Daily Archive: August 2, 2017

இருவர் – கடிதங்கள்-2
i இருவர் அன்புள்ள ஜெ,   ‘இருவர்’ கட்டுரையை வாசித்தபின், நன்கு கனிந்த ஐந்து தலைமுறை பிரதிநிதிகளுடன் சில மணி நேரம் பயணித்த, பயண அனுபவத்தை அடைத்தேன்.   மாமா தூங்காத தூக்கத்தில் விழுந்து அடிபடாமல் இருக்க, தரையில் தலையணை அடுக்கிய முன்ஜாகிரதை நம்மில் தலைமுறைகளாகத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. மாமா மாமியுடன் குடும்பவிஷயமாக உரையாடுவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் சம்பவங்கள் (!?) என நினைக்கின்றேன். வாழ்க்கையில் எதற்கு என்று தெரியாமல், எதற்கும் நேரமில்லாமல் வேகமாக …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101908

கனவுகளின் மாற்றுமதிப்பு
[ 1 ] ப்ரயன் மகே எழுதிய [ Bryan Magee] எழுதிய தத்துவவாதியின் சுயவாக்குமூலம் [Confessions of a Philosopher] என்ற நூலின் தொடக்கம் சுவாரசியமானது. இளமையில் அவர் தூங்கி விழித்ததும் ஒவ்வொருநாளும் உடன் தூங்கிய அக்காவிடம் கேட்பாராம் ‘நான் நேற்று எப்போது தூங்கினேன்?’ என்று. அக்கா ஒரு விஷயத்தைச் சொல்லி அதை நான் சொல்லிக்கொண்டிருந்தபோது என்பார். இல்லை , அது எனக்குத்தெரியும், அதை நான் கேட்டேன். அதற்குபிறகு எப்போது என்பாராம். அப்படியே கடைசியாக கேட்டதைக்கூட …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/37393

யானையும் நாரையும்
  ’ஆனடோக்டர்’ அன்புள்ள ஜெமோ சார்,   சில தினங்களாக ‘ஆனடொக்டர்’ பற்றிய வேறுபட்ட அட்டைப்படங்கள்  பல விதமான உணர்ச்சியை ஒருங்கே உருவாக்குகிறது. அதை பற்றிய பல விதமான சிந்தனைகள் நடக்கும் வேளையில் பார்க்க கிடைத்த இந்த காணொளி ” https://www.youtube.com/watch?v=Kxnk7ujGmKc ” என்னை ஒரு யானையை குழந்தையை போல் எடுத்து கொஞ்ச முடியுமா என்றொரு ஏக்கத்தை நல்குகிறது   அந்தளவுக்கு யானையின் விளையாட்டும், சேட்டையும், ஒரு விதமான நக்கலுடன் கூடிய உடல் மொழி நம்மை அறியாமல் ஒரு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101026

மன்மதனின் காமம்
மன்மதன் [சிறுகதை] அன்புள்ள ஆசானுக்கு,   மன்மதன் சிறுகதையை நான்கு நாட்களுக்கு முன்பு படித்தேன் அப்பொழுது அந்த சிறுகதை அதன் விரிவை என்னால் உணரமுடியவில்லை,நேற்று வெய்யோனில் தீர்க்கதமஸ் பற்றி சூதர் படும் பாடல் பற்றி படித்தேன்.அதை பற்றி சிந்திக்கும்போது தீர்க்கதமஸ் மற்றும் மன்மதன் கதையில் வரும் ராஜுக்கும் உள்ள ஒற்றுமை புரிந்தது.   கண் இல்லாதவரின் காமம்;கண் எல்லாத்தையும் மூன்று பரிமாணத்தில் திரையிட்டு காட்டுகிறது ஆனால் பொருள் கொண்ட பிரம்மமோ பரிமாணம் அற்றது பொருளினுள் உறைவது.காமம் அது …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100990

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 70
69. ஏழரை இருள் சிறு கூத்தம்பலத்தின் வாயிலில் பிரீதை வந்துநின்று மும்முறை தலைவணங்கினாள். அவள் நிழல் தன் முன் சுவரில் அசையக் கண்டு திரும்பிப் பார்த்த திரௌபதி விழியுயர்த்தி என்ன என்றாள். கைகளால் அரசியை சந்திக்கவேண்டும் என்றாள் பிரீதை. முழவும் தண்ணுமையும் யாழும் நிறைந்திருந்த அவையில் பிறிதொன்றை நோக்கி உள்ளத்தை கொண்டுசெல்வது எதிர்காற்றில் உந்திச்செல்வது போலிருந்தது. திரௌபதி விரலால் சுதேஷ்ணையை தொட்டாள். காய்ச்சல் கொண்டதுபோல் மயங்கியிருந்த விழிகளுடன் திரும்பிய சுதேஷ்ணை புருவங்களால் என்ன என்றாள். பிரீதையை அவள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/101031