Daily Archive: August 8, 2017

குறளைப் பொருள்கொள்ளுதல்…
  அன்பின் ஜெ, எனக்கு ஒரு குறளின் பொருள் குறித்து ஓர் ஐயம் உள்ளது. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். – குறள் 774. இதில் பறியா என்பது எதிமறையாக வருகிறது என்றும் அதை நாம் “பறித்து” என்றே பொருள் கொள்ள வேண்டும் என்றும் யாவரும் கூறுகின்றனர். ஆனால் இது எந்த வகை இலக்கணம் என்று எங்கேயும் குறிப்பிடப் படவில்லை. கிறு கின்று ஆநின்று என்ற வகையில் இது வருவதாக ஒரு யூகம் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101208

பாரதிமணியின் திருமணம்
  அந்திமழை இதழில் பாரதி மணி எழுதிய இந்தக்கட்டுரை பலவகையான சித்திரங்களின் கலவை. எழுபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு குமரிமாவட்டத்துத் திருமணம் ஒன்று எப்படி நிகழும் என்ற சித்திரம். திருவனந்தபுரம் நாகர்கோயில் பஸ்பயணம் ஒரு நாளெல்லாம் நடக்கிறது. பத்தமடை மெத்தைப்பாய் மணமக்களுக்குரிய மதிப்புமிக்க பரிசாக இருக்கிறது [இது ஈச்சை ஓலையை மெலிதாக வகுந்து நிழலில் காயவைத்து முடையப்படுவது இரண்டு அல்லது மூன்று அடுக்காக இருக்கும்] அடுத்தது டெல்லியின் ஆடம்பரத்திருமணங்கள். பலவகையான உணவுகள். சலீல் சௌதுரி போன்ற மேதைகள் பயிற்சியளிக்கும் போட்டி …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101241

கோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்
அன்புள்ள ஜெ கோவை புத்தகச்சந்தையில் உங்களுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்தது. சிலமுறை உங்கள் உரைகளைக் கேட்டிருந்தாலும் நேரில்சந்திக்க வாய்க்கவில்லை. சந்தித்து என்னுடைய எண்ணங்கள் சிலவற்றைச் சொல்ல முடிந்ததை பெரியவிஷயம் என்றுதான் நினைக்கிறேன். எனக்கிருந்த பலவகையான குழப்பங்களை உங்கள் எழுத்துக்கள் தீர்த்துவைத்தன. மேலதிகமான கேள்விகளையும் எழுப்பின. அவை என்னை மேலும் வாசிக்கவைத்தன. அதுவரை என் வாழ்க்கையைப்பற்றி ஒரு சலிப்பைத்தான் கொண்டிருந்தேன். எதிலும் பெரிய ஈடுபாடு எழவில்லை. படித்தோம் வேலைபார்க்கிறோம் என்றுதான் இருந்தேன். அறிந்துகொள்வதன் இன்பம் என்ன என்று …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101185

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 76
75. காகத்தின் நகர் அரண்மனையை அடைந்ததும் தன்னைத் தொடர்ந்து பதற்றத்துடன் ஓடிவந்த பத்ரரிடம் புஷ்கரன் “புலரியில் நான் கலி ஆலயத்திற்குச் செல்லவேண்டும். அதற்குள் சற்று ஓய்வெடுக்கிறேன்” என்றான். அவனுடைய அந்த சீர்நடையும் நிகர்நிலையும் அவரை மேலும் பதறச் செய்தது. “செண்டுவெளிக்கு கொண்டுசெல்ல வேண்டுமா என்ன?” என்றார். அவன் மறுமொழி சொல்லாமல் தன் அறைக்கு சென்றான். ஏவலன் அவன் ஆடையைக் களைந்து இரவுக்குரிய மெல்லிய ஆடையை அணிவித்தான். மஞ்சத்தில் அமர்ந்தபடி அவன் சேடியிடம் மது கொண்டுவரச் சொன்னான். மூன்று …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101128