Daily Archive: October 4, 2017

பினராயி விஜயனின் எழுத்தறிவித்தல்

அன்புள்ள ஜெமோ இந்தப்புகைப்படத்தைக் கவனியுங்கள். இதில் பினரயி விஜயன் ஒரு குழந்தைக்கு எழுத்தறிவிக்கிறார். இந்தச்சடங்கு இந்து மதம் சம்பந்தமானது என்றும் இதை செய்ததனால் அவர் இந்துத்துவச் சக்திகளுக்கு விலைபோய்விட்டார் என்றும் சொல்லி மிகப்பெரிய பிரச்சாரம் ஒன்றை இணையத்தில் ஒரு கூட்டம் செய்துகொண்டிருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?   சிவராம் கதிர்வேல்   அன்புள்ள சிவராம், நான் அறிந்தவரை தமிழகத்தின் அரசியல் தலைவர்களில், புகழ்மிக்க ஆளுமைகளில் தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கையோ சடங்குகள் மேல் ஈடுபாடோ முற்றிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102717

அஞ்சலி எம்.ஜி.சுரேஷ்

  இன்று காலை [3-10-2017] எம்.ஜி.சுரேஷ் அவர்களின் இறப்பு குறித்த செய்தி வந்தது. அதை உறுதிசெய்ய மாலை ஆகியது.   எம்.ஜி.சுரேஷ் தமிழில் பின் நவீனத்துவம் குறித்த அறிமுகநூல்களையும் விவாதக்கட்டுரைகளையும் எழுதியவர்களில் ஒருவர். பின்நவீனத்துவத்தை ஒரு சிந்தனை அலையாக அல்லாமல் ஒருவகை புதியமதமாகவே அவர் எடுத்துக்கொண்டார். அதற்கான ஆவேசமான வாதிடல்கள் அவருடைய நூல்களில் உண்டு.  அவை பின்நவீனத்துவர் என தன்னை முன்வைத்த ஒருவரின் குரல்கள். அந்தப்புரிதலுடன் வாசிப்பவர்களுக்கு பின்நவீனத்துவ ஆசிரியர்கள், மற்றும் கருதுகோள்களைப்பற்றிய புரிதலை அளிப்பவை அவருடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102725

ஆழமற்ற நதி -கடிதங்கள்

  அன்புள்ள ஜெ! கதிர் போலவே எங்கள் உறவில் ஒரு பையன் பிறந்து இருபத்தியொரு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தான்.அவனை ஏதாவது  அனாதை விடுதியில் சேர்த்து விடுமாறு பலர் கூறியும்,அந்தத் தாய் மறுத்து அவனைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தாள். அவன் ஓர் அரசனைப் போல் வாழ்ந்து இயற்கையான முடிவை எய்தினான். அவன் இறந்ததை மற்ற உறவினர் எல்லோரும் மனதிற்குள் கொண்டாடின‌ர், அந்தத் தாயைத் தவிர.அவளுக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்து ‘உனக்கு இனிமேல் பெரிய ஆறுதல்’ என்று கூறியவர்களையெல்லாம் அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102678

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 20

மூன்று : முகில்திரை – 13 சுபூதருடன் அபிமன்யூவும் பிரலம்பனும் அரண்மனை இடைநாழியினூடாகச் சென்றபோது காவல்நின்ற அசுர வீரர்கள் வேல்தாழ்த்தி தலைவணங்கினர். அத்தனை வாயில்களிலும் சாளரங்களிலும் அசுரர்களின் முகங்கள் செறிந்திருந்தன. “இப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தால் அரச உடையில் அணிமுடியும் கவசமுமாக வந்திருக்கலாம்” என்றான் அபிமன்யூ. “இப்போதே நன்றாகத்தான் இருக்கிறீர்கள்” என்றான் பிரலம்பன். அபிமன்யூ “நான் அரசநடையை பழகவேண்டுமென விழைந்திருக்கிறேன். மூத்த தந்தை துரியோதனர் அவைபுகுவதே பெரிய நாடகக் காட்சிபோலிருக்கும்” என்றான். பிரலம்பன் “கற்கவேண்டியதுதானே?” என்றான். “கற்றேன். மூத்த தந்தை யுதிஷ்டிரர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102548