Daily Archive: September 25, 2017

ஆழமற்ற நதி [சிறுகதை]

“பாரதப்புழான்னு உள்ளூரிலே பேரு..,. நிளான்னு இன்னொரு பேருண்டு…” என்று நான் சொன்னேன். ஜஸ்டிஸ் காசிநாதன் படிக்கட்டின் தொடக்கத்தில் நின்று முகத்தை சற்று தூக்கி நதியைப்பார்த்தார். வான்வெளுக்காத முதற்காலையில் நீர்ப்பரப்பு தீட்டப்பட்ட கத்தியின் பட்டைபோல கரியநிறமான ஒளி கொண்டிருந்தது. அவரது மூக்குக் கண்ணாடியின் கீழ்ச்சில்லில் அந்த ஒளி மின்மினி போலத் தெரிந்தது.  “பாக்கத்தான் பெரிசு. ஆழமே கெடையாது. பேப்பர் ரிவர்னு இங்கே சொல்லுவானுக… தண்ணி சும்மா பாலிதீன் காகிதத்த பரப்பி வைச்சதுமாதிரித்தான் இருக்கும்…” என்றேன். அவர் திரும்பிப்பார்க்கவில்லை. என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102252

டான்ஸ் இந்தியா -கடிதம்

அன்புள்ள ஜெ   டான்ஸ் இந்தியா, டான்ஸ்! டான்ஸ் இந்தியா டான்ஸ் ஒரு அழகிய கட்டுரை. முக்கியமாக அதன் நடை. உங்களுக்கென ஒரு நடை உண்டு என எண்ணவே முடியவில்லை. வெண்முரசின் தமிழ்நடை வேறு. கட்டுரைகளில் உள்ள நடை வேறு. இந்த நடை நுட்பமான அப்சர்வேஷன்களுடன் பலவகையான உள்வெட்டுகளுடன் நகைச்சுவையுடன் அமைந்திருந்தது. குறைவான சொற்களில் அந்தச்சூழலையே கொடுத்துவிட்டீர்கள். எனக்கும் இது பழகியதுதான். இதை நான் ஒரு நடிப்பு என்றே எடுத்துக்கொள்வேன். குறைந்தபட்சம் இந்த ஓட்டல்களைப்போல வீடுகளின் அறைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102566

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11

மூன்று : முகில்திரை – 4 ”ஐந்தாண்டுகாலம் அன்னையுடன் மைந்தன் வளர்ந்தான். பகலுமிரவும் அவன் அன்னையுடனேயே இருந்தான். அவன் சற்று வளர்ந்ததுமே அவர்கள் பலியுணவுகொள்ள மன்றுக்கு வருவது நின்றது. உருவில் சிறியவனாக இருந்தாலும் சிட்டுக்குருவிபோல் விரைவுகொண்டவனாக இருந்தான் மைந்தான். அன்னை கைநீட்டுவதற்குள் பாய்ந்து சென்று அவள் எண்ணிய இரையை அவன் வென்றான். அவளை வில்லென்றும் அவனை அம்பென்றும் அழைத்தார் குடிப்பூசகர். அவனுக்கு பாணன் என்ற பெயரே நிலைத்தது” என்றார் கடம்பர். அபிமன்யூ தொலைவில் பாணாசுரரின் காவலரண்களின் வெளிச்சங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102250

அலெக்ஸ் நினைவேந்தல்

  நண்பர் வே.அலெக்ஸ் நினைவேந்தல் வரும் செப்டெம்பர் 29 அன்று மதுரையில் நிகழ்கிறது. இடம் மாந்தோப்பு தமிழ்நாடு இறையியல் கல்லூரி அரசரடி மதுரை நேரம் மாலை 4 மணி பங்கெடுப்போர் வரவேற்புரை பாரி செழியன் தலைமை டேவிட் ராஜேந்திரன் அறிமுகவுரை மோகன் லார்பீர் நினைவுரை ஜெயமோகன் சிறப்புரை தொல்.திருமாவளவன் நன்றியுரை ச கருப்பையா  

Permanent link to this article: https://www.jeyamohan.in/102507