Daily Archive: September 21, 2017

கி.ரா – தெளிவின் அழகு

கேரள இலக்கிய விமர்சகரும் கவிஞருமான கல்பற்றா நாராயணனின் விமர்சன நூலொன்றைப்படித்துவிட்டு அவரிடம் நீண்ட தொலைபேசி உரையாடல் ஒன்றில் ஈடுபட்டேன். அத்தொகுப்பில் மூன்று கட்டுரைகள் வைக்கம் முகம்மது பஷீர் பற்றியவை. சொல்லப்போனால் தொகுப்பில் மூன்றில் ஒருபகுதி பஷீரைப்பற்றியது. பஷீரின் தரிசனத்தையும் கவித்துவத்தையும் அழகிய சொற்றொடர்களினூடாக முற்றிலும் எதிர்பாராத கோணங்களில் கல்பற்றா நாராயணன் தொட்டுக்காட்டுகிறார். விமர்சனம் என்பது தன்னளவில் ஒரு கலைப்படைப்பாக அமையமுடியும் என்பதற்கான சான்றுகள் அக்கட்டுரைகள் கேரளபண்பாட்டின் ஒரு பகுதியான மாப்ளா பண்பாட்டின் பல்வேறு நுட்பங்களை அறிந்து வாசித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101995

கி.ரா.என்றொரு கீதாரி

  கி.ராஜநாராயணன் அவர்களுக்கு இந்த ஆண்டு 95 அகவை நிறைவு பெறுகிறது. அதையொட்டி அவருடைய வாழ்க்கையைப்பற்றியும் படைப்புலகைப்பற்றியும் தொகைநூல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ஜீவா படைப்புலகம் வெளியிட்டிருக்கும் ‘கிரா என்ற கீதாரி’ என்னும் நூலை கழனியூரன் தொகுத்திருக்கிறார்   இனக்குழு அழகியல் முன்னோடி கி.ரா – ஜெயமோகன் கரிசலின் உன்னத கதைசொல்லி ‘கி.ரா – எஸ்.ராமகிருஷ்ணன் பின் நின்று கணக்குப் பார்க்கும் காலம் – நாஞ்சில் நாடன் மறக்கமுடியாத மனிதர் கி.ரா – வண்ணநிலவன் கரிசல்காட்டு சம்சாரி கி.ரா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102472

என்னத்தைச் சொல்ல?

நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள் ஆலய அழிப்பு – கடிதங்கள் அன்புள்ள ஜெ,   உங்கள் ஆலய அழிப்பு படித்ததும் 2016ல் ஆதி திருவரங்கம் (திருவண்ணாமலை அருகில்) சென்றிருந்தேன், பழைய கோவிலை எதிர்பார்த்த எனக்கு அதிர்ச்சி. புகைப்படங்களை இணைத்துள்ளேன், அவை தானே பட்ட பாட்டை சொல்லும்.  கருவறை வெளி வரை டைல்ஸ், மார்பில்ஸ், எல்லாத்தூண்களும் பெயிண்ட் மற்றும் டிஸ்டம்பர், படிகட்டுகள் உயர்த்தப்பட்டு யாளிகள் மாயம், சிமெண்ட் மூலம் கற்சிலைகள் மேல் பூச்சு..   திருவரங்கத்தை விட பழையது. என்ன சொல்ல?   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102477

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 7

இரண்டு : கருக்கிருள் – 3 அபிமன்யூ கௌரவவனத்தின் வாயிலை அடைந்ததுமே உள்ளே ஏரி உடைந்து அலையெழுநீர் அணைவதுபோல ஓசை கேட்டது. செறிவாக மரங்களை நட்டு உருவாக்கப்பட்ட கோட்டையின் வாயில் மூங்கில்களால் ஆனது. அங்கே காவலுக்கு இருந்த இரு வீரர்களும் முதியவர்களாக இருந்தனர். ஒருவரின் மீசையைத் தாங்கும் எடையே அவர் உடலுக்கிருக்காதென்று தோன்றியது. இன்னொருவர் ஒரு கண் மட்டும் கொண்டவர். சிப்பி போன்ற நோக்கிலாக் கண் அவர் நோக்குகையில் துள்ளியது. அபிமன்யூ அவர்களை அணுகி “உள்ளே செல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102178