Daily Archive: September 16, 2017

நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்

அன்புள்ள அண்ணா, நேற்று புதுக்கோட்டை, காரைக்குடி வட்டாரங் களில் உள்ள சிற்பங்கள், கோவில்களை பார்க்க சென்றிருந்தேன். முதலில் வயிரவன் பட்டி பாண்டியர்கள், சோழர்கள், நாயக்க மன்னர்களின் திருப்பணியில் தமிழக அளவில் தனி முத்திரை பதித்த ஆலயத்தில் சமீபத்தில் ஆலய திருப்பணி என்ற பெயரில் ஆயிரமாண்டு கள் பழமையான நுட்பமான சிற்பங்களில் sand blasting செய்து சிற்பங்களில் முகம், நகம், முத்திரை, ஆடை மடிப்புகள், ஆபரண ங்களை சிதைத்திருக்கிறார்கள். அதோடு ஆயிரமாண்டு பழமையான கோபுரங்களில் உள்ள சுதை சிற்பங்களிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102357

இன்னொரு செப்டெம்பர் ஐந்து

அன்புநிறை ஜெ, இரண்டு செப்டெம்பர் ஐந்துகள்… படித்தேன். என் வாழ்வின் மிகச் சிறந்த தினமும் ஆசிரியர் தினம்தான்-சென்ற வருடத்து (05-09-2016) செப்டம்பர் ஐந்து – சிங்கையில் முதன்முறையாக உங்களை சந்திக்கக் கிடைத்த தினம். சொல்வளர்காடு நித்தம் மலர்ந்து கொண்டிருந்த நாட்கள்.நீங்கள் தங்கியிருந்த அறையில் வந்து சந்தித்தோம். அங்கிருந்து தொடங்கிய இந்த ஒரு வருடம் எண்ணற்ற மாற்றங்களையும் திறப்புகளையும் அளித்திருக்கிறது. அந்த சந்திப்புக்கு முன் வரை வாசித்தவையும் அதன் பிறகு வாசித்தவையும் கற்றவையும் வேறு வேறு தளங்கள் என்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102302

பின் தொடரும் நிழலின் அறம்

அன்புள்ள ஜெயமோகன், புத்தக கண்காட்சிகளில் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை வாங்க விரும்பியதுண்டு. ஆனால், பல வருடங்களாக வாங்கவேயில்லை. சென்ற கோவை புத்தக கண்காட்சியில், முதல் புத்தகமாக வாங்கி உங்களிடம் கையெழுத்தும் பெற்றுக்கொண்டேன். ஒரு நாவலை வாங்குவதற்கும், படிப்பதற்கும் தக்க தருணம் அமையவேண்டும் போலிருக்கிறது. வாங்கின நாளிலிருந்தே படிக்கத்தொடங்கி, இப்பொழுதுதான் முடித்தேன். இத்தனை நாட்களில் கம்யூனிசம், ரஷ்யப்புரட்சி போன்றவை பற்றி அங்கங்கு கேள்விப்பட்டதுதான். பெரிதாக ஒன்றும் தெரியாமல் தான் இந்நாவலைப் படிக்கத் தொடங்கினேன். அருணாச்சலம், கே.கே.எம்.. எனத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102293

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 2

ஒன்று : துயிலும் கனல் – 2 முதற்காலைக்கும் முந்தைய கருக்கிருளில் அஸ்தினபுரியின் கோட்டைமுகப்பு அதன்மேல் எரிந்த பந்தங்களின் ஒளியாக மட்டும் தெரிந்தது. மலைவளைவுகளில் காட்டெரியின் சரடுபோல. சகுனி புரவியின் கடிவாளத்தைப் பற்றி அதை பெருநடையில் ஓடவிட்டுக்கொண்டு சென்றார். அவர் சென்ற குளம்படியோசையை குறுங்காடு வெவ்வேறு இடங்களில் எதிரொலித்துக் காட்டியது. காடெங்கும் இலைநுனிகளிலிருந்து பனித்துளிகள் சொட்டும் ஓசை மழைவிட்ட பொழுதென கேட்டது. கோட்டைமுகப்பின் பெருமுற்றத்தில் வணிகர்களின் தட்டிக்குடில்களும் பாடிவீடுகளும் செறிந்திருந்தன. அப்பால் கோட்டைவாயிலுக்கு இரு பக்கமும் நீண்டிருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101812