Monthly Archive: August 2017

கீழடி – நாம் பேசவேண்டியதும் பேசக்கூடாததும்

  அன்புள்ள ஜெ அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதில்லை என்ற உங்கள் எண்ணம் புரிகிறது. ஆனால் பண்பாட்டு விவாதமான கீழடி சர்ச்சைகளைப்பற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்த்தேன். அது இன்று முகநூலிலேயே பேசி முடிவெடுக்கவேண்டிய விஷயமாக ஆகிவிட்டது என்று தோன்றுகிறது. ராஜன் சீனிவாசன் அன்புள்ள ராஜன்,  நாம் நம் பண்பாட்டு அடையாளங்களைக்குறித்தும் தொல்லியல் தடங்களைப்பற்றியும் எந்த அக்கறையுமில்லாதவர்கள். நம் பெரும் சொத்து என்று சொல்லப்படத்க்க கலைச்சின்னங்களும் தொல்லியல் தடங்களும் கேட்பாரற்று அழியவிடப்பட்டிருக்கின்றன. மாபெரும் பண்பாட்டுக் கலைச்சின்னங்கள் புறக்கணிக்கப்பட்டும் திருப்பணி என்றபேரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101874

வங்கடை கடிதங்கள்

வங்கடை அன்புள்ள ஜெயமோகன்,     முருங்கைக்காய் வங்கடை குழம்பின் வாசமும் , மீன் வறுவலும் நாகர்கோவிலில் துவங்கி உலகம் முழுவதும் பரவி தெறிக்க விட்டுவிட்டீர்கள். உங்கள் கட்டுரைகளில் மீன் சமையல் பற்றிய வர்ணனைகள் வரும்பொழுதெல்லாம் மீன் பிரியர்களுக்கு நிச்சயம் நாக்கு சப்பு கொட்டும். சமீபத்தில் நெத்திலி மீனை வாங்கி வந்து தலையை ஆய்ந்து நீங்களே சமைத்ததாக எழுதியிருந்தீர்கள். சைவமான சுந்தர ராமசாமி ஒரு ஆட்டோ டிரைவர் வீட்டில் மீன் உண்டதை பதிவு செய்துள்ளீர்கள். கோதாவரி மீன்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101900

இவர்கள் இருந்தார்கள் -கடிதங்கள்

  அன்புள்ள ஆசிரியருக்கு,   தங்களின் “இவர்கள் இருந்தார்கள்” வாசித்தேன். மிக அருமையான பதிவுகள். இவற்றில் சிலவற்றை  உங்களின் தளத்தில் வாசித்துள்ளேன். ஒவ்வொரு பதிவும் ஒரு சிறுகதை போல இருந்தது. அதுவும் கடைசியாக தங்களின் இரண்டு மூன்று வரிகளின் அந்த மனிதர்களின் மொத்த பிம்பத்தையும் அளிப்பதாய் இருந்ததது. குறிப்பாக இந்த புத்தகம் தங்களின் புறப்பாடு, அறம் சிறுகதை தொகுப்பு, சுரா  நினைவின் நதியில், லோகி போன்ற புத்தகத்தின் தொடர்ச்சி போலவே அமைந்தது. யாரேனும் தங்களை பற்றி புரிந்து கொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101751

ஈர்ப்பதும் நிலைப்பதும்

பிரைமரி காம்ப்ளெக்ஸ். சுரேஷ் பிரதீப் எழுதிய இந்தக்கதையை சற்றுமுன் படித்தேன். பிரைமரி காம்ப்ளெக்ஸ். அந்த தலைப்பில் உள்ளது கதையின் முடிச்சு. அந்த சிக்கலைக் கடப்பது கதை மோசமான கதை அல்ல. நல்ல கதை என்றுகூட சில வாசகர்களுக்குத் தோன்றலாம். ஏனென்றால் இளமையனுபவங்களுடன் இணைந்து எழும் எழுத்து பொதுவாக வாசகர்களுக்குப் பிடிக்கும். அவர்கள் கதையுடன் தொடர்புகொள்ள முடியும்   ஆனால் இருவினாக்களை இளம் எழுத்தாளர்கள் எழுப்பிக்கொள்ளவேண்டும். ஒன்று, அக்கதையை எழுதுவதனால் ஆசிரியராக அவர் கண்டடைவது என்ன, முன்னர்கவது எவ்வாறு? இரண்டு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101893

இடிதாங்கி

  இடிதாங்கி இடிதாங்கி என்னும் நிலையில் இருந்து உயர்ந்து ”அதிகார மையமாக” மாறிக்கொண்டிருக்கிறேன் என தோன்றுகிறது. கடந்த ஆறு மாதமாக நான் உங்களை சந்திக்காமல் தவிர்க்க வைத்த எண்கள் மட்டுமே ஒரு இருபது தேறும். இவர்களில் மூன்று வகையறா முக்கியமானவர்கள். முதல் வகையறா உங்களை சந்தித்து [வழி அறியாமல் சற்றே தடுமாறிக் கொண்டிருக்கும் உங்களை] மிக சரியான வழிகளை எடுத்து இயம்பி தமிழ் தேசியராக,அல்லது இந்துத்துவராக ,அல்லது காந்தியராக உங்களை உயர்த்தும் உத்வேகம் கொண்டவர்கள்.  இவர்கள் அனைவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101182

உச்சவழு -கடிதங்கள்

  அன்பு ஜெமோ, உச்சவழு படித்தேன். இலைமேல் தவித்தாடிய துளி ஒன்று மெல்ல வழுக்கிச்சென்று , சேர்ந்தனைக்க வரும் கடலில், கருவில் சென்றடையும் சித்திரத்தை அடைந்தேன். பிறப்புக்கு எதிர்நிலை; ஆனால் கருவில் சென்றுசேர்வதால் அதுவும் ஒரு பிறப்பே. ஒருவகையில் உச்சவழு, வான்காவின் புகழ்பெற்ற ஸ்டார்ரி நைட் ஓவியமேதான். அற்புதங்கள் நிறைந்த வான்வெளி; நேரெதிராக சலிப்பூட்டும் நகர்வெளி. இரண்டையும் இணைத்து, நகரத்தை விண்மீன்களிடம் சேர்ப்பது இறப்பைக்குறிக்கும் சைப்ரஸ் புதர்கள் மட்டுமே. சிறந்த வாசிப்பனுபவம். நன்றி! அன்புடன், ராஜன் சோமசுந்தரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101416

வரையறைகள் பற்றி..

ஜெ இடங்கை இலக்கியம் வாசித்தேன், நீங்கள் இலக்கியம் குறித்த உரையாடல்களில் வரையறைகளை அளிக்க முயல்வதைப்பற்றி ஒரு பேச்சு எங்களுக்குள் ஓடியது. [நாவல் என்றால் என்ன? முற்போக்கு இலக்கியம் என்றால் என்ன?] இப்படி வரையறைசெய்யலாமா, இதை நாம் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் பேச்சு எழுந்தது. வரையறைசெய்வது சரியா என்று கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் நீங்கள் வரையறை செய்து சொன்னதுமே ஒரு வரையறை மீறலையும் சொல்லிவிடுகிறீர்கள். முற்போக்கு இலக்கியம் என்ற உங்கள் கட்டுரையின் வரையறையை வைத்துப்பார்த்தால் உள்ளடக்கம் அல்லது பார்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101202

கழிவின் ஈர்ப்பு

மலம் – சிறுகதை கழிவின் ஈர்ப்பு, மந்தணம் பொதிந்து நாசியில் சுழல்கிறது. இது நான்! நான்! என அகம் கொப்பளிக்கும் பொழுது அதன் வழு வழுப்பில், மஞ்சள் குமிழும் தோல் நிறத்தில், சொத சொதப்பாய் வெண்மையில் படிந்த திட்டுக்களிலுமிருந்து அருவருப்பு வந்து கப்புகிறது. என் குதம் வழி அடையும் சுகத்தில் லயிக்க முனையும் போதே துர் நாற்றத்தின் ரகசிய கூர் உகிர்கள் நெறிக்கிறது. பின் கழுவுவதற்கு என் விரல்களால் தொடுகையில் நுனிகள் கூசி நடுங்குகிறது. அன்றாடச் செயலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101482

கைவிடப்படும் மரபு

அன்புள்ள ஜெயமோகன், \\\இந்தியாவிலுள்ள பௌத்த, சமணத்தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் சிறப்பாகவே பேணப்படுகின்றன. அங்கு சுத்தமும் அழகும் தெரியும். முக்கியமான காரணம் பௌத்த சமணத்தலங்களில் பெருந்திரளாக மக்கள் வழிபடுவதில்லை என்பது. இன்னொன்று அவை மத்தியத் தொல்பொருள்துறையாலும் யுனெஸ்கோவாலும் பேணப்படுகின்றன/// இருதீவுகள், ஒன்பது நாட்கள் என்ற உங்களது பயணக்கட்டுரைத் தொடரில், நீங்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தீர்கள். இதில், தமிழகம் தவிர என்று சொல்லியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. சமீபத்தில் குளித்தலை அருகேயுள்ள சத்தியமங்கலம் என்ற இடத்தில் அமைந்துள்ள குண்டாங்கல் பாறை என்ற கி.பி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101176

வெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97

96. கைச்சிறுகோல் உபப்பிலாவ்யத்தின் கோட்டையை பாண்டவர்களின் தேர் சென்றடைந்தபோது கோட்டை முகப்பிலேயே அதன் தலைவன் சார்த்தூலன் அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். அவனுடன் கங்கைநீருடன் அந்தணர் எழுவரும் அங்கிருந்த எண்வகைக் குடிகளின் தலைவர்களும் நின்றனர். உபப்பிலாவ்ய நகரியின் குருவிக்கொடியும் விராடநகரியின் காகக்கொடியும் இரு பக்கமும் பறக்க நடுவே இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர்க்கொடி ஏற்றப்பட்டிருந்தது. தொலைவில் பாண்டவர்களின் மின்கதிர்க்கொடி எழுந்ததுமே கோட்டைமேல் முரசுகள் முழங்கத் தொடங்கின. நகரம் வாழ்த்தொலிகளால் முழங்கியது. முதலில் விராடபுரியின் கவசக் காவலர் பன்னிருவர் புரவிகளில் வந்தனர். தொடர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/101739

Older posts «