Daily Archive: July 22, 2017

கோவை புத்தகக் கண்காட்சி,விருதுவழங்கும் விழா
இன்று காலை கோவை வந்து சேர்ந்தேன். ரயிலில் மேல் படுக்கையில் டிஷர்ட்டில் பணத்தையெல்லாம் வைத்துக்கொண்டு அசந்து தூங்கி அதில் பலவகையில் உருண்டு புரண்டு காலையில் எழுந்து தொற்றி இறங்கி போர்வையை இழுத்தால் கீழே இருந்த கவுண்டர் மீது ரூபாய் நோட்டுகள் கொட்டின. “ஏனுங் பணமழையா கொட்டுதுங்?” என்றார். அவரே பொறுக்கி என்னிடம் அளித்து “மேலே இன்னும் பணம் காய்ச்சிருக்குங்களா?” என்றார். வரவேற்க புத்தகக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜனும் நண்பர்கள் கதிர்முருகனும் விஜய் சூரியனும் வந்திருந்தார்கள். அறைக்கு வந்து …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100729

ரஹ்மான்,மொழிப்பூசல்
அன்புள்ள ஜெ ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் இந்திக்காரர்கள் தமிழ்ப்பாட்டு பாடியபோது எதிர்ப்பு தெரிவித்து எழுந்துசென்ற மொழிவெறியை எப்படிப்பார்க்கிறீர்கள்? இதைக்கண்டித்து மொழிவெறிக்கு எதிராக நிறையபேர் எழுதிவிட்டார்கள். உங்கள் கருத்து என்ன? ஆர். மணிமாறன் *** அன்புள்ள மணிமாறன், பொதுவாக இசைநிகழ்ச்சிகளில் ஒன்றை கவனித்திருக்கிறேன், ஏற்கனவே தெரிந்த பாடல்களைத்தான் சாமானியர்களால் ரசிக்கமுடியும். என்னையும் சேர்த்தே சொல்கிறேன். அந்தப்பாடல்கள் சினிமாக்காட்சிகளுடன் இணைந்து, நடிகர்களுடன் இணைந்து, வாழ்க்கையில் அப்பாடல் ஒலித்த பல தருணங்களுடன் இணைந்து நினைவில் எழுவதையே அவர்கள் ரசிக்கிறார்கள். இசையை மட்டுமே ரசிப்பவர்கள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100605

ASYMPTOTE பரிசு -கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். பெரியம்மாவின் சொற்கள் சிறுகதை மொழியாக்கம் பெற்ற ASYMPTOTE  இலக்கிய இதழ் விருதினை பற்றி உங்கள் தளத்தில் அறிந்தேன். திரைப்படம் எடுப்பது தொடர்பான திரைப்படங்கள் பல உண்டு. எழுத்தாளர் கதை எழுதுவது பற்றிய கதைகளும் உண்டு. பெரியம்மாவின் சொற்கள் போன்ற மொழியாக்கம் பற்றிய கதை வேறு எங்கும் வாசித்ததில்லை. சுசித்ராவால் இந்த தனித்துவமான கதையை மொழியாக்கம் எப்படி செய்ய முடிந்தது என எண்ண ஆச்சரியமாக இருந்தது. விருது …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100686

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59
58. நிலைபேறு சூதரங்கு மிக எளிமையாக அமைக்கப்பட்டிருந்தது. அரண்மனையிலிருந்த நீள்வட்டமான உணவுக்கூடத்தின் நடுவே சிறிய மரமேடை போடப்பட்டு அதில் சூதுக்களம் ஒருக்கப்பட்டிருந்தது. இரு பக்கமும் தாழ்வான இருக்கைகள். சூதுக்காய்களை வைப்பதற்கான பீடங்கள் வலக்கை அருகே. இடக்கையருகே ஆட்டத்துணைவனுக்கான பீடம். அதை நோக்குபவர்கள் அமர்வதற்காக வட்டமாக பீடங்கள் போடப்பட்டிருந்தன. நான்கு வாயில்களிலும் காவலர் நின்றனர். காலையிலேயே ஆட்டம் குறிக்கப்பட்டிருந்தது. அரண்மனைக்கு வெளியே களமுற்றத்தில் மிகப் பெரிய ஆட்டக்களம் ஒன்று உள்ளிருப்பதன் அதே வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது. அதில் யானை, குதிரை, …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100650