Daily Archive: July 18, 2017

கோவை புத்தகக் கண்காட்சி- இலக்கிய உரையாடல்கள்
  கோவை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இலக்கிய உரையாடல்களை நிகழ்த்தவேண்டும் என்று அமைப்பாளர்கள் திட்டமிட்டார்கள். வழக்கமாக புத்தகக் கண்காட்சிகளில் மிகப்பிரபலமான சொற்பொழிவாளர்களின் உரைகள் அமைக்கப்படும். அதற்கு தனி கூட்டம் உண்டு. ஆனால் அவர்களில் கணிசமானவர்கள் நூல்களுடன் சம்பந்தமற்றவர்கள். புத்தகக் கண்காட்சியை எட்டிக்கூட பார்க்காதவர்கள் அவர்களில் மிகுதி. கோவையில் இலக்கிய உரையாடல்களாக அந்நிகழ்ச்சி அமையவேண்டும் என எண்ணியிருக்கிறார்கள். ஆகவே பெரிய பேச்சாளர்கள் இலக்கியவாதிகள் என ஒரு கலவையாக, அனைத்துத் தரப்பினருக்கும் உகந்த முறையில் உரையாடலை ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். தமிழின் முக்கியமான …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100552

பக்திப்பெருக்கு
ஞாயிற்றுக்கிழமை காலையின் சோதனைகளில் ஒன்று சொர்க்கத்தைக் கூவி அழைக்கும் குரல்கள். திடுக்கிட்டு அரைத்தூக்கத்தில் எழுந்து அமர்ந்தால் நியாயத்தீர்ப்புநாள்தான் வந்துவிட்டதோ என்ற பீதி ஏற்படும். எழுதிக்குவித்த  எழுத்துக்கு என்னை லூசிபரிடம் ஏசுவே அழைத்துக்கொடுத்து  ‘கூட்டிட்டு ஓடீரு கேட்டியாலே?” என்றுதானே சொல்வார். எங்கள் வீட்டைச்சூழ்ந்து இருபதுக்கும் மேற்பட்ட கிறித்தவ தேவாலயங்கள். ஆகவே ஏசுவைப்பற்றியும் பரமண்டலத்திலிருக்கும் பரமபிதாவைப்பற்றியும் நான் எண்ணிக்கொண்டே இருக்கிறேன். எண்ணாமல் விடமாட்டார்கள். ஒவ்வொரு தேவாலயமும் மணிக்கொருதரம் பைபிள் வசனத்தை மணியோசையுடன் சொல்கின்றனர். இதற்கென்றே ஒரு ‘ஆப்’ உள்ளது. இனிய, …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100563

இச்சையின் சிற்றோடைகள்
இனிய ஜெயம், அன்று பவாவின் கதை கேட்கலாம் வாங்க நிகழ்வில் இருந்தேன். ராஜேந்திர சோழன் கதைகள் அன்று பவாவின் தேர்வாக இருந்தது. ரா சோ வின் கதைகளில் உயிர்த்துடிப்பு துலங்கும் கணங்களை அழகாக தொட்டெடுத்து கதை சொன்னார். நிகழ்வின் இறுதியில் என்னை ரா சோ கதைகள் குறித்து சில வார்த்தைகள் பேச அழைத்தார். நான் மறுத்துவிட்டேன். காரணம் அக் கதைகளுக்குப் பிறகு நான் அதுவரை என்னுள் முகிழ்ந்திருந்த ஒரு அமைதி சிதறப்பெற்றவனாக ஆகி இருந்தேன். மிகுந்த தத்தளிப்பில் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100425

இடங்கை இலக்கியம் -கடிதங்கள்
ஜெ, நேற்று நண்பர்சந்திப்பில் உங்கள் இடங்கை இலக்கியம் பற்றி பேச்சுவந்தது. முழுக்க முழுக்க ஒரே விஷயத்தைச் சுற்றிச்சுற்றியே வந்தது பேச்சு. இடதுசாரி எழுத்து என்று சொல்லாமல் ஏன் இடங்கை இலக்கியம் என்று சொல்லவேண்டும்? இதில் அரசியல் உள்ளது- இவ்வளவுதான். அப்புறம் சில விடுபடல்களைப் பற்றிய ஒற்றைவரிகள்.ஆச்சரியமாக இருந்தது. மனோகர் *** அன்புள்ள மனோ, இத்தகைய ஒரு முன்வரைவை யார் போட்டிருந்தாலும் அதில் விடுபடல்கள் இருக்கும். மறுபரிசீலனைகள் இருக்கும். அவற்றை விவாதம் மூலம் செழுமைசெய்தே ஒரு துல்லியமான சித்திரத்தை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100594

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55
54. பரிஎழுகை சதகர்ணிகளின் அமைச்சர் சுமத்ரர் எண்ணியதுபோலவே அனைத்தும் முன்சென்றன. ஓரிரு நாட்களுக்குள்ளாகவே பேரரசி தமயந்தி அஸ்வமேதம் நிகழ்த்தவிருப்பதாக உளவுச் செய்தி வந்தது. நிஷதபுரியின் அவையில் அதைப்பற்றி அவள் பேசியபோது கருணாகரர் மட்டும் தயக்கத்துடன் “இன்றைய சூழலில் பிற அரசர்கள் அதற்கு ஒத்துழைப்பார்களா என்று தெரியவில்லை. அவர்கள் மோதவேண்டுமென எண்ணினால் நாம் எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இல்லை. நம் குலங்கள் பிரிந்துள்ளன. இளையவர் உள்ளமாறுபாடு கொண்டிருக்கிறார்” என்றார். தமயந்தி உறுதியுடன் “ஆம், அதை நான் எண்ணினேன். ஆனால் இப்போது …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100514

கோவை புத்தகக் கண்காட்சி – ஜெயமோகன் அரங்கு
கோவை புத்தகத் திருவிழா வரும் ஜூலை 21 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இலக்கியச் சாதனையாளர் விருது ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனையொட்டி கோவை புத்தகத் திருவிழாவில் ஜெயமோகன் ஆக்கங்களுக்காக ஒரு பிரத்யேக ஸ்டால் அமைக்கப்படுகிறது. ஜெயமோகனின் அனைத்து நூல்களும் கூடவே இலங்கை, சிங்கப்பூர், மலேசியா எழுத்தாளர்களின் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட இருக்கிறது. ஜெயமோகன் தளத்தில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய இலக்கிய நூல்களும் கிடைக்கும். திருக்குறள் அரசியும், கடலூர் சீனுவும் இந்த முயற்சியை முன்னெடுக்கிறார்கள்.  கொடிசீயா B …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/100614