Monthly Archive: September 2017

வாசகர் கடிதம், சுஜாதா, இலக்கியவிமர்சனம்

  வணக்கம்   “உண்மையான வாசகர் எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதிகொண்டிருப்பதில்லை” இந்த வரி ஒரு எழுத்தாளரின் கருத்து. இந்த விடயத்தை பொருத்தவரை உங்கள் கருத்து என்ன? நன்றி     அனிதா     அன்புள்ள அனிதா     அது  சுஜாதா ஒருமுறை சொன்னது. உண்மையான சுஜாதா வாசகர் சுஜாதாவுக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பதில்லை என்றுதான் அந்த வரிக்கு உண்மையான அர்த்தம்.     யோசித்துப்பாருங்கள், க.நா.சுவுக்கு சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறார். அழகிரிசாமி புதுமைப்பித்தனுக்கு எழுதியிரு க்கிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102639

ஆழம் -கடிதங்கள்

ஆழமற்ற நதி [சிறுகதை] அன்புள்ள ஜெ,   “மனசறிஞ்சு செய்தாத்தான் பாபமும் புண்ணியமும்” என்றார் நம்பூதிரி “பிராயச்சித்தமும் மனசறிஞ்சு செய்யணும்” கதிர் மனம் அறிந்து தானே இருக்கிறது,   ஆனால் இது அவன் செய்தது இல்லை, இந்த சடங்குகள் அனைத்தும் அந்த கொலையை திட்டமிட்ட மற்ற அனைவருக்கும் தான். முத்துசாமி மூக்கு பொடி கேட்டதும் சுந்தரேசன் முகம் மலர்ந்து விடுகிறார், அவர் மட்டும் அல்ல பொதுவாக போதை பொருள் ஒருவர் கேட்டால் உடனே மகிழ்ச்சியாக அவர்களையும் அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102631

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 16

மூன்று : முகில்திரை – 9 ஆயர்பாடியில் அநிருத்தனுக்கு எப்போதும் களித்து உடனிருக்கும் பன்னிரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களின் முதுதந்தையர் தாங்கள் அவ்வாறு அங்கு இளைய யாதவருடன் கானாடியும் காளிந்தியில் ஆடியும் வளர்ந்தவர்கள் என்றனர். “இன்றிருக்கும் அத்தனை பசுக்களும் காளைகளும் அன்றும் இதே தோற்றத்துடன் இருந்தன. வேறு உடல்களில்” என்றார் ஸ்தோக கிருஷ்ணர். அம்சுவும் பத்ரசேனரும் விலாசியும் புண்டரிகரும் விடங்கரும் காலவிங்கரும் எப்போதும் இணைந்தே இருந்தனர். “அவரை பிரியமுடியாது என்றுசொல்லி ஸ்ரீதமரும் சுதமரும் வசுதமரும் உடன்சென்று துவாரகையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102451

திரும்பி நோக்கி அறிவது

உள்ளத்தின் நாவுகள் அன்புள்ள ஜெ,   நலம்தானே? நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன்.   நீங்கள் உள்ளத்தின் நாவுகளில் மிக ஆழமாக எழுதிய விஷயம் எனக்கு மிகவும் லேசாக, கொஞ்சம் நகைப்புக்கு உரியதாகவும் ஒரு கனவுச் சம்பவமாக சமீபத்தில் நிகழ்ந்தது.     “நம் அந்தரங்கப் பகற்கனவுகளில் நாம் யார்?”, என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.  பகற்கனவில்லாம் இல்லை; ஒரு நிஜக்கனவேதான் கண்டேன் நான்.   நேற்று முன்தினம் அதிகாலை ஒரு கனவு. அந்தக் கனவு தந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102636

ஆழமற்ற நதி -கடிதங்கள்

ஜெ,   நதியின் ஆழத்தை மனிதர்கள் எண்ணுவது தங்கள் உடலை வைத்து. தங்களால் அறியக் கூடிவற்றை வைத்து. அவற்றுக்கப்பால் இருக்கக் கூடிய ஆழத்தை எதைக் கொண்டு அறிய முடியும்? மூளை இயங்காததால் சங்கரனால் அறிய இயலாதென்றும், கேட்க இயலாததால் கதிரால் புரிந்து கொள்ள இயலாதென்றும் எண்ணிக்கொள்ள செய்வது நம் அறிவின் ஆழமின்மையே. அதைத் தாண்டிய ஆழத்திற்கு ஒன்று சென்று சேருமென்றால், அதை மீட்டெடுக்க இங்கிருக்கும் வேறு எதையும் அனுப்பி அதைத் தீண்டவும் இயலாது. அதைத்தான் சுந்தரேசனும் சொல்கிறார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102634

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 15

மூன்று : முகில்திரை – 8 ஒவ்வொரு நாளும் உஷையிடம் அவள் உள்ளத்தில் உள்ளதென்ன என்று செவிலியரும் சேடியரும் வெவ்வேறு சொற்களில் கேட்டனர். ஒவ்வொரு கேள்வியும் அவளை சினம்கொள்ள வைத்தது. சிலதருணங்களில் சீறி அவர்களை அகற்றினாள். பிற தருணங்களில் துயருற்று கண்ணீர் மல்கி தலைகுனிந்தாள். பின்னர் எவர் எதை கேட்டாலும் அச்சொற்கள் செவிகொள்ளப்படாதாயின. வாயில்களை ஒவ்வொன்றாக மூடி மேலும் மேலும் தனக்குள் சென்று முற்றாகவே அகன்று போனாள். கைக்குழவி நாளிலிருந்து அவர்கள் அறிந்த உஷை அவ்வுடலுக்குள் இல்லையென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102431

பாபு நந்தன்கோடு

இணையத்தில் பழைய மலையாளப்பாட்டுகளுக்காக தேடிக்கொண்டிருந்தபோது நினைவில் மறைந்த ஒரு பாடலை கேட்டேன், இல்லை கண்டேன். ஸ்வப்னம் படத்துக்காக சலீல் சௌதிரி இசையமைத்து வாணி ஜெயராம்பாடிய பாடல். கறுப்புவெள்ளை சித்தரிப்பு. நந்திதா போஸ் என் இளமையில் நினைவில் இருந்த முகம். வங்க புதிய அலைப் படங்களின் நாயகி. அக்காலத்தில் நல்ல இயக்குநர்கள் பலருக்கும் அவர்தான் பிரிய முகம்.. பாடலின் தொடக்கமே சட்டென்று வசீகரித்தது. நந்திதா மிக இயல்பாக பாடுகிறார். கைகளின் அசைவில் அவருடைய இனிய பதற்றம் தெரிகிறது. உடலசைவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11222

நதி -கடிதங்கள்

ஆழமற்ற நதி [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் சார் ,   என் வாழ்வில் நான் எழுதும் முதல் கடிதம் .எனது சொந்த ஊர் கோவில்பட்டி . ஆனால் அங்கிருந்த வரையில் தேவதச்சன் ,கோணங்கி,கி .ரா போன்ற யாரையுமே தெரிந்து கொள்ளாமல் 17 வருடங்கள் இருந்து விட்டேன் .பின்பும் சென்னை வந்த பின்  மெதுவாக வாசிக்க ஆரம்பித்து கடந்த இரண்டு வருடங்களாய் உங்களை வாசிக்கிறேன் . அறம் தொகுதியே நான் வாசித்த முதல் தொகுப்பு .பின்பு அனல் காற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102613

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 14

மூன்று : முகில்திரை – 7 நிலவு எழுந்த முன்னிரவில் உள்ளிருந்து எழுந்த அழைப்பால் விழித்துக்கொண்ட உஷை தன்னருகே ஆடிக்குள் அசைவைக்கண்டு புரண்டு கையூன்றி எழுந்து அதன் ஒளிர்பரப்பை பார்த்தாள். அங்கு நிலவில் ஒளிகொண்ட இளங்காற்றுவெளியில் சந்தியை தனக்குள் மெல்லப் பாடியபடி, சிறகெனக் கைவீசி, சிற்றாடை சுழல துள்ளி ஓடுவதை கண்டாள். முகம் மலர்ந்து ஆடியை எடுத்து தன் மடியில் வைத்தபடி அதை நோக்கி அமர்ந்திருந்தாள். எவரையோ கண்டு சந்தியை நாணி நிற்பதைக் கண்டு மேலும் உற்றுநோக்கினாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102426

தன்வழிச்சேரல்

  அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும் அன்பின் ஜெ,   கலைக்கல்வியும் அறிவியல் கல்வியும் ” வாசித்தேன்.மிகத்  தெளிவான விளக்கம் தந்திருக்கிறீர்கள்.இன்று தமிழ்நாட்டில் கல்வியில் நடக்கும் குளறுபடிகள் எல்லாம் இத்தகைய புரிதல்கள் இல்லாத பெரும்பான்மை மனநிலையின் விளைவுகளே .   மாணவர்களுக்கு பள்ளி வயதில் தங்கள் ஆர்வம்,இலக்கு பற்றிய சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதை விட ,அவர்களை மடைமாற்ற வேண்டிய பெற்றோருக்கும்,கல்வியாளர்களுக்குமே  அதுபற்றிய அடிப்படையே தெரியவில்லை என்பதே உண்மை   மருத்துவ படிப்பு தொடர்பாக நடைபெரும் எல்லா குழப்பங்களையும் பார்த்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/102563

Older posts «