Daily Archive: August 13, 2017

கலாச்சார இந்து
இந்தத் தொகுதியில் உள்ளவை நான் வெவ்வேறு காலகட்டங்களில் வாசகர்களுடனான உரையாடலில் மதம், ஆன்மிகம், பண்பாடு குறித்து எழுதிய கட்டுரைகள். நான் வளர்ந்த குமரிமாவட்டச் சூழல் இடதுசாரித்தனம் நிறைந்தது. ஆகவே மரபு எதிர்ப்பையே நான் இளமைமுதல் அறிந்து வளர்ந்தேன்.   இளமையில் சந்தித்த தனிவாழ்க்கை நெருக்கடிகள், குறிப்பாக நண்பனின் தன்னிறப்பை ஒட்டிய கொந்தளிப்பும் தனிமையும், என்னை ஆன்மிகம் நோக்கித் திருப்பியது. என்னுள் எழுந்த வினாக்களுக்கு மார்க்ஸியமோ மேலைநாத்திகமோ மறுமொழி சொல்வதில்லை என்று கண்டுகொண்டேன். மதம் நோக்கித் திரும்பினேன்.   …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101104

நத்தையின் பாதை -கடிதங்கள்
நத்தையின் பாதை 1 உணர்கொம்புகள்  நத்தையின் பாதை இந்த மாபெரும் சிதல்புற்று     ஜெமோ, ‎                       ‘சிதல்புற்று ‘ வழியாக பூடகமாக உணர்த்திய பின்நவீனத்துவத்தின் அவசியத்தை ‘தன்னை அழிக்கும் கலை‘ வழியாக கொஞ்சம் அழுத்தமாக நிறுவியிருக்கிறீர்கள்.‎   தன்முனைப்புக் கொண்டு மண்ணைப் பிளந்து கொண்டு வெளியில் வரும் செடிக்கு மரமாக கிளை பிரித்து வளரும் வரை இருப்பது நவீனத்துவத்தின் இயல்பு. நான் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101204

ஏழாம் உலகம் கடிதங்கள்
  ” நாவல் வாசிப்பது என்பது நிகர்வாழ்க்கைக்கு சமானமானது” இந்த வரிகள் இடையறாது நெஞ்சில் குமிழியிட்டபடி இருக்கிறது.ஏழாம் உலகம் இப்போதுதான் படித்து முடித்திருக்கிறேன்.போத்திவேலு பண்டாரத்துக்கும் ஏக்கியம்மைக்கும் இடையே நடக்கும் சம்பாஷணை முத்தம்மையின் பிரசவம் பற்றியது என அறியப்படும் கணம் நெஞ்சை விம்ம செய்கிறது.அங்க அவயங்கள் குறைபட்ட குழந்தைகள் பிறப்பெடுக்கும் முறைமை தொரப்பன்,குய்யன் உரையாடல் மூலம் நுட்பமாக தெரியபடுத்தப்பட்டுள்ளது. எந்த குற்ற உணர்ச்சியுமற்று அங்கஹுனர்களை ‘உருப்படிகள்’ என்று அழைப்பவர்களின் இழிநிலையை அந்த வார்த்தையே படம் பிடித்து காட்டுகிறது.பண்டாரம் லாட்ஜில் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101354

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81
80. உள்ளொலிகள் உத்தரை அவ்வேளையில் அங்கு வருவாள் என்று முக்தன் எதிர்பார்க்கவில்லை. பிருகந்நளையின் குடில் வாயிலில் மரநிழலில் இடைக்குக் குறுக்காக வேலை வைத்துக்கொண்டு கையை தலைக்குமேல் கட்டி வானை நோக்கியபடி விழியுளம் மயங்கிக்கொண்டிருந்தான். அவள் வரும் ஓசையைக் கேட்டு இயல்பாக தலை திருப்பி நோக்கியவன் இளவரசி என அடையாளம் கண்டதும் திடுக்கிட்டு எழுந்து நின்றான். வேல் அவன் உடலிலிருந்து உருண்டு கீழே விழுந்தது. உத்தரை அருகே வந்து “ஆசிரியர் உள்ளே இருக்கிறாரா?” என்றாள். “ஆம், இளவரசி. ஓய்வெடுக்கிறார்” …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101257