Daily Archive: July 29, 2017

பெயர்கள்
  தெரிந்த பெண் கைக்குழந்தையுடன் அருகே வந்தபோது ”ஜூஜூஜூ ….”என்று அதன் கன்னத்தைத் தட்டி குட்டிக்கன்னம் உப்ப முறைக்கபப்ட்ட பின் அவளிடம் ”பிள்ளை பேரென்ன?” என்றேன். ”பாகுலேயன் பிள்ளை” என்றாள். ஒருகணம் முதுகெலும்பில் ஒரு தொடுகை. அப்பாவை நான் அந்நிலையில் எதிர்பார்க்கவில்லை. கன்னத்தைவேறு தட்டிவிட்டேன். ”…போய் சோலிமயிரைப் பாருடா…நாயுடே மோனே” என்று கனத்த குரலில் எக்கணமும் அது சொல்லக்கூடும் என்று தோன்றியது. ”என்னத்துக்கு இந்த மாதிரி பேரெல்லாம்?”என்றேன். ”என்ன செய்ய? இது அவருக்க அப்பா பேரு. கேக்க …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/307

விஷ்ணுபுரம் கிண்டிலில்…
ஜெ, வணக்கம். சற்றுமுன் விஜய் தொலைக்காட்சியில் அமேசான் இணையதளத்தில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதற்கான விளம்பரம்… விமான நிலையத்திற்க்கு அவசரமாக கிளம்பும் நபர் “விஷ்ணுபுரம் நாவல் எங்கப்பா??..” என்று மனைவியிடமும் மகளிடமும் கேட்கிறார். புத்தகங்களின் வரிசை காண்பிக்கப்படுகிறது. முதலில் பொன்னியின் செல்வன் அடுத்து விஷ்ணுபுரம்(தற்போதைய கிழக்கு பதிப்பின் அட்டை)…. விளம்பரத்தை பார்க்கையில் என்னையறியாமல் சத்தம்போட்டு கூவி கைதட்டினேன்… இது அமேசான் கிண்டில் இந்தியாவின் விளம்பரம். தொலைக்காட்சி விளம்பரம் மட்டுமன்றி இன்று (28-ஜீலை) யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது… -யோகேஸ்வரன் ராமநாதன். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100888

கோவை புத்தகக் கண்காட்சி- கடிதங்கள்
  அன்புள்ள ஜெ, கோவை புத்தகக் கண்காட்சியில் உங்களைப் பார்த்தது மிகுந்த நிறைவை அளித்தது. அதிலிருந்த உங்கள் புகைப்படம் அருமை. சிலகாலம் முன்பு எடுத்தது என நினைக்கிறேன். உங்கள் முகத்திலிருந்த தீவிர அபாரமானது. நான் உங்கள் நூல்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டேன். இனிமேல்தான் பெரிய நாவல்களை வாசிக்க ஆரம்பிக்கவேண்டும் மகேஷ் மாதவன் *** அன்புள்ள மகேஷ் அந்தப்படம் நான்காண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையில் எஸ்.கே.பி. கருணாவின் கல்லூரிக்குள் உள்ள விருந்தினர் மாளிகையின் வராந்தாவில் மாத்ருபூமி நிருபரால் எடுக்கப்பட்டது என நினைவு …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100882

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66
65. துயிலரசி அரச நெடும்பாதையின் ஓரத்தில் காட்டுக்குள் நுழையும் முதல் ஊடுவழி கண்ணுக்குப் பட்டதுமே தமயந்தி நளனை கைதொட்டு அழைத்தபடி அதற்குள் நுழைந்துவிட்டாள். மரங்களுக்கு ஊடாக நிஷதபுரியின் கோட்டைக் காவல் மாடங்களின் முகடுகள் தெரிந்தன. கோட்டையைச் சூழ்ந்துள்ள ஆயர்பாடிகளில் இருந்து காளைகளை காட்டிற்குள் கொண்டு செல்லும் பாதை அது என குளம்படிச் சுவடுகளும், உலர்ந்தும் பசியதாயும் சேற்றுடன் சேர்ந்து மிதிபட்டுக் குழம்பியதுமான சாணியும் காட்டின. தொலைவில் கோட்டையிலிருந்து கொம்பொலி எழுந்தது. ஒரு பறவை சிறகடித்தெழுந்து இலைகளுக்குள்ளேயே பறந்தகன்றது. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100897