Daily Archive: September 15, 2017

உணவும் குழுவும்

அன்பின் ஜெமோ அவர்களுக்கு ‘இந்தியாவில் பசுவை குர்பானி கொடுப்பதை விட்டுக் கொடுக்கக் கூடாது?’ என்று 1945-ல் எழுதப்பட்டதை எழுபது ஆண்டுகள் கழித்து ‘தமிழில்’ மொழியர்த்து இந்த மாத ‘சமரசம்’ இதழில் வெளியிட்டுள்ளனர். http://samarasam.net/1-15-sep-2017/#page/51 http://samarasam.net/1-15-sep-2017/#page/52 ‘தமிழக இஸ்லாம்’ என்பதன் ‘படித்த முகம்’ என்கிற முன்னொட்டு கொண்ட குழு இது. ’புனிதப் பிரதி’களை ’அரசியல் இஸ்லாம்’ பின்னணியில் மாட்டுக்கறி சாப்பிடாத ‘முஸ்லிம்’களின் ‘இஸ்லாம்’ நம்பகத்தன்மை கொண்டதல்ல என்று மௌதூதி கொடுத்த விளக்கம் எவ்வளவு ‘கடும்போக்கு’ கொண்டது. ’உடும்பு’ – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102298

நத்தையின் பாதை- கடிதங்கள்

ஜெ, தொல்காடுகளின் பாடல் முதல் வாசிப்புக்கு கலையைப் பற்றி பேசுவதைப் போல தோன்றினாலும், முக்கியமான பண்பாட்டு சிக்கலையும் பேசும் கட்டுரை. ஒரு சமூகம், தன் தரிசனங்களை கலை இலக்கியங்களின் வழியே வெளிப்படுத்துவதை கலாச்சாரம் என்கிறோம். அப்படி வெளிப்படுத்தப்பட்ட தரிசனங்களே அந்த சமூகத்தின் பொது விழுமியங்களை உருவாக்கி வழி நடத்துகிறது. இந்த சமூக விழுமியங்களின் அடிப்படையையே அந்த சமூகத்தின் பண்பாடு என்கிறோம். ஒரு கலாச்சாரம், ஒவ்வொரு கால கட்டத்திலும், அதன் தேவைகளுக்கும், நோக்கங்களுக்கும் ஏற்ப தன் தரிசனங்களின் வெளிப்பாட்டை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102285

நதிமீட்பு -கடிதங்கள்

இனிய ஜெயம், ஜக்கி அவர்கள் துவங்கி இருக்கும், நதிகளைக் காப்போம் இயக்கத்துக்கான உங்களின் ஆதரவுக் குரலை கேட்டேன். மகிழ்வாக இருந்தது. மனித நாகரீகம் தழைத்ததே, நதியன்னை கொடையை கொண்டே. கங்கைக் கரையில் அமர்ந்திருக்கையில் அவளையும் அவளை சூழ்ந்த நிலத்தயும் காண்கயில் நமது வாழ்வும் வளமும் இவளால்தான் என ஆணித்தரமாக உள்ளே பதிந்தது. அவளுக்கு நிகழும் பூஜை அவள் நமக்களித்த கருணைக்கு நன்றி நவிலல். இங்கே தமிழ் நிலத்தில் நாம் வைகையை, அத்தகைய நதிகளை எவ்வாறு பரிபாலிக்கிறோம்? புத்துப்புனல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102290

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 1

ஒன்று : துயிலும் கனல் – 1 குந்தியின் இளஞ்சேடி பார்க்கவி படகிலிருந்து முதலில் இறங்கினாள். அவள் காலடியில் பாலப் பலகை அசைந்தது. நிலத்தின் உறுதியை கால்கள் உணர்ந்ததும் அவள் திரும்பிநோக்கி தலைவணங்கினாள். குந்தி நடைபாலத்தின் மீது ஏறி மேலாடையை சீரமைத்துக்கொண்டாள். பார்க்கவி “தேர் வந்துள்ளது, பேரரசி” என்றாள். குந்தி தலையசைத்தாள். அவளுடைய அணுக்கக் காவலர் வேல்களுடன் இறங்கி அவளுக்கு இரு பக்கமும் குரல் கேட்காத தொலைவில் நின்றனர். அவள் நடந்ததும் உடன் வந்தனர். காற்றே இல்லாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101860