Daily Archive: August 5, 2017

அஞ்சலி ஹெச்.ஜி.ரசூல்
  சற்றுமுன்னர் கவிஞர் நட.சிவக்குமார் அழைத்து எழுத்தாளரும் கவிஞருமான ஹெச்.ஜி.ரசூல் இறப்படைந்த செய்தியைச் சொன்னார். வழக்கம்போல இத்தகைய செய்திகள் அளிக்கும் ஆழமான செயலின்மை. தொடர்ந்து சோர்வு. இன்னதென்றில்லாத கசப்பு.   ரசூலுக்கு சர்க்கரைநோய் நோய் இருந்தது. சிறிய உடல்நலக்குறைவுக்குப்பின் நேற்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இன்று உயிர்பிரிந்திருக்கிறது   நான் தக்கலைக்கு வருவதற்கு முன்னரே ரசூலுடன் அறிமுகமுண்டு. பொன்னீலன் அவர்களின் புதியதரிசனங்கள் நாவல் 1992 ல் வெளிவந்தபோது கலையிலக்கியப் பெருமன்றம் சார்பில் நாகர்கோயிலில் ஒரு விமர்சனக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101232

வம்சவிருட்சாவும் கோராவும் -சுசித்ரா
  “கோரா” படித்தபோது இந்தியாவிலேயே எழுதப்பட்ட சிறந்த நாவல் இதுவா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. “கோரா” என் மனதுக்கு மிக நெருக்கமான நாவல். அதில் உள்ள சமன்பாடு, மிதமை, அழகுணர்ச்சி எல்லாமே என்னை ஈர்க்கும் விஷயங்கள். இரட்டைகளால் கட்டமைக்கப்பட்ட நாவல் – கோரா x வினய், கோரா x சுசரிதா, ஆனந்தமயி x ஹரிமோஹினி, சுசரிதா x லலிதா, கோரா x கோராவின் அப்பா, பிரம்மோ x இந்து, இந்து மதம் x இந்துத்துவம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.     …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101092

எழுத்தாளன் எனும் சொல்
அன்புள்ள ஜெ,   “அன்புள்ள எழுத்தாளருக்கு” என்று நீங்கள் வாசகர் கடிதங்களில் அழைக்கப்படும்போது அது சற்றே ஒவ்வாததாகத் தோன்றுகிறது. எழுத்தாளர்கள் எப்போதிலிருந்து அவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்? கவிதை படைப்பவர்கள் கவிஞர்கள் என்று அழைக்கப்படும்போது இலக்கியம் படைப்பவர்களை அழைக்க வேறு சொல் இல்லையா? உங்கள் சொற்களில் “”..ஒரு கதை எழுதியவரும் எழுத்தாளரே. கிசுகிசு எழுதுபவரும் சினிமா விமர்சனம் எழுதுபவரும் எழுத்தாளரே..” (இலக்கியத்தை எடுத்துச்செல்லுதல்). தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.   அன்புடன் பாலகிருஷ்ணன், சென்னை   அன்புள்ள பாலகிருஷ்ணன்   ஓர் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101081

ஒளியேற்றியவர்
மேகலாயா மாநிலத்தின் மலைப்பகுதிகளில் ஒளியேற்றிய தமிழ் அதிகாரி அன்பின் ஜெ, இன்று எதேச்சையாக இக்கட்டுரையை காண நேர்ந்தது. இருமுறை கடந்து சென்றபின் தெரிந்த முகம் என உறைத்து படித்து பார்த்தேன். மேகாலயாவின் தொலைதூர மலைப்பகுதியை நமது குழும நண்பர் (உயர்ந்த மனிதர்) ராம்குமார் IAS அவர்கள் அம்மக்களின் பங்களிப்போடு ஒளியேற்றிய கதை. ஒரு நாளில் பல செய்தி கட்டுரைகளை கடந்து செல்கிறோம். பெரும்பாலும் எதுவும் கவனத்திலோ நினைவிலோ நிற்பதில்லை. ஆனால் இக்கட்டுரையில் சில எளிய தகவல்கள் மற்றும் அனுபவங்கள் வழியே அந்நிலத்திற்கு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101192

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 73
72. ஆடியிலெழுபவன் கீசகன் அணிபுனைந்துகொண்டிருந்தபோது பிரீதை வந்திருப்பதை காவலன் அறிவித்தான். அவன் கைகாட்ட அணியரும் ஏவலரும் தலைவணங்கி வெளியே சென்றனர். உள்ளே வந்து வணங்கிய பிரீதை “அவளும் அணிபுனைந்துகொண்டிருக்கிறாள்” என்றாள். கீசகன் புன்னகையுடன் “நன்று” என்றான். “அவள் கோரிய அனைத்தும் அளிக்கப்படும் என்று மீண்டும் நான் சொன்னதாக சொல்…” பிரீதை பேசாமல் நின்றாள். “என்ன?” என்றான் கீசகன். “அவள் கோருவன எளியவை அல்ல. தாங்கள் அவற்றை உய்த்துணர்ந்திருக்கிறீர்களா என ஐயுறுகிறேன்.” கீசகன் உரக்க நகைத்து “அவள் அத்தனை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101064