுவிட்டான். அவன் உள்ளம் உடலில் இருந்து தனித்து பிரிந்துவிட்டது. படிக்கட்டின் கைப்பிடியை பற்றியபடி மெல்ல அமர்ந்து தன்னுடலெங்கும் பரவி மயிர்க்கால்களைக்கூட அசைவிழக்கச் செய்த செயலின்மையை உணர்ந்தான். அவனைச்சூழ்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102928/