Daily Archive: August 14, 2017

வெண்முரசும் இளைய வாசகர்களும்
  ஜெ,   ஒரு வினா. கோபம் கொள்ளமாட்டீர்கள் என நினைக்கிறேன். இளையதலைமுறையினர் வெண்முரசை எவ்வளவுபேர் வாசிக்கிறார்கள்? நானும் என் நண்பரும் பேசிக்கொண்டபோது அவர் இளையதலைமுறையினர் வெண்முரசை வாசிக்கமுடியாது என்றார். ஏனென்றால் தமிழ்க்கல்வியின் தரம் மிகவும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இவர்களுக்கு வெண்முரசின் நடையின் உள்ளே போகமுடியாது என்றார். இதுதான் என் கேள்விக்கான அடிப்படை   ஜெகன்   அன்புள்ள ஜெகன் பொதுவான ஓர் அவதானிப்பு இது, ஆனால் இதெல்லாம் பொதுவான விஷயங்களைப்பற்றி மதிப்பிடவே உதவும். இலக்கியம் ஒரு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101198

இருத்தலியல்,கசாக் -கடிதங்கள்
  இருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் – கஸ்தூரிரங்கன்   மிக முக்கியமான கட்டுரை. அதில் வாசிப்புக்குச் சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே நிறையபேர் வாசித்திருக்க வாய்ப்பில்லை.. மேலைநாட்டுத் தத்துவ எழுத்து என்பது அந்த உள்வட்டாரத்தில் மட்டுமே வாசிக்கப்படுவது ஆகும். ஆகவே அவர்கள் மிகச்செறிவான ஒரு மொழியை அடைந்திருக்கிறார்கள். அதேயளவுக்குச் செறிவாக நாம் எழுதினால் பொதுவாக வாசிக்கமுடியாது என்பது தெரியும். அதை எழுதமுயற்சிசெய்தமையினால் அர்த்தமில்லாத சுத்துச்சொற்றொட்டர்களை பலபேர்கள் எழுதினார்கள். ஆகவே அவை வாசிக்கப்படுவதில்லை. இந்தக்கட்டுரை முக்கியமாக அந்தச் செறிவான …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101400

மன்மதன் கடிதங்கள்
மன்மதன் [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன், “மன்மதன்” சிறுகதையை திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்தேன். கிருஷ்ணன், சிற்பங்களைக் பார்ப்பது போல நான் இந்தக் கதைகளின் வரிகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். உங்களுக்கேயுரிய பிறிதொன்றில்லாத விவரணை மொழி. துடைத்து வைத்த விளக்கைப் போல மினுங்கும் சொற்கள். பளபளக்கும் வார்த்தைகள் கூரிய வாட்களாய் கற்பனைக்குள் பாய்கின்றன. கண்களில் இருந்து வழுக்கி வழுக்கி விழும் பெண், அவளுடைய மார்புகள் அசைந்தபோது கிருஷ்ணனின் அகத்தில் கட்டிடங்களும் கோட்டைகளும் அதிர நிலம் நடுங்கும் அனுபவம், இவை யாவும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101120

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82
81. முகம்பரிமாறல் சேடியர் இன்னீரும் வாய்மணமும் விளம்பியபடி குனிந்து சுற்றிவந்தனர். அரசி உத்தரையிடம் தலையை அசைத்து விரல்காட்டி ஏதோ சொன்னாள். உத்தரை தலைகுனிந்து விழிகளை கம்பளத்தில் நிறுத்தி அமர்ந்திருந்தாள். அரசி மேலும் கடுமைகொண்ட முகத்துடன் உதடுகளை நீட்டி கழுத்துத் தசை அதிர இளவரசியை கண்டித்தாள். ஒருகணத்தில் முக்தன் அவள் வசையுரைப்பது சைரந்திரியைத்தான் என்று புரிந்துகொண்டான். சைரந்திரி அரசியை நோக்காமல் இயல்பாக மேடையில் விழிகொண்டிருந்தாள். விறலி நீர் அருந்தி வாயில் மிளகுகளை போட்டுக்கொண்டாள். அவளுடனிருந்தவள் முழவின் பட்டைகளை இழுத்து …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101270