Daily Archive: August 11, 2017

அவ்வழி நல்லை!
பத்தொன்பது வயதில்தான் ஊரைவிட்டு கிளம்பினேன், தனியாக அலைந்து திரிந்து அடிபட்டு வதங்கி திரும்பி வந்தேன். வந்த அடுத்த மாதமே மீண்டும் கிளம்பினேன். அந்த அனுபவங்களை புறப்பாடு என்னும் நூலாக எழுதியிருக்கிறேன். அன்றுமுதல் இன்றுவரை என்னை எழுத்தாளன் என்பதற்கு அப்பால் ஏதாவது சொல்லவேண்டும் என்றால் ‘பயணி’ என்றுதான். ஆண்டுக்கு இருமுறையாவது இந்தியாவின் விரிந்த நிலப்பரப்புகளில் நீண்ட பயணங்கள் செய்துகொண்டே இருக்கிறேன். இன்று அதற்குரிய நண்பர்குழு அமைந்துவிட்டிருக்கிறது. இணையம் வந்தபின்னர் என் பயண அனுபவங்களை அன்றன்றே வலைப்பதிவாக வெளியிட்டுவரத் தொடங்கினேன். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101110

கென்யா -இனக்குழு அரசியல்
அன்பு ஜெ, கென்யா முழுதும் வானிலை மெல்லிய பதட்டம் கொண்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ஜனாதிபதி தேர்தல். 2013 தேர்தல் எதுவும் கலவரங்கள் இன்றி அமைதியாகவே முடிந்தது. எதிர்தரப்பின் ரய்லா அமைதியாக இருந்ததே காரணம். ஆனால் இவ்வருடம் அப்படி இருக்கப் போவதில்லை என்று சூழ்நிலைகள் உணர்த்துகின்றன. ஆளும் உகுரு கென்யாட்டா இரண்டாம் முறை பதவியை தக்கவைத்துக்கொள்ள பிரயத்தனம் மேற்கொண்டுள்ளார். ரய்லா இம்முறை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. ஒருவருடம் முன்பிருந்தே அவர் பேசத்தொடங்கி விட்டார். பாவம் மக்கள்தான் பதட்டம் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101173

அழைப்பு மோசடி -கடிதங்கள்
ஓர் அழைப்பு இப்படி பேசியவரிடம் வங்கி ,மற்றும் ATM கார்ட் தகவல்களை சொல்லிவிட்டு மறுநாள் காலை 10 மணிக்குள் தனது வங்கி கணக்கில் இருந்த rs 160000 ரூபாவை இழந்தார் நமக்குத் தெரிந்தவர்களில் கோணங்கி .இது நடைபெற்று ஆறுமாத காலம் இருக்கும் .புகார் தெரிவித்து ஒரு பலனும் இதுவரையில் ஏற்படவில்லை.வட இந்தியாவில் இருந்து நடைபெறுகிற online கொள்ளை இது.பலர் விபரங்களை தெரிவித்து விட்டு மாட்டியிருக்கிறார்கள் இவர்களிடம்.விபரம் தெரிவித்த மறு நிமிடமே இவர்கள் கணக்கில் திருடத் தொடங்கி விடுவார்கள். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101180

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 79
78. காட்டுக்குதிரை ரிதுபர்ணன் அரியணையில் அமர்ந்திருக்க அவை நடந்துகொண்டிருந்தது. தன் மீசையை நீவியபடி அவன் அவைநிகழ்வுகளை கேட்டுக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே அவன் உள்ளம் முழுமையாக அதிலிருந்து விலகிவிட்டது. அவை தொடங்கியபோது அவன் ஆர்வத்துடன் உளம்கொண்ட செய்திகள்தான் அவை. ஒரு கட்டத்தில் அதில் என்ன இயலும் என்ன இயலாதென்பது தெளிவானதுமே அவன் விலகிக்கொண்டான். ஆனால் அவையினர் அதன் பின்னரே பேசத்தொடங்கினார்கள். விதர்ப்பத்தில் குண்டினபுரியை கைப்பற்றிய ஃபீலர்களின் அரசனான பீமத்துவஜன் தந்தை பீமகரை சிறை வைத்திருந்தான். முறைப்படி முடிசூடிய பைகர் குலத்து …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101196