Daily Archive: September 3, 2017

எழுத்து பிரசுரம் அலெக்ஸ் மறைந்தார்

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த எழுத்து பிரசுரம் வெ.அலெக்ஸ் (வெள்ளை யானை, அயோத்திதாசர் நூல்களின் பதிப்பாளர் ) இன்று காலை 5 மணியளவில் இயற்கை எய்தினார் .   அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை 3.30 மணிக்கு மதுரை  பசுமலை சி எஸ் ஐ தேவாலய வளாகத்தில் நடைபெறும்.   வெ.அலெக்ஸ்

Permanent link to this article: https://www.jeyamohan.in/102041

அஞ்சலி வே.அலெக்ஸ்

அலெக்ஸ் என் வீட்டில் தங்கியிருக்கையில் நள்ளிரவில் அருண்மொழி மேலே ஏறி வந்து எங்களிடம் “சத்தம் கம்மியா சிரிங்க… பக்கத்துவீட்டிலே என்ன நினைப்பாங்க?” என்று சொல்லிக்கொண்டிருப்பாள். எங்கள் வயதுகள் இணையானவை. உள்ளங்களும். அவருடைய இயல்பு எப்போதுமே உற்சாகமானது என்றாலும் ஒரு பெரியமனிதத் தோரணை உண்டு. அது அரசியலில், சமூகப்பணியில் அவர் கொண்டிருந்த அனுபவம் அளித்த குணம். அதை முழுமையாகக் கழற்றிவிட்டுத்தான் என்னுடன் இருப்பார்.அவருக்கு மிக நெருக்கமான நண்பர்கள் பெரும்பாலானவர்களுக்கு அவர் ‘அலெக்ஸண்ணன்’ ஆகவே மரியாதையான தூரம். என்னிடம் அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102029

குருவாயூரும் யேசுதாஸும்

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா? அன்புள்ள ஜெ.. உரிய மாண்பை கடைபிடிப்பதாக உறுதியளித்தால் மாற்று மதத்தினருக்கும் ஆலய அனுமதியில் சிக்கல்வராது என சொல்லி இருந்தீர்கள்.. ஆனால் ஜேசுதாசுக்கு அனுமதி மறுப்பது நெருடல். என் கேள்வி அது அல்ல சமீபத்தில் அவர் சபரிமலை சென்றதையும் அவருக்கு கிடைத்த பக்திபூர்வ உணர்வு ரீதியான மரியாதையையும் பலர் வாட்சப்பில் ஷேர் செய்து கொண்டாடினர்…சங்கீத நிகழ்ச்சிகளில் எத்தனையோ பேர் வந்து போனாலும் ஜேசுதாஸ் பல வருடஙகளாகபெற்று வரும் மக்கள் ஆதரவு வேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101953

மன்மதன் -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, மன்மதன் சிறுகதை அற்புதம். கிருஷ்ணன் பாத்திரத்துக்கு அந்த பெயரை வைத்தது தற்செயலா அல்லது நுட்பமா? மன்மத தகனம், அதாவது மன்மதனை சிவன் எரிப்பதற்கு முன், எரித்த பின் என்று, இரு நிலைகள். எரிப்பதற்கு முன்பு மன்மதன் காமத்தின் வடிவம். எரிந்த பின் தூய அன்பின் வடிவமாக (அரூபமாக) , கிருஷ்ணனின் மகனாக பிறக்கிறான். கிருஷ்ணன் பாத்திரம் கதையின் தொடக்கத்தில் காமத்தின் வடிவமாக வருகிறது. மல்லியும் ராஜுவும் தூய அன்பின் வடிவமாக வருகிறார்கள். அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101756

கடித உலகம்- கடிதங்கள்

கடிதம் என்னும் இயக்கம் அன்புள்ள ஜெ வாசகர்கடிதம் என்பது வெறுமே ஒரு கடிதம் அல்ல. தீவிரவாசகர்கள் அந்த எழுத்தாளருடன் மானசீகமாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒரு சிறுபகுதியையே கடிதமாக எழுதுகிறார்கள். நான் உங்களிடம்பேசிக்கொண்டிருக்கிறேன் ஜெமோ என்பதுதான் கடிதங்களின் அடிப்படை. அதை நீங்கள் பதிலளிக்காவிட்டாலும் பிரச்சினை இல்லை அதேபோல சிலசமயம் நாம் சொல்லவேண்டியதை தொகுத்து எழுதும்போது அது கடிதமாகிறது. நிறையசமையங்களில் நான் எழுதியதுமே எனக்கு தெளிவாகிவிடுகிறது. அதற்குப்பின்னால் நான் அதை அனுப்புவதில்லை. அதோடு அதையே வேறு எவரேனும் எழுதியிருப்பார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101593

வயக்காட்டு இசக்கி

இனிய ஜெயம் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு முறை கி ரா, ” வாய்மொழி மரபு கொச்சயாத்தாம் இருக்கும். தாய்ப்பாலு கொச்சதாம். வேணாம்ன்னாக்க யாருக்கு நட்டம்?” என்றார். காலச்சுவடு வெளியீடாக அ.கா. பெருமாள் அவர்கள் எழுதி வெளியாகி இருக்கும் வயல்காட்டு இசக்கி நூலுக்கு, அதில் அ. கா. பெருமாள் எழுதி இருக்கும் முன்னுரையில் ஒரு நிகழ்வை வாசிக்கையில், மேற்கண்ட கி ரா அவர்களின் கூற்றை நினைத்துக் கொண்டேன். பேராசிரியர் மிகுந்த உழைப்பில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு நூல் ஒன்று கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102019