Daily Archive: August 3, 2017

நீலகண்டப் பறவையைத் தேடியின் மறுபகுதிகள்…
ஜெ, நீலகண்டப்பறவையைத் தேடி இரண்டாம்பாகம் என்று ஒன்று இருக்கிறதா? அது தமிழில் வந்ததில்லையா? தமிழில் இப்போது வெளிவந்துள்ள நூலில் முதற்பாகம் முற்றும் என்றுதான் உள்ளது. செந்தில்   அன்புள்ள செந்தில், நீலகண்ட பறவையைத்தேடி முழுமையான தனி நாவல்தான். ஆனால் அதற்கு மேலும் இரு தொடர்நாவல்கள் உண்டு. நீலகண்ட் பக்கிர் கோஞ்சே, அலௌகிக் ஜலஜான், ஈஷ்வரேர் பகான் ஆகியவை முத்தொடர் நாவல்கள்.   அதீன் பந்த்யோபாத்யாய இன்றைய வங்க தேசத்தில் உள்ள பத்மா நதிக்கரையில் பிறந்தவர். அந்த இளமைபபருவ …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101035

அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’
  கற்பனாவாத எழுத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்ன? அது வெகுதூரம் தாவ முடியும் என்பதே. உணர்ச்சிகள் சார்ந்து, தத்துவ தரிசனங்கள் சார்ந்து, கவித்துவமாக அதன் தாவல்களுக்கு உயரம் அதிகம். அந்த உயரத்தை யதார்த்தவாதம் ஒருபோதும் அடைந்துவிடமுடியாது. ஆகவேதான் முற்றிலும் யதார்த்தத்தில் வேரூன்றிய ஆக்கங்களை விட ஒரு நுனியில் கற்பனாவாதத்தையும் தொட்டுக்கொள்ளும் ஆக்கங்கள் பெரிதும் விரும்ப்பபடுகின்றன – சிறந்த உதாரணம் தஸ்தயேவ்ஸ்கி. அவரது கற்பனாவாதம் மானுட உணர்வுகளையும் தரிசனங்களையும் உச்சப்படுத்தி முன்வைக்கும் விதத்தில் உள்ளது. கற்பனாவாதத்தின் இநததாவலுக்கு என்ன …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/185

ஒன்றெனில் ஒன்றேயாம்!
கோவையாசாரம்! விஷ்ணுபுரம் கிண்டிலில்… சார் வணக்கம்   ஆசாரக்கோவை பதிவை தாமதமாக இப்போதுதான் வாசிக்கிறேன். சில வருடங்களுக்கு முன் பொள்ளாச்சியிலிருந்து  கோவை சென்றிருந்த ஆய்வு மாணவியை தொலைபேசியில் அழைத்து “சங்கச்சித்திரங்கள்” வாங்கி வரச் சொன்னேன். விஜயா பதிப்பகத்திலிருந்து அவள் என்னை அழைத்து  ஜெயமோகன் அவர்கள் எழுதிய ” சங்குச்சக்கரங்கள் ”  அங்கு இல்லவே இல்லை என்கிறார்கள் என்றாள். உடன் புறப்பட்டு கல்லூரி வரும்படியும் இனி அந்த புத்தகத்தை தேடவேண்டாம்  கிடைக்காது  என்றும்சொன்னேன்   அன்புடன் லோகமாதேவி   …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101028

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 71
70. நாற்கள அவை நிழலுரு கொண்டிருந்த தமயந்தி ஒருநாள் உணவின் மணத்தால் ஈர்க்கப்பட்டு காவலர் எவரும் அறியாமல் அரண்மனை வளைவுக்குள் நுழைந்தாள். அங்கே அடுமனைப் புழக்கடையில் குவிந்திருந்த எஞ்சிய அன்னத்தை அள்ளி அள்ளி உண்டாள். புழுபோல அன்னத்தில் உடல் மூழ்க திளைத்தாள். அங்கேயே இடம் மறந்து படுத்துத் துயின்றாள். கனவில் எழுந்து நடந்து அரண்மனையின் அகத்தளத்திற்குள் நுழைந்தாள். பந்த ஒளியில் நிமிர்ந்த தலையுடன் வீசும் கைகளுடன் பேரரசியின் விழிகளுடன் சென்ற அவளை எதிர்கண்ட காவலன் ஒருவன் அரண்மனையெங்கும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101046