Daily Archive: October 9, 2017

அஞ்சலி- கல்வியாளர் ஸ்ரீதரன்

  தருமபுரி அருகே பாப்பாரப்பட்டி சிலருக்கு நினைவிருக்கலாம். சுப்ரமணிய சிவா தன் பாரதமாதா ஆலயத்தை அமைத்த இடம். அங்கே பரம்வீர் பாணாசிங் மேல்நிலைப்பள்ளி என்னும் தரமான கல்விநிறுவனத்தை நிறுவி நடத்தியவர் திரு ஸ்ரீதரன் அவர்கள். வழக்கமாக கல்விநிறுவனங்களுக்குச் சொந்தத்திலுள்ள எவர் பெயரையேனும் இடுவதே வழக்கம். ஸ்ரீதரன் முன்னுதாரணமாக அமையவேண்டியவர்களின் பெயரே கல்விநிறுவனத்திற்கு போடப்படவேண்டும் என்னும் கொள்கை கொண்டவர். முதமுதலாக பரம்வீர் சக்ரா வாங்கிய பாணாசிங் அவர்களின் பெயரால் அமைந்த பள்ளி அவருடையது   இருபதாண்டுகளுக்கு முன்பு அவருடன் நெருக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102870/

மறைந்த தோழன்

  மயிலாடுதுறை பிரபு என் நண்பர், முப்பதாண்டுகளுக்கும் மேலாக. அவர் கல்லூரி மாணவராக இருக்கையிலேயே என்னை வாசகராக வந்து சந்தித்திருக்கிறார். விஷ்ணுபுரம் நண்பர்குழுவில் ஒருவர். எனக்கும் அலெக்ஸுக்கும் பொதுவான நண்பர். அலெக்ஸ் அஞ்சலிக்கூட்டத்திற்கு மயிலாடுதுறையிலிருந்து வந்திருந்தார். இக்கவிதை எனக்கு அலெக்ஸுக்கான மிகச்சிறந்த அஞ்சலி என்று தோன்றியது. பிரபு எழுதி நான் வாசிக்கும் முதல்கவிதை.   ஜெ   மறைந்த தோழன்   மறைந்த தோழன் தீவிரமான அரசியல் செயல்பாட்டாளன் அதிகாரம் சிறு குழுவுக்குள் பிசிரின்றி ஏற்படும் ஒருங்கிணைப்பாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102806/

குழந்தைக்குக் கதைகளை வாசித்துக்காட்டலாமா?

  குழந்தையிலக்கிய அட்டவணை அன்புள்ள ஜெ., கதைவாசிப்பு (story reading) – பெரியவர்கள் புத்தகத்தை வைத்துக்கொண்டு கதையை வாசித்துக்காட்டுவது கதை சொல்லல் (story telling) – நேரடியாகவே மனதில் இருந்து கதை சொல்வது இவ்விரண்டில் அமெரிக்காவில் முதலாவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.. இந்த முறை வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள உதவலாம்..ஆனால் குழந்தைக்கதையின் மைய அம்சமான ஒரு மாயத்தன்மை உள்ளது, அது இல்லாமலாகும் மிகசமீப தலைமுறை வரை பாட்டியிடம் கதைகேட்டு வளர்ந்தவர்கள் நாம்.. ‘story reading’ என்று இந்தியர்கள் சொல்லும்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102808/

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 25

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 3 துருபதரின் சிற்றவைக்குள் நுழைவதற்காக அணுக்கனின் அழைப்பைக் காத்து அபிமன்யூ நின்றிருந்தபோது படிக்கட்டுகளில் காலடியோசை கேட்டது. அவன் பதைப்புடன் தன்னுடன் நின்ற சிற்றமைச்சர் ஜலஜரிடம் “நான் சென்று சற்றுநேரம் கழித்து மீள்கிறேன்” என்றான். “தங்கள் வரவு உள்ளே அறிவிக்கப்பட்டுவிட்டது, இளவரசே…” என்றார் ஜலஜர். “நான் என் எண்ணங்களை கோத்துக்கொள்ளவில்லை. இப்போது நான் சென்றால் என் சொற்களை முறையாக சொல்ல முடியாமல் போகலாம்” என்றபின் “தேவையான ஓலை ஒன்றையும் மறந்து வைத்துவிட்டேன்” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102795/