தினசரி தொகுப்புகள்: October 1, 2017

இந்திய சினிமா -முளைக்காத விதைகள்

அன்புள்ள ஜெ. அவர்களுக்கு,   இணைய தொழில்நுட்பம் வளர்ந்ததால் எல்லாவற்றையும் உடனே தெரிந்துக் கொள்ளமுடிகிறது.உலகத்தில் கிடைக்கும் அனைத்தும் உடனே தமிழில் கிடைத்துவிடுகிறது. தகவல்கள்தங்குதடையின்றி வந்துவிடுகின்றன. நவீன இலக்கியம் எல்லோருக்கும் கிடைக்கும்படிசெய்துவிட்டது. இசையின் அனைத்து வகைமைகளையும் கேட்க முடிகிறது. சினிமா, கூத்து என்றுஎல்லாவற்றையும் பார்க்கவும் முடிகிறது.   இணையத்தின் வளர்ச்சியால்,வெகுஜன இலக்கியத்தை தாண்டி  நவீன இலக்கியத்தை அனைவரும் அறியும்படி செய்தது. அதனால் புதிய நாவல்கள், சிறுகதைகள் தோன்றி அதன்போக்கை வாசிக்கும் திறனை மாற்றியமைத்திருக்கிறது.   ஆனால் மற்ற கலைகளான இசை, நாடகம், சினிமா போன்றவைகள் பரவலாக சென்றுசேர்ந்தாலும், அதிலிருந்து புதுமையான நவீன‌ ஆக்கங்கள் உருவாகவில்லை. குறிப்பாக சினிமாநிச்சயம் நவீன‌ மாற்று சினிமாவை கண்டிருக்க வேண்டும். சில மாற்றங்கள் தெரிந்தாலும்பெரியளவில் மாறவில்லை. மாறாக கதாநாயக வழிபாடுகள் மூலமாக பெரிய  பொருளியல்வெற்றிகளைதான் அடைந்திருக்கிறது. மலையாள சினிமா பெற்றதுபோல் காட்சி அழகியல்கள்,சிறந்த கதைகள், நுட்பங்கள் என்று எதையுமே இன்னும் பெறவில்லை.   அதிலும் சினிமாவின் ரசனை இன்னும் மாறவில்லை. இணையத்தால் சினிமா முன்னைவிடகேளிக்கையாக மாறிவிட்டதா? தமிழ் இலக்கியம் கண்டதுபோல, உலகளாவிய சினிமா பற்றியபுரிதல்களை தமிழ் பார்வையாளன் பெறமுடியவில்லையே?   வெகுஜன வாசகர்கள் சினிமா, சீரியல் என்று போய்விட்டது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால்முன்பிருந்த தமிழ் சினிமா பார்வையாளர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் அடைந்திருக்கவேண்டிய இடம் காலியாகதானே இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.   நன்றி. கே.ஜே.அசோக்குமார் அன்புள்ள கே.ஜே.அசோக்குமார்   நலம்தானே?   சென்ற சென்னை பயணத்தின்போது ஒரு நண்பர் கேட்டார், இணையத்தின் ஓர் உலகசினிமா...

நதியின் ஆழம் -கடிதங்கள்

  ஆழமற்ற நதி தங்களின் "ஆழமற்ற நதி" நிகழ்வில் வரும் பாரதப்புழாவின் இறுதி சடங்கு நடைபெரும் இடம்" ஐவர்மடம்" எனும் படித்துறை. கேசவன்ஶ்ரீனிவாசன்.     அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, மீண்டும் ஆழமற்ற நதியின் கரையிலேயே மனம் சுற்றிக்கொண்டு இருக்கிறது.  வாசகர்கள் தாங்களே...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17

மூன்று : முகில்திரை - 10 கோகுலம் ஆயர்பாடிகளிலே மழை மிகுந்த இடம் என்பார்கள். ஆண்டுக்கு ஒருமுறை மழை பெய்யும் ஆயர் நிலங்களுண்டு. இருமுறையும் மும்முறையும் மழைக்காலம் கொண்டவை உண்டு. ஆண்டெல்லாம் மழைக்காலமாக திகழ்வது...